Published:Updated:

எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு

எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு


விகடன் பொக்கிஷம்
எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு
எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!"-வடிவேலு
எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு
எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு

மிழ்த் திரையுலகில் கொடி உயர்த்திக்கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின்

வீடு. மாடியில் குடித்தனம். சிமென்ட் பூசப்படாத செங்கற்கள்; ஒரு சிறிய மேஜை, இரண்டே நாற்காலிகள். அதில் ஒட்டிக்கொண்டே கால்ஷீட்டையும், கணக்கு வழக்குகளையும் பார்த்துக்கொள்ளும் மானேஜர் முருகேசன். ஓய்வின்றி ஓடி ஓடி நடித்துக்கொண்டி ருக்கும் கறுத்த, ஒல்லி மனிதர் வடிவேலு. அதிசயமாய் கொஞ் சம் ஓய்வில், ஜமுக்காளத்தில் உடல் சாய்த்து, சிவப்பு நிற டிரான் சிஸ்டரில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அது ஒன்றுதான் அந்த வீட்டில் இருந்ததிலேயே விலையுயர்ந்த பொருள்.

இருண்ட வானத்தில் பளீர் மின்னலாய், பற்பசை விளம்பரம்போல வெளீரெனச் சிரித்தார் வடிவேலு. அவர் பேச்சிலும் மூச்சிலும் மண் வாசனை மணந்தது.

"நீங்கள் டின்னர் கொடுப்பதாக இருந்தால் யாரை அழைப் பீர்கள்?" என்று கேட்டதும், 'டின்னரா?!' என்று விழிகளை அகல விரித்த வடிவேலு, "இதெல்லாம் காதால் கேட்பதோடு சரி... முழுமையாக நான் பார்த்ததெல்லாம் பழைய சோறும் பச்சை மிளகாயும்தான். அதை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் வளர்ந்ததால், அதுவே அமிர்தமாகிவிட்டது. சரி, விருந்துங்கறீங்க. இந்தச் சந்தடிசாக்கில் நாமளும் மூக்கு முட்டப் புடிச்சிட வேண்டியதுதான். டின்னருக்குக் கூப்புட ணும்னா, இந்த அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறதுக்குக் காரணமா, அஸ்திவாரமா இருக்கிற தெய்வம் ராஜ்கிரண் சாரைத்தான் கூப்பிடுவேன்..." என்றார். தொடர்ந்து...

எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு

"மூணு வருஷமா என்னைத் தன்னோடயே வெச்சு, சோறு போட்ட சாமியாச்சே அவரு! அவருக்கு ரொம்பப் பெரிய மனசு. தினம் அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டாலும் நன்றிக் கடனைத் தீர்க்க முடியாது. எனக்குக் கஞ்சி ஊத்துன சாமியை எங்க வீட்டுக்குக் கூப்பிட்டுச் சோறு போட்டுப் பார்க்கவேணாமா? அதனாலதான் அவரை என் விருந்தாளியா தேர்வு பண்ணினேன்."

"உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த விருந்தில் கலந்து கொள்வார்களா?"

"என்ன அப்படிக் கேட்டுப்புட்டீங்க. குடும்பத்தார் இல்லாமலா? என் பாட்டி பாப்பம்மாள் (அப்பாவின் அம்மா), அம்மா சரோஜினி, மனைவி விசாலாட்சி, குழந்தைங்க, என் தம்பிங்க இளங்கோ (28 வயதாகும் இவருக்கு மனநிலை சரியில்லை), நான் பார்த்து வந்த கண்ணாடி அறுக்கிற கூலிவேலை செய்து வரும் ஜெகதீசன், கணேசன், தங்கச்சிங்க ஜெயந்தி, லதா (நடிகரான பின்தான் இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்), அவங்க வீட்டுக்காரங்க எல்லாரும் இந்த விருந்துல கலந்துக்குவாங்க. இதுல ஒரே ஒரு வருத்தம் - எங்க அப்பா நடராஜ பிள்ளை உயிரோட இல்லையேங்கறதுதான். நான் நடிச்ச படத்தையே அவர் பார்க்கலே. 'என் ராசாவின் மனசிலே' ரிலீஸாகி முப்பது நாள்ல அவர் இறந்துட்டார். அவரும் இருந்திருந்தா, சந்தோஷமா இருக்கும்..."

"விருந்தில் என்னென்ன அயிட்டங்கள் இருக்கும்?"

"நம்ம ஊரு சமையல்ல என்னென்ன உண்டோ, அத்தனையும் வெச்சிடுவோம். காய்கறிப் பதார்த்தங்கள், சாம்பார், ரசம், வடை, பாயசம், கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் குழம்பு, வறுவல், முட்டை அவியல், ஆம்லெட், மட்டன், சிக்கன் பிரியாணி.. படத்திலே ராஜ்கிரண் சார் எலும்பு கடிப்பாங்களே, அப்படி எலும்பு... இப்படி வகை வகையா சமைச்சு வெச்சிடுவோம்..."

எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு

"விருந்துக்குப் பின் அவருக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்?"

"ஆத்தாடி! அவருக்குப் பரிசு கொடுக்கிற அளவுக்கு எனக்குச் சக்தி இல்லே. எதைக் கொடுத்தாலும் அது பரிசாவே ஆகாது."

"அவர் ஏதாவது பரிசு கொடுத்தால்..?"

"விடுவேனா? நாலணா காசா இருந்தாக்கூடப் பிடுங்கிக்குவேன். அதை வாங்கி கடவுள் படத்துக்குப் பக்கத்திலே வெச்சுடுவேன்!"

- புளகாங்கிதத்தோடு சொல்லிக்கொண்டே வந்த வடிவேலு, "ஆனா, இந்த விருந்து உபசாரமெல்லாம் இந்த வீட்டிலே இல்லை. இது வாடகை வீடு. நான் மெட்ராஸிலே சொந்தமா வீடு வாங்கி, அதிலேதான் டின்னர் கொடுப்பேன்" என்றார்.

சாலிகிராமத்தில் வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் அந்தக் கனவு நனவாகிவிடும் என்று சொன்ன வடிவேலு, கண்களை மூடி, 'டின்னர்' நினைப்பில் லயிக்கத் தொடங்கிவிட்டார்.

எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு
எனக்கு கஞ்சி ஊத்துன சாமியாச்சே அவரு!- வடிவேலு
- 'புல்லட் அங்கிள்'