Published:Updated:

தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்

தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்


விகடன் பொக்கிஷம்
தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்
தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்
தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்
தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்

வெஸ்ட் சி.ஐ.டி நகர், நந்தி ஹவுஸில் 'தோழர் பாண்டியன்' படப்பிடிப்பின் நடுவே,

சத்யராஜை சந்தித்தோம். டின்னரைப் பற்றிப் பேச்சைத் துவங்கியதும் சேரில் சரிந்திருந்த சத்யராஜ், நிமிர்ந்து உட்கார்ந்தார். சில விநாடி யோசனைக்குப் பின் பேச ஆரம்பித்தார்.

"நான் டின்னருக்குக் கூப்பிடறதா இருந்தால், தந்தை பெரியாரைத்தான் கூப்பிடுவேன். காரணம், அவர் மறைந்துவிட்டாலும் அவருடைய கொள்கைகள் உயிரோடு இருக்கின்றனவே! அதனால் கண்டிப்பாக அவரே என் கெஸ்ட்!

தொண்டர்களைக்கூடச் சுதந்திரமாகச் சிந்திக்க வெச்சவர் பெரியார். அவர்கிட்டே ஒரு தொண்டர், 'அய்யா, எனக்கு ஒரு சின்ன சந்தேகம்' என்று கேட்க, 'கேளப்பா... கேள்வி கேட்க மாட்டேங்கறீங்களேன்னுதான் நான் வருத்தப்படறேன்' என்றார் பெரியார். 'நீங்க 'கடவுள் இல்லே... இல்லே'ன்னு சொல்றீங்களே... திடீர்னு உங்க முன்னாடி கடவுள் தோன்றிட்டா, அப்புறம் என்ன சொல்லுவீங்க?' என்று கேட்டார் அந்தத் தொண்டர். 'இருக்குதுன்னு சொல்லிட்டுப் போறேன். கடவு ளைப் பார்க்காததால்தானே இல்லேனு சொல்றேன். பார்த்துட்டா ஒப்புக்கறேன்' என்று பளிச்செனச் சொல்லிவிட்டார் பெரியார்.

தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்

அவர் சொன்னதில், கடவுள் மறுப்புக் கொள்கையும், பிராமணர் எதிர்ப்புக் கொள்கையும்தான் பெரிசுபடுத்தப்பட்டிருக்கு. தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், பெண் உரிமை, சமத்துவம் பற்றியெல்லாம் எவ்வளவோ சொல்லியிருக்கிறார். மது ஒழிப்பு பற்றி சொன்னதோட நிற்காமல், கள் இறக்கிவிடக் கூடாதே என்று தன்னோட பல ஏக்கர் நிலத்தில் இருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்திருக்கிறார். தென்னையை வெட்டுறதுன்னா பிள்ளையை வெட்டுறது மாதிரி! இன்னும் சொல்லப்போனா, அதைவிட ஒருபடி மேலே! அப்படிப்பட்ட பெரியார் எங்க வீட்டு விருந்துக்கு வர்றது எங்களுக்குப் பெரிய பாக் கியம் இல்லீங்களா?" - மூச்சு விடாமல் பேசினார் சத்யராஜ்.

"எங்க வீட்டுல வெச்சுத்தான் பெரியாருக்கு விருந்து கொடுப்போம். நாங்க சாப்பிடற இடத்தில் அதே டைனிங் டேபிள்ல வாழை இலை போட்டு, அவருக்கு ரொம்பப் பிடித்தமான பிரியாணி பரி மாறுவோம். என் மனைவிதான் சமைப்பாங்க. கூடவே வெங்காயமும் வைப்போம். அவருக்குப் பிடிக்குதோ இல்லையோ... ஆனா, அடிக்கடி 'வெங்காயம் வெங்காயம்'னு சொல்லுவாரே... அதனால விருந்திலே கண்டிப்பா வெங்காயமும் இருக்கும். பெரியாரை எங்க வீட்டுக்குக் கூப்பிடறதுக்கு முன்னாடியே நான் சில விஷயங்களைப் பழகிக்கணும். முதல்ல, என் மனைவியை 'வாங்க போங்க'ன்னு மரியாதையா பேசக் கத்துக்கணும். பெண்ணுரிமைக்காகப் போராடிய அவர் முன்னால் மனைவியை 'அடியே'ன்னு கூப்பிட்டால் பெரியார் கோவிச்சுக்குவார். 'ஊருக்கு ஒண்ணு பேசறே. வூட்ல ஒண்ணா? போடா வெங்காயம்'னு சொல்லிடுவார்.

