Published:Updated:

உத்தம புத்திரன்

உத்தம புத்திரன்


விகடன் பொக்கிஷம்
உத்தம புத்திரன்
உத்தம புத்திரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உத்தம புத்திரன்
உத்தம புத்திரன்
உத்தம புத்திரன்

முனுசாமி - மாணிக்கம்

மாணி: ஏண்ணே! நீ 'உத்தம புத்திரன்' பார்த்துட்டியா?

முனு: இல்லியே! நீ பார்த்துட் டியா? கதை என்ன?

மாணி: ஒரு ராணிக்குக் குழந்தை பிறக்குது. இது ராணியின் தம்பி நாகநாதனுக்குப் பிடிக்கலே. குழந் தையைக் கொல்ல ஏற்பாடு பண் றான். ராணிக்கு உடனே இரண் டாவதா, ஒரு குழந்தை பிறக்குது.

முனு: சரிதான். கொல்லச் சொன்ன அந்தக் குழந்தை என்ன ஆவுது?

மாணி: வழக்கம்போல அந்தக் கையாளு அந்தக் குழந்தையைக் கொல்லலே! ரகசியமா தன் பெண் சாதிகிட்ட கொடுத்து வேற இடத் துக்கு அனுப்பிடறான். ராஜா வீட் டுக் குழந்தை குடிசைலே நல்லவனா வளருது. அரண்மனையிலே இருக் கிற குழந்தையை சேனாதிபதி நாகநாதன் குடிகாரனா வளக்கறாரு; அக்கிரம ஆட்சி நடத்தறாரு.

உத்தம புத்திரன்

முனு: சரி, நடிப்பைப் பற்றிச் சொல்லு!

மாணி: குடிசையில வளர்ற சிவாஜிகணேசன், குடிகாரனா வளர்ற சிவாஜிகணேசன்... ஆளு ஒண்ணுன்னாலும் வேஷம் இரண் டில்லே? ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சி டறாங்க! ரெண்டு வேஷம் என்ன அண்ணே... 20 வேஷம் குடுத்தா லும் தத்ரூபமா நடிப்பாரு அவரு!

முனு: சரி; ஹீரோயின் எப்படி?

மாணி: பத்மினியாச்சே, கேக்கணுமா? மேக்கப் அள்ளுது; நடை, உடை, ஜடை மூணும் துள்ளுது; நடிப்பு வெல்லுது! ஆஹா... ஒரு சீன்லே நீளமா சடை போட்டு பூ வச்சுப் பின்னிக்கிட்டு வருது பாரு!

முனு: நம்பியாருக்கு என்ன வேஷம்?

மாணி: அவர்தான் ராணியின் தம்பி. வழக்கம்போல அமர்க்களப் படுத்தியிருக்காரு.

முனு: நம்பியார் வராரு இல்லே! அப்ப, கத்திச் சண்டை இருக்குமே?

மாணி: அது மட்டும் இல்லே! இரண்டு சிவாஜிகளுக்குள்ளேயே சண்டை நடக்குது!

முனு: காட்சி ஜோடனை..?

மாணி: இயற்கைக் காட்சிகள் பிரமாதம்! மைசூர் பிருந்தாவனத்திலே ஒரு டான்ஸ் எடுத்திருக்காங்க. அற்புதம்! உயரமான கோட் டைச் சுவரிலேருந்து குதிரை மேல குதிக்கிறாரு சிவாஜி! நம்பவே முடி யலே அண்ணே!

முனு: குதிரை தாங்குதா இல்லையா? அப்புறம் நீ ஏன் கவலைப்படறே? சரி, படம் எப்படி?

மாணி: ஒரு சில குறைங்க இருந் தாலும், நிச்சயமா இது ஒரு நல்ல படம் அண்ணே!

உத்தம புத்திரன்
உத்தம புத்திரன்