(அந்த ஃப்ளோரில், அரங்கமே அதிசயமாய், ஏதேதோ அறிவியல் ஆய்வுக்கூடம்போல் காட்சியளித்தது. ஆங்காங்கே ரோபாட்டுகள் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தன.
இயக்குநர் இம்சைராஜ், ஆர்ட் டைரக்டர் ஸீன் செட்டிங் சிங்காரம், ஒளிப்பதிவாளர் ஃபிளாஷ் லைட் பிச்சாண்டி ஆகியோர் இருக்க, கொட்டாவியும் பெருச்சாளியும் உள்ளே நுழைகின்றனர்.)
தலையில் தொப்பி மேல் தொப்பி வைத்துக்கொண்டு இருந்த ஆர்ட் டைரக்டரை நெருங்கி...
கொட்டாவி: சார், இந்தப் படத்துலே உங்க ஒர்க் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..!
ஆர்ட் டைரக்டர்: இது முழுக்க முழுக்க விஞ்ஞானப் படம்ங்கிறதால ரோபாட்டுகள்தான் நடிக்குது. அதுக் காக நான் 150 ரோபாட்டுகளைச் செஞ்சேன். ஒரு ரோபாட் செய்ய லட்ச ரூபா ஆச்சு. ஏன்னா... அது நடக்கும், ஓடும், குதிக்கும், ஆடும், பாடும். இப்படி எல்லா வேலையும் தானே இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யும்.
பெருச்சாளி: சார்! நம்ம படத்துலே கதாநாயகன்- கதாநாயகி ரோபாட்டுகள் ரெண்டும் ரொம்ப அழகா இருக்குமே! நாங்க பார்க்க லாமா சார்?
ஆர்ட்: ஸாரி ஜென்டில்மென், அந்த ரெண்டு ரோபாட்டும் இன்னும் செஞ்சு முடிக்கலே. கொஞ்சம் டிங்கர் ஒர்க் பாக்கி. ஒர்க் ஷாப்ல இருக்கு.
கொட்டாவி: வணக்கம் டைரக்டர் சார்! படத்துல பிரமாண்ட காட்சிகள் ஏதாவது உண்டா?
டைரக்டர்: ஓ... நிறைய இருக்கே! 20 ஆண் ரோபாட்டுகள், 20 பெண் ரோபாட்டுகளுடன் ஹீரோ, ஹீரோ யின் ரோபாட்டுகளும் சேர்ந்து ஆட ணும்... அதானே 'டூயட் சாங்'கில் வழக்கம்? அதையே நாங்க கொஞ்சம் வித்தியாசமா, முழுக்க முழுக்க 'பூமி லைட்'டுல படம் பண்ணப் போறோம். இது ரொம்பப் புது மையா, அற்புதமா வரப்போகுது பாருங்க!
கொட்டாவி: சன்லைட், மூன்லைட், ஃபிளாஷ்லைட், ஸ்பாட்லைட்டுன்னெலாம் கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன சார் 'பூமி லைட்'..?!
ஒளிப்பதிவாளர்: அதாவது சார்... பூமியில நிலா வெளிச்சம் தெரிஞ்சா அது 'நிலா வெளிச்சம்'. அதே மாதிரி நிலாவுல இருந்து பார்த்தா தெரியற வெளிச்சம் 'பூமி வெளிச்சம்'. அங்கே போய் எடுக்கறதுதான் இந்த 'பூமிலைட் சாங்'. ஆமாம்... இந்த டூயட் காட்சியை எடுக்க நாங்கள் நிலாவுக்கே அவுட்டோர் ஷூட்டிங் போறோம். மக்கள் எல் லாம் பரபரப்பா பேசப்போறாங்க பாருங்க!
கொட்டாவி: அது சரி... நிலாவுக்கு எப்படிப் போகப் போறீங்க? எல்லாமே சிங்காரம் சாரோட செட்டிங் கெட்டப்பா?
டைரக்டர்: அட, என்ன சார் நீங்க! இவ்வளவு செலவு பண்ணிப் படம் எடுக்கிறோம்... இதுக்காகக்கூட நாங்க நிலவுக்குப் போகாட்டி, எப் படி சார் ரியலிஸமா படம் வரும்? அதனால, நெஜமாலுமே நிலாவுக் குதான் போறோம்.
கொட்டாவி: ரொம்ப அதிசயமா இருக்கு சார்! இந்த யோசனைக்காகவே உங்க பேரை கின்னஸ் புக்குல போடலாம், சார்!
பெருச்சாளி: அது சரி, எப்ப எல்லாரையும் மேல அனுப்பப் போறீங்க?
டைரக்டர் (சிரித்தபடி): சீக்கிரத்துலயே!
- மேகலைவாணன்
|