Published:Updated:

சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்

சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்


விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்
சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்
சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்
சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்

மினி..!

அலட்டல், ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையான ஒரு கிராமியக் கதை! மாடர்ன் டிரஸ் மாட்டி, ஜிகினா சுவர் முன்னால் காதல் வளர்க்கிற சினிமாக்களுக்கு மத்தியில் 'பச்'சென்ற ஒரு யதார்த்த காதல்!

மாக்ஸி..!

ஊர் தர்மகர்த்தா சந்தான பாரதிக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, உள்ளூர் கனகாவின் கரக ஆட்ட பார்ட்டி ஓரங்கட்டப்படுகிறது. வெளியூரிலிருந்து வந்து திருவிழாவுக்குக் கரகம் ஆடுகிறார் ராமராஜன். தொடர்வது கனகா - ராமராஜன் காதல்! கனகாமேல் கண் வைத்திருந்த சந்தானபாரதிக்கு எரிச்சல். கனகாவும் ராமராஜனும் தனியே ஒரு கோயிலில் சந்தித்துக்கொள்ள, கோயில் கதவைப் பூட்டிவிட்டு 'உள்ளே தப்பு நடந்தது' என்று பூசாரியை விட்டுப் பொய் சொல்ல வைக்கிறார். அப்புறம், ராமராஜனும் கனகாவும் அம்மன் சந்நிதியில் தீ மிதித்துத் தங்கள் புனிதத்தை நிரூபிக்கிறார்கள்.

சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்

சோகம், சந்தோஷம், கோபம் என உணர்ச்சி மாற்றமே இல்லாமல் ஒரே மாதிரி குரலில் பேசினாலும், அந்தக் கிராமத்துக் கரகாட்ட காரெக்டருக்கு ராமராஜன் நன்றாகவே பொருந்து கிறார்.

வெட்டு வெட்டு என்று பேசி, 'முணுக்'கென்றால் கண்ணில் நீர் காட்டி, அடுத்த கணமே 'சுவிட்ச்' போட்டாற்போல் சிரித்து... கனகாவுக்கு இது முதல் படமாம். நம்பமுடியவில்லை. பலே தொடக்கம்!

இடுப்பிலும் முகத்திலுமாகக் கவுண்டமணியின் காலால் கிடைக்கிற தர்ம அடிகளுக்கே செந்திலுக்குத் தனியாகக் காசு தர வேண்டும். இரண்டில் ஒரு வாழைப்பழத்தைத் தின்றுவிடுகிறார் செந்தில். "எங்கே இன்னொரு வாழைப்பழம்?" என்று கவுண்டமணி கேட்கிறபோது, கல்லுளிமங்கனாய், "இதுதாண்ணே அந்த இன்னொண்ணு!" என்று ஒண் ணுந்தெரியாத அப்பாவியாக டபாய்க்கிறபோது, சிரித்தே குடல் சுருட்டிக்கொள்கிறது.

சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்

கனகாவின் அக்கா புருஷன் சந்திரசேகர், படத்தில் ஓர் அழுத்தமான பாத்திரம். அவ்வப்போது 'சரக்கு' போட்டுவிட்டு வில்லனுக்குக் கூஜாவாகச் செயல்படும் இவர், கனகா- ராமராஜன் நிச்சயதார்த்தத்தின்போது ரகளை பண்ணுமிடம் ஒரு மினி பூகம்பம்!

காமிராவுக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முகங்களையும் டைட்டிலில் காட்டுவது, கௌரவிக்கும் நல்ல செயல்! இதில் டைரக்டர் கங்கை அமரன், அளவுக்கு அதிகமாய் வருகிறார் என்பதே நெருடல்.

சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்
சினிமா விமர்சனம்: கரகாட்டக்காரன்
விகடன் விமர்சனக் குழு