Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

சிறைச்சாலை என்ன செய்யும்?

தலையங்கம்

சிறைத் தண்டனையும் சிறைவாசமும் அரசியல்வாதிகளைப் பயமுறுத்த முடியாது.

பொதுவாக, செய்த குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டவர்களின்மீதும், சிறை சென்று மீண்ட வர்களிடமும் இரக்கம் காட்டுவது இந்திய மக்களின் மன இயல்பு. அதிலும், அரசியல்வாதிகள் பழி வாங்கப்பட்டார்கள் என்றோ, சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்றோ அறிந்தால், அவர்கள் உள்ளம் மெழுகாய் உருகிவிடும். அந்தப் பலவீனத்தை நன்கறிந்த அரசியல்வாதி, சிறைச்சாலைக் கதவு தனக்கு எப்போது திறக்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்.

அரசியல்வாதி அரசியல் குற்றங்களுக்காகச் சிறை சென்றாலும், லஞ்ச ஊழல் குற்றங்களுக்காகச் சிறை சென்றாலும்... வெளியே வரும்போது ஒரு 'தியாகி'யாகிவிடுவார்! 'ஆளும் கட்சி தன்னைப் பழிவாங்கிவிட்டது; அரசியல் காரணங்களுக்காக, செய்யாத குற்றத்தைத் தன் மீது திணித்து, பொய் வழக்குப் போட்டு, விசாரணை நடத்தி, வஞ்சம் தீர்த்துக்கொண்டுவிட்டது' என்று முழங்குவார். தேர்தலின்போது, இந்தத் தண்டனையையே மூலதனமாக வைத்துப் பிரசாரம் செய்வார். மக்களின் பரிதாப உணர்ச்சியைத் தூண்டுவார்.

சிறைவாசம் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்தும் என்று அறிந்திருப்பதால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், "என்னைக் கைது செய்து பார்!", "விளைவுகளைச் சந்திக் கத் தயாராயிரு!" என்று ஆட்சியாளர்களுக்குச் சவால் விடுகிறார்கள்.

அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக ஊழல் பற்றிய விசாரணைகளைப் பயன்படுத்து வது எவ்விதப் பலனையும் அளிக்காது. மாறாக, விசாரணையையும் அதன் தொடர்பான வழக்குகளையும் விரைவுபடுத்தவேண்டும். குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப் பட்டு, நீதிமன்றம் தண்டனை அளித்தால், அதற்குப் பிறகு அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாகப் பணியாற்ற முடியாமல் செய்யப்படவேண்டும். எந்தத் தேர்தலிலும் அவர்கள் போட்டியிட முடியாதவாறு தடை விதிக்க வேண்டும்!

தலையங்கம்
தலையங்கம்