Published:Updated:

சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்

சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்


விகடன் பொக்கிஷம்
சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்
சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்
சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்
சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்

'டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடு' மாதிரி என்று சொல்லமுடியாது... 'டெத்

விஷ்' படத்தில் வரும் சார்லஸ் பிரான்ஸன் மாதிரி என்று வேண்டுமானால் சொல்லலாம். அதான், 'ஜென்டில்மேன்' படத்தில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் அர்ஜுனைத்தான் குறிப்பிடுகிறோம்!

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களே! தயவுசெய்து எந்த நடிகருக்கும் 'இவர் சென்டி மென்டுக்கு, இவர் ஆக்ஷனுக்கு, இவர் ரொமான்ஸுக்கு...' என்று முத்திரை குத்தாதீர்கள்! ஒரு பக்கம், நெற்றியில் பட்டையுடன் பதவிசுடன் அப்பள கம்பெனி நடத்திக்கொண்டு... இன்னொரு பக்கம், பணக்காரர்களைக் கொள் ளையடித்துப் பப்படம் பண்ணு கிற ஒரு வித்தியாசமான ரோலில் அர்ஜுன்தான் எத்தனைக் கச்சி தமாக அசத்தியிருக்கிறார்!

ஏகத் திறமையுடன், பரீட்சையில் ஏராளமாக மார்க் எடுத்தும், வசதியின்மை காரணமாக மேலே படிப்பைத் தொடர முடியாமல்போவது கொடுமையான ஓர் அனுபவம்.

சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்

இந்த சென்சிடிவ்வான விஷயத்தைக் கருவாக வைத்து, ஹாலி வுட் அளவுக்கு மசாலா பண்ணி யிருக்கிறார்கள். பல ஆக்ஷன் காட்சிகளை விஸ்தாரமாக அனுப வித்து எடுத்திருக்கிறார்கள்! அந்த ரத்தில் 'ஜீப்'புகளும் மோட்டார் சைக்கிள்களும் பாய்வதும், லாரி கள் உருளுவதும், ஊட்டி மலைச் சரிவில் ஊர்ந்து செல்லும் ரயில் மீது துரத்துவதும்... ஜோர்!

'சிக்குபுக்கு ரயில்' மற்றும் 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ' பாடல் காட்சிகளில் 'மணிரத்ன பாதிப்பு' அதிகம்! அதே சமயம், சிக்குபுக்குவில் அந்த அனிமேஷன் படு கிக்! இங்கே மணியை சில செ.மீ-க்கள் மிஞ்சிவிட்டதையும் குறிப்பிடவேண்டும்!

இந்தப் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தொடர்ந்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது!

இயல்பான உரையாடல் எழுதுவதில் பாலகுமாரன் தனி முத்திரை பதித்திருப்பவர். படத்தில் இவருடைய எழுத்தின் முழு வீச்சை ரசிக்கிறோம்.

சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்

டைரக்டர் ஷங்கர்... ஜென்டிலாய் வந்து கலக்கியிருக்கும் இந்த இளைஞருக்கு ஒரு சபாஷ்!

தமிழ்ப் படவுலகில் பலர் பெருங்காய டப்பாவுக்குள் அமர்ந்து துடுப்புப் போட்டுக்கொண்டிருந்தாலும், சிலர் டெக்னிக்கல் முன்னேற்றம் எனும் விண்வெளிக் கலத்தில் காலடி எடுத்து வைத்துவிட்டதைப் பார்க்கும்போது மனசுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது!

சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்
சினிமா விமர்சனம்: ஜென்டில்மேன்
விகடன் விமரிசனக் குழு