Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

சந்தன வீரப்பன் பற்றி விகடனில் முதன்முறையாக வெளியான தலையங்கம் இது.

வீரப்பன் அட்டகாசம்!

ரு காலத்தில் சந்தனமரக் கடத் தல்காரனாக கொசு அளவில் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த வீரப்பன், இன்று யானை பலம் கொண்ட சம்பல் கொள்ளைக்காரனாக வளர்ந்திருக்கிறான். இப்படியரு நிலை ஏற்பட யார் காரணம்? இந்த யானையைப் பிடிக்க இன்னமும் கொசுவலை விரித்துக்கொண்டு இருந்தால் சரியாக இருக்குமா?

காலப்பெட்டகம்

அரசியல் பின்னணியோ, அதி காரிகள் பக்கபலமோ இல்லாமல் சந்தனமரக் கடத்தல்காரர்கள் வளர முடியாது. வீரப்பனுக்குப் பின்னணி யில் உள்ள சக்திகளை இப்போதாவது செயலிழக்கச் செய்தாகிவிட்டதா? சுற்றிலும் மலையடிவாரங்களில் உள்ள கிராம மக்கள் அவனுக்கு உதவியாக இருப்பது ஏன்? வெறும் பயம்தான் காரணமா, அல்லது கிராம மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான 'காட்ஃபாதர்'போல அவன் இருக் கிறானா?

வீரப்பன் விஷயத்தில் இதுபோல இன்னும் பல கேள்விகள் எழுகின்றன!

எதுவாக இருப்பினும், கண்ணி வெடி வைத்து வீரப்பன் 22 பேரை பலிவாங்கிய பிறகும், அவனுடைய அட்டகாசத்தை அடக்கமுடியாமல் கையைப் பிசையும் பரிதாபநிலையில் இனியும் போலீஸ் இருக்கக் கூடாது.

'கர்நாடக-தமிழக போலீஸ் கை கோத்துச் செயல்படும்' என்றெல்லாம் வெறும் வீர அறிவிப்புகளோடு நிறுத்திக்கொண்டுவிடக் கூடாது. மறுபடியும் ஒரு சொட்டு ரத்தம் போலீஸ் தரப்பில் சிந்தக்கூடாத அளவுக்குப் புத்திசாலித்தனத்துடன் திட்டம் போட்டு, அக்கறையுடன் செயல்பட்டு, வீரப்பனைப் பிடிக்க வேண்டும்.

புட்டபர்த்தி சாயிபாபாவைக் கொல்ல நடந்த முயற்சியை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போது விகடன் வெளியிட்ட தலையங்கம் இது.

புட்டபர்த்தி நிகழ்ச்சி...

காலப்பெட்டகம்

த்ய சாயிபாபாவின் ஆசி பெறு வதற்கும் அவரது நல்வழிகாட்டலை எதிர்பார்த்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் அமைதியான இடம் புட்டபர்த்தி. அங்கே சாயி பாபாவைக் கொலை செய்ய நடந்த முயற்சி, பக்தர்களைத் திடுக்கிட வைக்கும் சம்பவம் ஆகும்.

சாயிபாபா மக்களிடமிருந்து ஒதுங்கி வாழும் விலாசமில்லாத துறவி அல்ல. பள்ளிகளும் கல்லூரி களும் மருத்துவமனைகளும் அமைத்து, பிரமாண்ட ஆலமரமாக விரிந்து சமூகசேவை புரியும் விதத் தில் இந்த மகானின் பணி அமைந் திருக்கிறது. ஆகவே, நடந்த இந்தக் கொடுமையான நிகழ்ச்சி பற்றித் தீவிரமாக போலீஸ் விசாரணை நடத்த வேண்டும். எப்படிப்பட்ட பின்னணியில் கொலைத் திட்டம் போடப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பாபாவுக்கு ஆபத்து ஏற்படுத்தும் சக்திகள் உள் ளுக்குள் ஊடுருவி இருக்கிறதா என்று அறிய வேண்டும். அப்போது தான் அறிவுபூர்வமான முறையில் எதிர்காலத்தில் அவருக்குப் பாது காப்பு தரமுடியும்.