வீட்டுலே பெரியார் படம் மாட்டியிருக்கேன். அவரோட சிந்தனைகள் உட்பட, நிறையப் புத்தகங்கள் வெச்சிருக்கேன். அதையெல்லாம் பெரியார்கிட்டே பெருமையா காட்டுவேன். எங்க வீட்டுல பூஜை அறை இருக்கு. அது எங்கம்மாவுக்காக. அம்மா சொல்லிச் சொல்லி என் மனைவியும் அப்பப்போ கும்பிட்டுக்குவாங்க. நமக்கு அந்தப் பழக்கமெல்லாம் கிடையாது. ஆனாலும், மத்தவங்க உணர்வுகளைப் புண்படுத்தமாட்டேன். விசேஷங்களில் ஆளோட ஆளா நின்னுக்குவேன். விபூதி கொடுத்தால், வாங்கிப் பூசிக்குவேன். இதையெல்லாம் ஒளிவுமறைவு இல்லாம பெரியார்கிட்டே சொல்லிடுவேன். என் மகன் சிபி, பெரியார் கொள்கையிலே பிடிப்புள்ளவன். இயற்கையாவே அது அவனுக்கு அமைஞ்சிருக்கு. சாமி கும்பிடாமலே, பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்காமலே படிப்பில் கெட்டிக்காரனா இருக்கான். என் மகள் திவ்யா அவங்கம்மா மகேஸ்வரி டைப். நினைச்சா சாமி கும்பிட்டுக்குவா; இல்லேன்னா இல்லே. எங்கம்மா நாகம்மாள் தீவிர பக்தை. வீட்டில் அவங்க பொங்கல் வைப்பாங்க. இவங்களையெல்லாம் பெரியாரிடம் அறிமுகப்படுத்திவைத்து, ஒவ்வொருத்தரோட குணாதிசயத்தையும் சொல்லுவேன்.

தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்

'சீர்திருத்த சிந்தனைகள் எல்லாம் உங்களைப் பார்த்து நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். உங்களுக்கு அது எப்படி வந்தது? அதோட ஆரம்பம் என்ன?'ன்னு கேட்பேன். 'உங்கள் கொள்கைகளை அடிப்படையா வெச்சிருக்கிற திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் உடைஞ்சுக்கிட்டே போகுதே... அதுக்குக் காரணமென்ன? கலர் கலரா கரை வேட்டி கட்டிக்கிட்டுக் கோயிலுக்குப் போறாங்களே... அவங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?'ன் னெல்லாம் பெரியாரிடம் கேட்பேன்.

விருந்தோட முடிவில, அவர் கருத்துக்களை எழுதிக் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கச் சொல்வேன். அவர் முதன்முதல்ல உபயோகித்த பேனா இருந்தால், அதைக் கேட்டு வாங்கிக்குவேன். அது இல்லேன்னா அவர்கிட்டேயிருந்து ஏதாவது ஒரு பேனாவை வாங்கி, அவர் நினைவா பத்திரமாகப் பாதுகாப்பேன்.

கடைசியா, தந்தை பெரியாரை வழியனுப்புறப்போ, என்னோட 11 வயது மகன் சிபியை அவர் கையிலே பிடிச்சுக்கொடுத்து, 'இவன் உங்களோட தீவிர இளம் தொண்டன்'னு சொல்லிப் பெருமைப்படுவேன். அய்யா பக்கத்திலே அவனை நிற்கவெச்சு போட்டோ எடுத்து, அதைப் பெரிசா வீட்டில் மாட்டி வைப்பேன். இதைத் தவிர, ஒரு குரூப் போட்டோ..."

பெரியாரைப் பற்றிப் பேசப் பேச, உணர்ச்சிமயமாகிக் கொண்டே போகிறார் சத்யராஜ்.

தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்
தொண்டர்களையும் சுதந்திரமாகச் சிந்திக்க வைத்தவர் பெரியார்! : சத்யராஜ்
- 'புல்லட் அங்கிள்'