Published:Updated:

''ஜெயின் கமிஷன் அறிக்கையே ஒரு துரதிர்ஷ்டம்!''

ப.சிதம்பரம் பேட்டி

''ஜெயின் கமிஷன் அறிக்கையே ஒரு துரதிர்ஷ்டம்!''
 ##~##
''நி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தியமைச்சர் என்ற முறையில், நான் போட்ட பட்ஜெட் உடனே பலன் தராது என்றாலும், அதன் பலன் போகப் போகத்தான் தெரியும். நான் விதைத்திருப்பது தினை என்பது நிச்சயம். எனவே, நான் அறுவடை செய்வதும் தினையாகத்தான் இருக்கும்.

பணப் புழக்கம் குறைந்து உள்ளது என்கி றார்கள். இதுவும் ஆரோக் கியமானதுதான். பணப் புழக்கத்தை அதிகரிப்பது என்பது மிகச் சுலபம். நாசிக்கில் அதிகமாக அச்ச டித்து வெளியே விட்டால், பணப் புழக்கம் அதிகரிக் கும். அதைத் தொடர்ந்து விலைவாசி கூடும். இப்போது பணப் புழக்கம் குறைந்து உள்ளது. விலைவாசியும் கட்டுக்குள் உள்ளது!''

-புள்ளிவிவரங்களை அடுக்கிக்கொண்டு இருந்தவரிடம் கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில் களும்...

''ஜெயின் கமிஷன் அறிக்கையே ஒரு துரதிர்ஷ்டம்!''

''மத்தியில் கூட்டணி ஆட்சி என்பது சரியாக இருக்குமா? ஐக்கிய முன்னணி ஆட்சி என்பதுகூட ஒன்றரை ஆண்டுகள்தானே நடந்தது?''

''உண்மையான கூட்டணி ஆட்சி என்பது, மத்தியில் இப்போது அமைந்ததே... அதுதான்! 1997-லும் 1989-லும் நடந்தது கூட்டணி ஆட்சி அல்ல. பல கட்சிகள் ஒரு கட்சியில் இணைந்து 'மெர்ஜ்’ ஆகி நடத்தியது. இந்தக் கூட்டணி ஆட்சி வெற்றியா, தோல்வியா என்பது நியாயமான கேள்வியே! சில நெறிகளை வைத்துப் பார்க்கும்போது, வெற்றி என்பதற்கு அடையாளம் - பல கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் - உயர் மட்டத்தில் ஊழல் புகார் என்பதே இந்த 18 மாதங்களில் இல்லை. அடுத்து, மாநிலக் கட்சிகளும் மாநிலத் தலைவர்களும் மத்திய அரசை வழிநடத்திச் செல்ல முடியும் என்பதை இது நிரூபித்திருக்கிறது. மூன்றாவது வெற்றி - ஒவ்வொரு கட்சிக்கும் தனித் தனியே கொள்கைகள் இருந்தபோதிலும், குறைந்தபட்ச வேலைத் திட்டத் தைப் பெருமளவு நிறைவேற்ற முடியும் என்பதைக் காட்டிஇருக்கிறது. புதுமையான, புரட்சி கரமான, கடினமான முடிவுகளை எடுக்க முடியும் என்று நிரூபித்ததும் கூட்டணி ஆட்சியின் வெற்றி!''

''கூட்டணி ஆட்சியால் நிலையான ஆட்சி தர முடியுமா?''

''நிலையான ஆட்சியைவிட நல்லாட்சியே முக்கியம். நிச்சய மாக நல்ல, திறமையான ஆட்சி யைத் தர முடியும். இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியின் ஐந்து ஆண்டு கால நிலையான ஆட்சி யைப் பார்த்தோம். அந்த நிலை யான ஆட்சியைவிட, 18 மாதக் கூட்டணி ஆட்சி சாதித்தவை அதிகம்.

நிலையான ஆட்சி என்கிற பெயரில், Stagnant Government தேக்க நிலையில் உள்ள ஆட்சியைத்தான் காங்கிரஸால் தர முடிந்தது. அதன் கடைசி இரண்டு வருடங்கள் ஒரே தேக்க நிலை!

நரசிம்ம ராவ் தலைமையிலான அந்த ஆட்சியில், அனுமதித்த அந்நிய முதலீடு 71 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், 18 மாத ஐக்கிய முன்னணி ஆட்சியில் 71,200 கோடி ரூபாய்!

ஆகவே, கூட்டணி ஆட்சியால் வெளி நாட்டு முதலீடு வராமல் போய்விடவில்லை!''

''காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற்றதற்கு உண்மைக் காரணம் என்ன?''