பாபாவின் மீது உள்ள தனிப் பட்ட பக்தியையும் விசாரணையை யும் சேர்த்துக் குழப்பிக்கொள்வது சரியல்ல. நாளை மீண்டும் பாபா வுக்கு யாரேனும் தீங்கு செய்தால், அந்தப் பழி யார் மீது விழும்? தற் போது தேவையில்லாமல் உணர்ச்சி வசப்பட்டுக்கொண்டு 'இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; சி.பி.ஐ. விசாரணை எல்லாம் தேவையில்லை' என்று சொல்பவர்கள் அதற்கான பொறுப்பேற்றுக்கொள்வார்களா?

"அப்போ அவங்களுக்குள்ளே டெர்ம்ஸ் சரியில்லை!"

- கலைஞர்

சென்னை பீச் ரோடு...

அண்ணா சமாதிக்கு அருகில் இருக்கும் 'சுராங்கனி ரெஸ்டா ரென்ட்டை' ஒட்டி நடந்துபோன போது, அங்கு ஒரு பெட்டிக்கடையில் தொங்கவிடப்பட்டு இருந்த அந்தப் புகைப்படம் 'பளிச்'சென்று நம் கவனத்தை ஈர்த்தது.

காலப்பெட்டகம்

தமிழக அரசியலின் முப்பெரும் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி. ஆர்., ஜெயலலிதா மூவரும் ஒரே மேடையில் சேர்ந்து நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் அபூர்வ, பழைய புகைப்படம் அது! நடுநாயக மாக கலைஞர்; அவருக்கு இடதுபுறம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்; கலைஞருக்கு வலதுபுறம் இளமை யாக, படு ஸ்லிம்மாக நடிகர் திலகம்! அவருக்கு அருகில் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன்.

அந்தப் புகைப்படம் பற்றி விசாரித்தபோது, "அஞ்சாறு வருஷத் துக்கு முன்னே சிந்தாதிரிப்பேட்டை வழியா நடந்து போயிட்டு இருந்த போது, ஒரு போட்டோ ஸ்டூடியோ வாசல்ல இந்தப் படத்தைப் பார்த் துட்டு, நானும் உங்களை மாதிரி தாங்க மெய்ம்மறந்து நின்னேன். ஸ்டூடியோவில் விசாரிச்சப்போ 'எங்கள் தங்கம்' 100-வது நாள் விழாவில் எடுத்ததுன்னு சொன் னாங்க. சட்டுனு ரூபா கொடுத்துக் கையோட இந்தப் படத்தை வாங்கிட்டு வந்துட் டேன்" என்றார் பெட்டிக்கடை இளைஞர் லத்தீப்.

புகைப்படத்தின் பின்னணி விஷயங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக, முரசொலி அலு வலகத்தில் கலைஞரைச் சந்திக்கச் சென்றோம்.

புகைப்படத்தைக் கையில் வாங்கிப் பார்த்த நிமிடத்தில், டக்கென்று இதழோரத்தில் வெடித்துப் பூத்தது கலைஞருடைய அந்தப் பிரத்யேக புன்ன கைப் பூ! "இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது?" என்று நம்மிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கலைஞர், இப்படியும் அப்படியுமாகச் சாய்த்து வெகு நேரம் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

"இந்தம்மாவோட 100-வது படமான 'திருமாங்கல்யம்' படத்தோட விழா வுக்குக்கூட என்னைத்தான் விருது கொடுக்கும்படி கேட்டுக்கிட்டாங்க. பல்கலைக்கழக சென்டினரி ஹால்லதான் விழா நடந்தது. ஆனா, அந்த விழாவுக்கு எம்.ஜி.ஆர். வரலை. அப்போ அவங்களுக்குள்ளே 'டெர்ம்ஸ்' சரியில்லே" என்று சிரித்தார் கலைஞர்.

"எங்கள் தங்கம் படவிழா போட்டோவாக இருக்கலாம்' என்று, பெட்டிக் கடைக்காரர் லத்தீப் கூறிய விஷயத்தைக் கலைஞரிடம் கூறினோம்.

