Published:Updated:

பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!

பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!


விகடன் பொக்கிஷம்
பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!
பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!
பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!
பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!

கைச்சுவை உணர்வு நிரம்பியவர் கொத்த மங்கலம் சுப்பு.

அவரிடம் பழைய மாடல் கார் ஒன்று முன்பு இருந்தது. ஒருமுறை, ஒளிப்பதிவாளர் தம்புவுடனும், மற்ற சில நண்பர்களுடனும் சுப்பு அந்தக் காரில் கிண்டிக்குப் போய்க்கொண்டிருந்தார். சைதாப்பேட்டை ஒய்.எம்.ஸி.ஏ. அருகில் கார் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் போலீஸ் விசில் சப்தம் கேட்டது.

காரோட்டி வண்டியை நிறுத்தினார். 'டிராஃபிக் சார்ஜெண்ட்' நோட்டும் கையுமாகத் தன் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி வந்தார். சுப்பு அவரைப் பார்த்து, "என்ன விஷயம்?" என்று கேட்டார்.

"ஸாரி சார்! ஓவர் ஸ்பீடு. குறிப்பிட்ட வேகத்தைவிட உங்கள் வண்டி வேகமாகப் போயிற்று!" என்றார் சார்ஜெண்ட்.

"ஆ... என்ன!" என்றார் சுப்பு.

பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!

"ஆமாம் சார்! 30 மைல் வேகத்துக்கு மேல் இங்கே போகக்கூடாது!"

அவ்வளவுதான்... சுப்பு உடனே "ஹா... ஹா... ஹா..." எனச் சிரித்தார்.

சார்ஜெண்டிற்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சார், ஓவர் ஸ்பீடுக்கு உங்கள் டிரைவரை 'புக்' பண்ணப் போறோம். நீங்கள் சிரிக்கிறீர்களே..?!"

"சார்... என் வண்டி 30 மைலுக்கு மேலே போச்சா? எனக்கு அதுவே பரம சந்தோஷம், சார்! இந்தக் கார் 25 மைல் வேகத்துக்கு மேலே போகாதுன்னு இவங்க எல்லாம் என்னைக் கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்காங்க. என் வண்டி எத்தனை மைல் வேகத்திலே போச்சுன்னு இவங்க காதிலே நல்லா விழும்படி இன்னொரு தடவை உரக்கச் சொல்லுங்க சார்! எத்தனை வேணுமானாலும் அபராதம் செலுத்தத் தயார். இந்த வண்டி 30 மைலுக்கு மேலே போச்சுன்னு 'ரெக்கார்டு' பண்ணிட்டிங்களே, அது போதும்" என்று சுப்பு மகிழ்ச்சிப் பரவசத்தில் கூறிக்கொண்டே போக, தலையைச் சொறிந்தபடி நகர்ந்தார் போலீஸ் சார்ஜெண்ட்.

பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!
பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!
பிடித்தார் சார்ஜெண்ட்... சிரித்தார் சுப்பு!