Published:Updated:

ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...

ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...


விகடன் பொக்கிஷம்
ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...
ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...
ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...
ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...

"உங்கள் கலையுலக வாழ்க்கையை 'நாயகனுக்கு முன், 'நாயகனுக்குப் பின்' என

இரண்டாகப் பிரிக்கலாமோ?"

"இல்லை. எனது கலையுலக வாழ்க்கையை 'கமலுக்கு முன்', 'கமலுக்குப் பின்' என்று மட்டும் பிரிப்பதே நியாயம்.

நடிகர் திலகத்தின் கலையுலக வாழ்க்கையை நான் 'வியட்நாம் வீடுக்கு முன்', 'வியட்நாம் வீடுக்குப் பின்' என்றோ 'கட்டபொம்மனுக்கு முன்-பின்' என்றோ பிரிக்க முற்பட்டதில்லை

நல்ல சினிமாவை நோக்கிய எனது பயணம், நான் பத்தொன்பது வயதில் ஆர்.சி.சக்தியுடன் சேர்ந்து எழுதிய 'உணர்ச்சிகள்' படத்திலிருந்துதான் வெளியே பிரபலமாகியது."

"அரசியலில் உங்கள் நிலைப்பாடு குறித்து..?"

"அது நிகழும் அரசியலைப் பொறுத்தது. 1930-களில் கேட்டால், வெட்கமின்றி என் அரசியலை வெளிப்படுத்தியிருப்பேன்.

ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...

பொழிப்புரை: சுதந்திரத்துக்காகத் தோன்றிய அரசியல் இயக்கங்களில் ஏதாவது ஒன்றில் இருந்திருப்பேன். அது பகத்சிங் சார்ந்த கூட்டமாகவும் இருக்கலாம்; மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூட்டமாகவும் இருக்கலாம்."

"உங்களுக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. இருந்தும் காதல், குடும்பம்... போன்ற சென்டிமென்ட்டுகளை விட்டுவிட்டு ஹாலிவுட் ரேஞ்சுக் குக் கதைக்கரு கொண்ட யுனி வர்சல் படங்கள் எடுக்கத் தயங்குவதேன்?

'குருதிப்புனல்' 'A' என்றாலும், வயது வந்தவர்களின் யுனிவர்சல் ஃபிலிம். ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான். நல்ல சினிமா ஹாலிவுட் தவிர, மற்ற இடங்களிலேயே நிறையத் தயாராகின்றன. இது உலகம் புரிந்துகொண்ட உண்மை."

"மருதநாயகம் ப்ராஜெக்ட் பற்றி..?"

"வயிற்றுக்குள் ஒரு பக்கம் பட்டாம்பூச்சிகள்; மறுபக்கம் புளி!"

ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...
ஹாலிவுட் ரேஞ்ச் என்பது வெறும் டெக்னிக்கல் விஷயங்கள்தான்...
- எஸ்.கல்பனா