"இருக்கலாம். ஆனா, அதுக்கு சிவாஜிகணேசன் வந்திருக்க சந்தர்ப்பம் இல்லையே! ஒருவேளை, அந்தப் பட பூஜையாக இருக்கலாம்" என்று யோசித்த கலைஞர், "ஒரு விஷயம் தெளிவாத் தெரியுது. அதாவது, நான் முதலமைச்சரா இருந்தப்போ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதிலும் 71-ம் வருஷத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் நண்பர் (எம்.ஜி.ஆர்.) தி.மு.க-விலேதான் இருந்தார். இந்தப் படத்தைப் பத்தி மிகச் சரியான தகவல்களைக் கேட்கணும்னா ஏ.எல்.எஸ்-கிட்டேதான் கேட்க முடியும். ஆனா, இப்போ அவர் உயிரோட இல்லையே!" என்று கூறிவிட்டு, புகைப்படத்தை நம் கையில் கொடுக்கும் முன், மீண்டும் ஒரு தடவை வெளிச்சத்தில் போட்டோவைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார் கலைஞர்.

"என்னை 'கிடாப்பயலே'ன்னு கூப்பிடுவாங்க..!"

- பாரதிராஜா

காலப்பெட்டகம்

சொல்லி வைத்தாற்போல், அதே வாரத்திலேயே எதேச்சையாக நாம் சந்தித்த நண்பர் ஒருவரிடமிருந்து மற்றோர் அபூர்வமான புகைப்படம் கிடைத்தது.

"ஐம்பது வருஷத்துக்கு முந்தின படம் இது! ஒரு வெள்ளைக்கார துரை எடுத்தது. முதல் வரிசையில் பவ்யமாகக் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஒரு குட்டிப் பையன் இன்னிக்குத் தமிழ்த் திரைப்பட உலகத்தைக் கலக்குபவர்" என்ற அறிமுகத்துடன் புகைப் படத்தை நம்மிடம் கொடுத்தார் தேனி, வடபுதுப்பட்டியைச் சொந்த ஊராகக் கொண்ட நண்பர் அழகர்சாமி.

காலப்பெட்டகம்

என்ன முயன்றும் நம்மால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, நண்பரே அப்புறம் புதிரை விடுவித்தார். "பாரதிராஜாங்கிற 'சின்னச்சாமி'தாங்க அந்த பையன்! சமர்த்தாகக் கை கட்டிக்கொண்டு படத்தின் வலது கோடியில் உட்கார்ந்திருக்கார் பாருங்க, அவர்தான்!" என்ற அழகர்சாமி, தற்சமயம் ராணி மங்கம்மாள் போக்கு வரத்துக்கழகத்தில் டிரைவராகப் பணியாற்றுகிறார்.

அழகர்சாமி கொடுத்த படத்துடன் ஜெமினி காம்ப் ளெக்ஸிலுள்ள பாரதிராஜாவின் அலுவலகத்துக்குள் நுழைந்தோம். ஆச்சரியமும் சந்தோஷமும் கண்களில் மின்ன... புகைப்படத்தை நம்மிடமிருந்து பறிக்காத குறையாக வாங்கிப் பார்த்தார் பாரதிராஜா.

"அட, எங்க அப்பா இருக்காரே! எங்க அத்தை, அப்புறம் எங்க மாமா, எங்கண்ணன், தம்பி... டேய்... இது எங்க தாத்தாடா!" என்று குழந்தையின் உற்சாகத் துடன் நான்கு வயது சின்னச்சாமியாகவே மாறி, பக் கத்திலிருந்த அக்கா மகன் தனபாலின் தோளில் தட்டிக் கூவாத குறையாகச் சந்தோஷப்பட்டார் பாரதிராஜா.

"மனுஷன் வாழ்க்கை என்னமா சேஞ்ச் ஆகுது" என்று உற்சாகமாகத் தனக்குத்தானே பேசியவர், போட்டோவில் இருந்த தனது நான்கு வயது உருவத்தையே உற்றுப் பார்த்தார்.

"எனக்கு வலது பக்கம் இருக்கிறது என் தம்பி செல் லக்கண்ணு. இப்போ மதுரையில பட விநியோகஸ்தரா இருக்கார். அடுத்ததா உட்கார்ந்திருக்கிறது எங்க தங்கத் தாயி அக்கா. அடுத்ததுதான், உங்களுக்கு போட்டோ தந்த அழகர்சாமி. அவருக்கு பக்கத்தில் எங்க அண்ணன் துரைராஜ்..." என்று படத்தில் இருந்த ஒவ்வொரு நபராகச் சொல்லிக் கொண்டே போனார்.

