Published:Updated:

எங்கள் ஆசிரியர்

எங்கள் ஆசிரியர்


விகடன் பொக்கிஷம்
எங்கள் ஆசிரியர்
எங்கள் ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எங்கள் ஆசிரியர்
எங்கள் ஆசிரியர்
எங்கள் ஆசிரியர்

தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பன்

'ஏவி. அண்ட் சன்ஸ்' என்பது எங்கள் தந்தை காலத்திலிருந்து ஆரம்பித்து, இன்று வரை நடந்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். 1927-ல் காரைக்குடியில் 'ஏ.வி. அண்ட் சன்ஸ்' இயங்கிக்கொண்டு இருந்தது. அந்த கட்டடத்து மாடி யிலிருந்து 'ஊழியன்' என்ற பத்தி ரிகை வெளியாகிக்கொண்டு இருந்தது. இப்போது 'மஞ்சரி' பத்திரிகையின் ஆசிரியராக இருக் கும் தி.ஜ.ர-தான் அதற்கு ஆசிரியர். ஒருநாள், தி.ஜ.ர-வைத் தேடிக் கொண்டு, ஒரு விளம்பர ஏஜென் சிக்காரர் காரைக்குடிக்கு வந்திருந் தார். ஊழியன் பத்திரிகை விளம் பர சம்பந்தமாக என்று நினைக்கி றேன். அப்போது என்னை அவ ருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் கள். "இவர்தான் எஸ்.எஸ்.வாசன். சென்னையில் கிருஷ்ணா ஏஜென் ஸீஸ் நடத்தி வருகிறார்" என்றார் கள். அதுதான் வாசனுடன் எனது முதல் அறிமுகம்.

எங்கள் ஆசிரியர்

அவரை நான் கவனித்தேன். அப்போது கதர் இயக்கம் பிரபல மாக இருந்தது. வாசன் போட்டி ருந்த சட்டையைப் பார்த்துவிட்டு, "நீங்கள் கதர் போடுவது கிடை யாதோ?" என்று கேட்டேன். உடனே சட்டைப் பையில் இருந்த ஒரு ரசீதை எடுத்துக் காண்பித்தார் வாசன். கதர்க் கடையில் கதர் துணி வாங்கிய பில் அது. "நான் போட்டிருப்பது நைஸ் கதர். யாராவது இப்படிக் கேட்பார்கள் என்றுதான், கையோடு ரசீதையும் வைத்திருக்கிறேன்" என்றார். ஆமாம்! மிக அருமையான கதரை உடுத்தியிருந்தார், அந்த அருமை யான மனிதர். கடைசி வரை கதரை விடாமல் இருந்தவர் அவர்.

'வள்ளி' படம் எடுத்து, 1945-ல் ரிலீஸ் செய்தேன். பாரகனுக்கு வந்து படத்தைப் பார்த்தார் வாசன். வாயார, மனமார பாராட்டினார். அப்போது என் னிடம் வசதி கிடையாது. மிகச் சிறிய கொட்டகையில் ஸ்டூடியோ நடத்தினேன். மிக எளிய ஆரம் பம். எவ்வளவோ இடர்ப்பாடுகள். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு, நான் டைரக்ட் செய்த அந்தப் படத்தை வெளியிட்டேன். வாசன் பாராட்டியபோது, நான் பட்ட சிரமங்களையும், என் ஸ்டூடியோவின் நிலையையும் சொன்னேன். அதற்கு அவர், "மெய்யப்பன், நாம் எப்படிப்பட்ட படம் எடுக்கிறோம், எந்தச் சூழ் நிலையில் நமது ஸ்டூடியோ இருக்கிறது என்பது பற்றி ஜனங் களுக்கு அக்கறை இல்லை. நாம் என்ன கொடுக்கிறோம் என்பது தான் முக்கியம். உங்களுக்கு இருக் கும் இந்தச் சொற்ப வசதியில், நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்கு மிகப் பிரமாதமான காரியம் செய்திருக்கிறீர்கள். என் பாராட்டுக்கள்" என்றார்.

அதே போல் 'நாம் இருவர்' படத்தைப் பார்த்துவிட்டு, "நாம் இருவர் பார்த்தேன். அப்படியே பிரமித்துவிட்டேன்" என்று கடி தம் எழுதினார். சிறப்பு எங்கு இருந்தாலும், தாமாக முன் வந்து பாராட்டும் உயரிய குணம் அவரிடம் உண்டு.

தமிழ்நாட்டுக்குள் கட்டுப்பட்டு இருந்த நாங்கள், இன்று அகில இந்திய ரீதியில் படங்கள் எடுக்கி றோம் என்றால், அது வாசன் காட்டிய வழிதான். அவரின் 'சந்திரலேகா'தான் ஹிந்திப்படம் எடுக்கும் துணிவை எனக்குத் தந்தது. அவருடைய துணிவுதான் எனக்குத் துணை நின்றது. 'நன்கு சிந்தித்துச் செயல்படுதல்' என்பது தான் எனக்கு வாசன் காட்டிய வழி!

எங்கள் ஆசிரியர்
எங்கள் ஆசிரியர்
தொகுப்பு:ரவிபிரகாஷ்