''ஜெயின் கமிஷன் அறிக்கை உண்மைக் காரணம் அல்ல... அது ஒரு சாக்குதான்! அவர்கள் 18 மாதமாக ஆட்சியில் இல்லை. உள்ளே வர ஆசை. அதே சமயம், அச்சம்... இன்னொரு கட்சியின் தலைமையில் இயங்கத் தயக்கம். ஆசைக்கும் தயக்கத்துக்கும் இடையே நடந்த போட்டி அது! அதனால்தான் காங்கிரஸ் ஆதரவு வாபஸ் பெற்றது.

ஜெயின் கமிஷன் அறிக்கையை வெறும் சாக்காக காங்கிரஸ் பயன்படுத்தியது என்று எப்படிச் சொல்லலாம் எனக் கேட்கலாம். ஆட்சியைக் கவிழ்த்த மறுநாளே, சீதாராம் கேசரி கூறினார் - 'அடுத்த தேர்தலில் ஜெயின் கமிஷன் அறிக்கையை வைக்க மாட்டோம்! இது எப்படிஇருக்கு?''

''ஜெயின் கமிஷன் அறிக்கையைப்பற்றி உங்கள் கருத்து என்ன?''

''சட்டத்தை அறிந்தவர்கள், அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நுணுக்கமாக உணர்ந்தவர்கள் அனைவருமே ஜெயின் கமிஷன் அறிக்கையைப் பெரிதாக மதிக்கவில்லை. அந்த அறிக்கையே ஒரு துரதிர்ஷ்டம்! அது மட்டுமின்றி, நீதிபதியின் அறிக்கை இவ்வளவு சர்ச்சையைக் கிளப்பியது - நீதிபதிக்கே ஒரு துரதிர்ஷ்டம்!

தமிழர்கள் பற்றிக் குறிப் பிட்டதை ஒரு முறை அல்ல, பல முறை படித்துப் பார்த்தேன். ஆழ்ந்து சிந்திக்காமல், விளைவுகளைப்பற்றி யோசிக்காமல், அவசரத்தில் எழுதப்பட்ட வாக்கியம் அது. ஒரு நீதிபதியின் அறிக்கையில் இதுபோன்று வந்தது துரதிர்ஷ்டம்! ஒட்டுமொத்தமாகத் தமிழர்களைப் பழித்து ஒரு வாக்கியம் வந்துஇருப்பதுபோல, அந்த அறிக்கை யில் ஒட்டுமொத்தமாகச் சீக்கியர்களைப் பழித்தும் ஒரு வாக்கியம் இருக்கிறது.''

''ஜெயின் கமிஷன் அறிக்கையே ஒரு துரதிர்ஷ்டம்!''

''பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் சிதறி அழிவது என்பது நாட்டுக்கு நல்லதாகத் தோன்றவில்லையே... த.மா.கா. மீண்டும் இணைந்து காங்கிர ஸைப் பலப்படுத்துமா?''

''காங்கிரஸுக்குச் சமீபகாலத்தில் ஏற்பட்டுள்ளது ஓர் இமாலய வீழ்ச்சியே. தேசத்துக்கே ஒரு சோதனை. இனி, காங்கிரஸ் தன்னை ஒரு சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் தன்னுடைய கட்சி அமைப்பு விதிகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். கட்சிக்குள் உண்மையான தேர்தல் நடந்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைமை அமைய வேண்டும். இவற்றையெல்லாம் காங்கிரஸ் என்றைக்குச் செய்கிறதோ, அப்போது மீண்டும் பலம்பெறும்!''

''தி.மு.க. ஆளும் கட்சியாக வந்த பிறகு, நடக்கப்போகும் மக்களவைத் தேர்தல் இது. தி.மு.க. ஆட்சியில் திருப்தி அடையாதவர்கள், இம்முறை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்களா?''

''எல்லாத் தேர்தல்களிலும், எல்லா மாநிலத்திலும் ஓரளவு Anti Establishment  ஓட்டு இருக்கவே செய்யும். எல்லா நாடுகளுக்குமே இது பொருந்தும். ஆனால், வாக்குப் பதிவு நாளன்று, அந்த உணர்வுதான் தூக்கலாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அன்று, 'எதிர்காலத்தை எண்ணி எடை போட்டு’ மக்கள் வாக்களிப்பார்கள். அ.தி.மு.க -வுக்கு எதிராக மக்கள் ஓட்டுப் போட்டதுகூட, 'எதிர்காலத்தில் ஊழல் கூடாது’ என்ற எண்ணத் தில்தான்!''

- நமது நிருபர்