"இடது கோடியில் சேர்ல உட்கார்ந்து இருக்கிறவர்தான் எங்க தாத்தா கருப்பத்தேவர். அடுத்ததா, வெடிக்கார ரங்கசாமி நாயுடு; அப்புறம் வேட்டைக்குப் போகும் இடத்தில் பழக்கமான ஃபாரஸ்ட் கார்டு; அதுக்கப்புறம் நெஞ்சை நிமிர்த்திட்டு உட்கார்ந்திருக்காரே, அவர்தான் பட்டாளத்து நாயுடு. எல்லோரும் ஒரு க்ரூப்... வேட்டைப் பிரியர்கள்! பெரியவங்க எல்லாம் சேர்ந்து வேட்டைக்குக் கிளம்பறப்போ நாங்க சின்னப் பிள்ளைங்க எல்லாம் கம்பு, கட்டைன்னு கையில் கிடைச்சதைத் தூக்கிட்டுக் கிளம்பிடுவோம். நாப்பது பேர் வேட்டைக்குக் கிளம்பினா, ஆறு பேர் கிட்டே துப்பாக்கி இருக்கும். மத்தவங்க 'ஹோ ஹோ'ன்னு சத்தம் போட்டுக் காட்டுல இருக்கிற மிருகங்களைக் கலைஞ்சு ஓடச் செய்வோம்..." என்றவர், திரும்ப போட்டோவில் மூழ்கினார்.

"இடது கோடியில நிற்கிறவர் எங்க அப்பா பெரிய மாயத்தேவர். மூணாவதாக நிக்கறது எங்க பாட்டி. அப்புறம் ஃபாரஸ்ட் கார்டோட சம்சாரம். அதுக்கடுத்து எங்க பெரிய அத்தை. (என் சம்சாரத்தோட பெரிய அம்மா. நான் என்னோட அத்தை பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன்.) பெரிய அத்தையை ஒட்டி அவங்க வீட்டுக்காரரு..." என்று மண்வாசனை ஞாபகத்தில் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தார்.

"சின்ன வயசுல இருந்தே நான் நல்லா திம்சுக்கட்டை மாதிரி 'ஜம்'முனு இருப்பேன். செல்லமா என்னை 'கிடாப்பயலே'ன்னுதான் கூப்பிடுவாங்க. விவசாயக் குடும்பம்னாலும் எங்க வீட்டுல எல்லோருக்கும் திண்ணுன்னு உடம்பு! எங்க தாத்தாகூட ரொம்பவும் முடியாதப்போதான் படுக்கையில உட்கார்ந்தார். 'ஊரு நாட்டுக்குப் போறியே... எனக்கொரு கம்பளி வாங்கித் தாடா'ன்னு படுக்கையில் இருந்தப்போ என்னைக் கேட்டார். கிராமத்து ஆளுங்களுக்குக் கயித்துக் கட் டிலும் கம்பளியும்தான் பெரிய சொத்து! அவர் என்னைக் கேட்ட நேரம். நான் சான்ஸ் தேடி மெட்ராஸுக்கு அலைஞ்சுட்டு இருந்தேன். ஒவ்வொரு தடவையும் 'இதோ... அதோ'ன்னு சொல்வேனே தவிர, கம்பளி வாங்கவே முடியலே. கடைசிக் காலத்தில அவரு மெட்ராஸுக்கு வந்து சுத்திப் பார்க் கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாரு. ஆனா, நானே மெட்ராஸ்ல பிளாட்பாரவாசியா இருந்த நேரம் அது. தாத்தா ஆசைப்பட்ட ரெண்டு விஷயத்தையும் அவ ரோட கடைசிக் காலம் வரைக்கும் நிறைவேத்த முடி யாமலேயே போயிடுச்சு!"

கலங்கத் துடித்த கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு நொடியில் மலர்ந்து சிரித்தார் பாரதிராஜா.

"வீட்டுல போட்டோவைக் காட்டினா ரொம்ப சந்தோஷப்படுவாங்க" என்று பாரதிராஜா கேட்டுக் கொள்ள, அவர் ஆசையை நிறைவேற்றிவிட்டுக் கிளம்பினோம் நாம்.

- பொன்ஸீ

காலப்பெட்டகம்

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அமரரானார். லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது, விமானத்தில் அமர்ந்த நிலையிலேயே அவரது மரணம் நிகழ்ந்தது. அப்போது வெளியிட்ட கட்டுரையில், 'மரணம், 88 வயதான அவரது பூதவுடலுக்குதான்; அவரது ஆன்மாவுக்கு அல்ல; அவருடைய அழியாத புகழுக்கு அல்ல! பூமிக்கு மேலே, நம் போன்ற சராசரி மனிதர்களைவிட, சொர்க்கத்துக்கு அருகில் வாரியாரின் உயிர் பிரிந்திருப்பது வியப்பூட்டுகிறது!' என்று குறிப்பிட்டிருந்தது விகடன்.

காலப்பெட்டகம்

விகடன் 31.1.93 தேதியிட்ட இதழில், 'கட்டளை' படத்தின் ஸ்டில், அட்டைப்படமாக வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகர், நடிகைகளின் படங்கள் அட்டையில் வெளியானாலும், ஒரு சினிமா ஸ்டில் அட்டைப்படமாக வெளியாவது அநேகமாக இதுவே முதல் முறை!

காலப்பெட்டகம்

பரணீதரன் எழுதி, வாசகர்களிடம் ஏகபோக வரவேற்பைப் பெற்ற காஞ்சிப் பெரியவரின் சரித்திரமான 'அன்பே... அருளே...' வெளியானது இந்த ஆண்டுதான். இந்தத் தொடர் கட்டுரைக்கு ஓவியர் ம.செ. வரைந்த ஓவியங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன.

காலப்பெட்டகம்

'மீண்டும் சாவித்திரி' என்னும் தலைப்பில் தொடர்கதை எழுதியுள்ளார் நடிகரும் இயக்குநருமான விசு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், 'நான் ஒரு ரசிகன்' என்னும் தலைப்பில், தமது அனுபவங்களைத் தொடர்கட்டுரையாக எழுதியுள்ளார்.

'ஒரு சிற்பியின் சுயசரிதை' என்னும் தலைப்பில், தனது வாழ்க்கையில் நடந்த பல சுவாரசிய நிகழ்வுகளைத் தொடர்கட்டுரையாக எழுதியுள்ளார் ஓவியரும் சிற்பியுமான தனபால்.

தலையற்ற முண்டம் போல் ஒருவருக்கு மேக்கப் செய்து, சென்னையை நகர்வலம் வரச் செய்து, பொதுமக்களைப் பரபரப்புக்குள்ளாக்கியது விகடன். நாசர், விசு, டாக்டர் கமலா செல்வராஜ், நடிகை மீனா எனச் சில பிரபலங்களின் வீட்டுக்கும் விஜயம் செய்து திகிலூட்டினார் திருவாளர் முண்டம். பின்னாளில், வாராவாரம் ஏதேனும் தமாஷ் செய்து கலக்கிய 'குறும்பு டீம்' ஐடியா, இதிலிருந்து பிறந்ததுதான்!

காஞ்சிப் பெரியவரின் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது அருள் உரைகளை வாரந்தோறும் இரண்டு இரண்டு புத்தகங்களாக, மொத்தம் 101 புத்தகங்கள் வெளியிட்டுள்ளது விகடன். காஞ்சிப் பெரியவருக்குக் கனகாபிஷேகம் நடந்ததையும் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறது. இந்தக் கட்டுரை, 20.5.2009 விகடன் இதழில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

விகடன் 15.8.93 இதழ் இரட்டைப் பக்கச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. இதில் கட்டுரைகள், கதைகள், தலையங்கம், கார்ட்டூன், தொடர்கதைகள்... ஏன், விளம்பரங்கள்கூட இரண்டு பக்க அளவில்தான் வெளியாகியுள்ளன.

இந்தியாவையே உலுக்கியெடுத்தது, மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு நிகழ்ந்த பூகம்பம். துயர் துடைப்புப் பணிகளில் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் விகடன் இதழும், அதன் வாசகர்களுமாக மராட்டிய சகோதரர்களுக்காக மூன்று தவணைகளில் திரட்டித் தந்த நிதி ரூ.4,33,322.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்