பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

பெரிய விபத்து

தலையங்கம்

"அறுபத்தாறு பேர் கொல்லப்பட்டனர், எழுபது பேருக்குமேல் படுகாயம் அடைந்தனர்" என்ற ரயில் விபத்துச் செய்தியைக் கேட்டு தேசம் முழுவதும் திடுக்கிட்டுவிட்டது.

கடந்த சனிக்கிழமை இரவு, சென்னை மாகாணத்தில் பக்காலா - தர்மாவரம் பகுதியில் மதனப்பள்ளி அருகில் முலகலச் செரிவு, பத்தலாபுரம் என்ற இரண்டு சிறிய ரயில்வே ஸ்டேஷன்களுக்கிடையே சுமார் 11 மணிக்கு ஒரு கூட்ஸ் வண்டியும், பிரயாணிகள் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

பத்தலாபுரம் என்ற ஸ்டேஷனிலிருந்து பிரயாணிகள் வண்டி ஒன்று, முலகலச் செரிவு என்ற ஸ்டேஷனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. வழியில் வண்டி வருவது தெரியாமல், முலகலச் செரிவு ஸ்டேஷனிலிருந்து கூட்ஸ் வண்டி ஒன்று பத்தலாபுரம் செல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் விளைவாக இரண்டு வண்டிகளும் மோதுண்டன.

விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், மற்றும் விபத்தில் காயமடைந்தவர் களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். விபத்தில் காயமடைந் தவர்களை நொறுங்கிய வண்டிகளுக்கு அடியிலிருந்து மீட்பதிலும், அவர்களுக்கு உதவி புரிவதிலும் சித்தூர் ஜில்லா அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும், சுற்றுப்புற ஊர்வாசிகளும் ஆற்றிய தொண்டுக்கு அவர்களைப் பாராட்டுகிறோம்.

இரண்டு வண்டிகள் நேருக்கு நேர் மோதுவது போன்ற விபத்துக்கள் எந்தத் தேச ரயில்வேக்களின் சரித்திரத்திலேயும் மிக மிக அசாதாரணமானதாகும்.

இந்த விபத்து நடந்ததற்குக் காரணம், ஒரு ஸ்டேஷனிலிருந்து இன்னொரு ஸ்டேஷனுக்குச் செய்திகள் அனுப்பமுடியாமல் டெலிபோன் வசதியில் கோளாறு ஏற்பட்டதென்று கூறப்படுகிறது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அந்தந்த ஸ்டேஷன்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வண்டிகள் மூலமாகவே செய்திகள் அனுப்பும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு வழிகளுக்கும் பதிலாக நவீன முறையில் கம்பியில்லாச் செய்திச் சாதனங்களை உபயோகிக் கலாமல்லவா?

தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு