Published:Updated:

அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!

அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!


விகடன் பொக்கிஷம்
அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!
அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!
அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!
அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!

"மாப்பிள்ளை இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்கார்...?"

"போண்டா சாப்பிட்டுட்டிருக்கேன்..." என்று 'கல்யாண பரிசு' படத்தில் கூறி, இப்போது அதை நினைத்தால்கூட நம்மையெல்லாம் வாய்விட்டுச் சிரிக்கும்படியாகச் செய்த டணால் தங்கவேலுவும், திருமதி எம்.சரோஜாவும் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

"நாடக ஒத்திகை பார்த்துக்கிட்டிருக்கோம்..." என்கிறார்கள் இருவரும் சேர்ந்தாற்போல!

மாம்பலத்தில் ராமாராவ் கலாமண்டபத்தில், 'சீமான் மகள்' என்ற அவர்களுடைய புதிய நாடகத்தின் ஒத்திகைதான் அது.

"நீங்கள் இருவரும் இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது, திரையுலகம் உங்களை ஒதுக்கிவிட்டதா?"

"ரொம்பச் சங்கடமான கேள்வி யைக் கேட்டுட்டீங்களே..." என்று தனக்கே உரித்தான ஒரு குரலுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தார் தங்கவேலு.

அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!

"நானாகவும் ஒதுங்கலை; அவங்களாவும் ஒதுக்கிடலை. என்னமோ தெரியலே, ஒரு 'பிரேக்' வந்துடுச்சி. இந்த 'பிரேக்' வந்து பத்து வருஷம் ஆகப் போவுது. நான் நடிச்சுக்கிட்டிருந்தபோது ஒரு கணிசமான தொகையை வாங்கிக்கிட்டு இருந் தேன். அப்போ திடீர்னு சில பேர் வந்து குறைந்த தொகையை வாங்கிக்கிட்டு நடிக்க ஆரம்பிச் சிட்டாங்க. 'குறைந்த தொகை'யை மனசிலே வச்சுக்கிட்டு எல்லோ ரும் அந்தப் பக்கம் போயிட்டாங்க. நானும் சரோஜாவும் மட்டும் இந்தப் பக்கம் தனியா நின்னுட் டோம். அவ்வளவுதாங்க விஷயம்..."

"இப்போ உங்க வாழ்க்கை வசதி எல்லாம் எப்படி?"

"கலைவாணர் ஆசியாலே நான் அப்போ இருந்த மாதிரியே இப்போதும் ஸ்டெடியா, சௌக் கியமா இருந்துக்கிட்டு வர்றேன். அதுலே பாருங்க, ஒரு விசேஷம்... நாங்க வெளியூருக்கு நாடகம் நடத்தப் போனா, அங்கே பார்க் கறவங்க எல்லாம் நான் கல்யாண பரிசிலே சொன்ன டயலாகையே திருப்பி என்னைப் பார்த்துச் சொல்றாங்க. 'தங்கவேலு அண்ணாச்சி, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சி!' அப்படீன்னு கேட்கறாங்க. இதுக்கு என்னங்க சொல்றது..!" என்று சிரிக்கிறார் தங்கவேலு.

அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!

லட்சுமிகாந்தம், விமலா போன்ற நாடகங்களை நடத்தி வருகிறார் இவர்.

"சேலத்தில் 'சீமான் மகள்' என்ற புதிய நாடகம் அரங்கேறுகிறது. அதனாலே, நான் வசனத்தையெல்லாம் மனப்பாடம் பண்ணப் போகணும். நீங்க சரோஜா கிட்டே ஏதாவது கேட்கணுமின்னா கேளுங்க!" என்றவர், "அம்மா... சரோஜா..! இவங்க ஏதோ கேட்கறாங்க. கொஞ்சம் வந்து சொல்லிட்டுப் போ!" என்று கூறிக்கொண்டே, விடைபெற்றுச் சென்றுவிட்டார் தங்கவேலு.

கணவர் தங்கவேலு விட்டுப் போன நாற்காலியில் மனைவி சரோஜா வந்து உட்காருகிறார்.

"ஆமாம், நீங்கள் ஏன் நடிப்பதை விட்டுவிட்டீர்கள்?"

"சான்ஸ் கிடைக்கலை. நடிக்கலை.. வேறென்ன சொல்றது?" என்கிறார் சரோஜா. "அதோட, எனக்குப் பொருத்தமான பாத்தி ரங்களா வரலை!"

இவர் நடிக்காதிருந்ததற்கு, இடையில் சில காலம் இவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்ததும் மற்றொரு காரணம்.

அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!
அண்ணாச்சி, பார்த்து ரொம்ப நாளாச்சி!
- சுந்தரம்