Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

சிறுவன் ஸ்ரீராம்...

தலையங்கம்

ள்ளியில் படிக்கும் சிறுவன் ஸ்ரீராம் பணத்துக்காகக் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தி உள்ளத்தை நடுங்க வைக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பில்லா, ரங்கா என்ற கல்நெஞ்சக்காரர்களால் இரு இளம் பிஞ்சுகள் டெல்லியில் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது.

கடத்தப்பட்ட சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குள்ளேயே ஸ்ரீராம் உடல் ஒரு கிணற்றிலிருந்து மீட்கப்பட்டபோதிலும், அது அந்தச் சிறுவனின் உடல்தானா என்று தீர விசாரிக்காமலேயே சென்னையிலும், வெளியூர்களிலும் சிறுவனைத் தேடிக்கொண்டிருந்தது சென்னை போலீஸ். ஒரு மாதத்துக்குப் பிறகு பிடிபட்ட கொலையாளி சொன்னதன்பேரில், அநாதை என்று புதைக்கப்பட்ட அந்த உடலை போலீஸ் மீண்டும் தோண்டி எடுத்துப் பெற்றோரிடம் ஒப்படைத்தது. என்னே நம் சென்னை போலீஸாரின் திறமை!

சாதாரணமாக எதையுமே சற்றுச் சந்தேகத்துடன் பார்ப்பதற்குத்தான் 'போலீஸ் மூளை' என்று பெயர். குறைந்தபட்சம் அந்த அளவுக்குக்கூட போலீஸ் மூளை வேலை செய்யாமல் மக்கர் ஆகிவிட்டதா?

ஒரு சிறுவன் அநியாயமாகப் பலியானதற்கும், இந்தத் திறமையற்ற அணுகு முறைக்கும் குளறுபடிகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று சென்னை போலீஸ் கமிஷனர் பதவி விலகவேண்டும்.

இதுதான் நடந்துவிட்ட பாவத்துக்கு ஓரளவு பரிகாரமாக இருக்கும்.

தலையங்கம்
தலையங்கம்