Published:Updated:

ரஜினியுடன் சரவெடி அதிரடி!

ரஜினியுடன் சரவெடி அதிரடி!

ரஜினியுடன் சரவெடி அதிரடி!

ரஜினியுடன் சரவெடி அதிரடி!

Published:Updated:
ரஜினியுடன் சரவெடி அதிரடி!
 ##~##

டிசம்பர் 6.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஐந்து நிமிடங்கள் தருகிறேன்... என்ன கேட்கப் போகிறீர்கள்?'' என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

''நீங்கள் கண்டக்டராகப் பணியாற்றிய பஸ் நம்பர்?''

''10-A''

''மேடை நாடகத்தில் நடித்து இருக்கிறீர்களா?''

''துரியோதனனாக!''

'' 'முள்ளும் மலரும்’, 'ஆறிலிருந்து அறுபது வரை’, 'புவனா ஒரு கேள்விக்குறி’ போல, ஏன் இப்போது எல்லாம் செய்யவில்லை?''

''பார்க்கலாம்!''

ரஜினியுடன் சரவெடி அதிரடி!

''திறமையை வெளிப்படுத்த முடியவில்லையே என்று வருத்தம் இல்லையா?''

''இப்பெல்லாம் பிசினஸ் பீப்பிள் ஆயிட்டோம்!''

''நீங்கள் நடிக்காத, பழைய படங்களில் எது பிடிக்கும்?''

''சில படங்கள் உண்டு. உதாரணமா, 'தில்லானா மோகனாம்பாள்’, 'வீரபாண்டிய கட்டபொம்மன்!''’

''இந்தியாவில் பிடித்த நடிகர்?''

''(மிகுந்தயோசனைக்குப் பின்) அமிதாப்பச்சன்!''

''பிடித்த நடிகை?''

''ஷப்னா அஸ்மி!''

''நெருங்கிய நண்பர்கள் யார்?''

''பஸ் கண்டக்டர்ஸ்!''

''டென்ஷனை எப்படித் தவிர்ப்பீர்கள்?''

''(மேலே கையை உயர்த்தி) கடவுளை நினைப் பேன்!''

''இத்தனை உயர்வான இடத்தில் தனிமையான உணர்வு இருக்கிறதா?''

''ஆமாம். It's always lonely at the top!''

''உங்கள் மனைவி, உங்கள் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு 'செட்’ ஆகிட்டாங்களா?''

''முதலில் சிறிது கஷ்டமாத்தான் இருந்தது. இப்ப அட்ஜஸ்ட் பண்ணி வசதியா செட்டில் ஆகிட்டாங்க!''

''உங்களிடம் உதவிப் பெற்று, யாரேனும் தப்பா உங்கள் பெயரை உபயோகித்தால்?''

''கரெக்டாக ஜட்ஜ் பண்ணி, நாமதான் புத்திசாலித்தனமா 'டீல்’ பண்ணணும்!''

ரஜினியுடன் சரவெடி அதிரடி!

''சமூகம் என்ன சொல்லுமோ என்று, எதற் காவது தயங்கியது உண்டா?''

''இல்லை... என் மனசுக்குப் பிடித்ததை... நல்லது என்று படுவதை யாருக்காகவும் கவலைப்படாமல் செய்பவன் நான்!''

''ஆதாயம் கிடைக்கும் என்றால் ஜால்ரா அடிப்பவர்கள்பற்றி?''

''பரிதாபப்படுறேன்... நான் ஒருவர் குறையை, அவர் எனக்குத் தெரிந்தவர் என்றால், முகத்துக்கு நேரேயே சொல்லிவிடுவேன்!''

'' 'படிக்காதவ’னுக்கு உங்கள் அறிவுரை?''

''நேர்மையாய் இரு!''

'''திருப்தி’ என்பது எப்போது வருகிறது? அதை நீங்கள் அடைந்தாயிற்றா?''

''ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு சமயம் வருவது, எனக்கு எப்போதோ வந்துவிட்டது!''

''ஆன்மிகத்தைத் தேடிப் போனீங்களா அல்லது தானாக வந்ததா?''

''(மிகவும் தெளிவாக) நானாகத் தேடிப் போனது!''

''வாழ்கையில் உங்கள் தத்துவம்?''

''வாழு, வாழ விடு. Live and let live!''

''பகல் கனவு காணும் பழக்கம் உண்டா?''

''வாழ்க்கையே அதுதானே!''

''எப்படி இவ்வளவு பேலன்ஸ்டு ஆக இருக் கிறீர்கள்?''

''(சிரிப்புடன்) அதனால்தான் நான் சந்தோஷமா இருக்கேன்!''

''சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற மனிதனைப்பற்றி ஒரு வரி?''

''மிகவும் எளிமையான மனிதன்!''

''முகஸ்துதி பண்ணுகிறவர்களை எப்படிச் சமாளிப்பீர்கள்?''

'' 'மிகவும் நன்றி’ என்று கைகுலுக்கி, 'பிறகு பார்க்கலாம்’ என்று அனுப்பிவிடுவேன்... (நடித்துக் காட்டினார்!)''

''நீங்கள் அழகு இல்லை என்று வருத்தமா?''

''மனசு அழகா இருந்தால் போதுமே!''

- சுஜா,  படங்கள்: நிர்மலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism