Published:Updated:

இந்தியில் ஒரு நாகேஷ்!

இந்தியில் ஒரு நாகேஷ்!

பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
இந்தியில் ஒரு நாகேஷ்!
இந்தியில் ஒரு நாகேஷ்!
இந்தியில் ஒரு நாகேஷ்!
இந்தியில் ஒரு நாகேஷ்!
இந்தியில் ஒரு நாகேஷ்!

நகைச்சுவைக்கு வடக்கே மகமூத்; தெற்கே நாகேஷ்.

பம்பாய்க்கு நாகேஷ் போனாலும், அதே போல் சென்னைக்கு மகமூத் வந்தாலும் ஒருவருக்கொருவர் தங்கள் வீட்டு விருந்துக்கு அழைத் துக்கொண்டு போகும் அளவுக்கு நட்பு உண்டு.

ஆனால், வீடு வரை நட்பு போயிருக்கிறதோ?

அதுதான் இல்லை. ஏன்?

"நான் வெஜிடேரியன். மகமூத் மிலிட்டேரியன். எனக்கு முட்டை, பட்டை, கிராம்பு வாசனையே ஆகாது. மகமூத்துக்கு அதுதான் மூச்சே!"

நாகேஷ் நடித்த தமிழ்ப் படங்களை மகமூத் பார்த்திருக்கிறாரா?

நிறையப் பார்த்திருக்கிறார். தமிழ்ப் படங்கள் இந்தியாகும்போது நாகேஷ் நடித்த பாத்திரங்களில் நடிப்பது பெரும்பாலும் மகமூத்தான்.

இந்தியில் ஒரு நாகேஷ்!

இவர்களை முதன்முதலில் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தவர் யார்?

"நாகேஷ்! நான் பம்பாய் போகிறேன். விமான நிலையம் வரை கூட வாங்க!" என்று அழைத்தார், காரில் அமர்ந்திருந்த ஒரு நண்பர்.

கட்டிய லுங்கியோடு அவருடன் புறப்பட்டார் நாகேஷ். ஆனால், என்ன ஆச்சரியம்!

லுங்கியோடு பம்பாய்க்கே பறந்து சென்றுவிட்ட நாகேஷுக்கு முதல் வேலையாக ரெடிமேட் உடைகள் வாங்கிக் கொடுத்தார் அவரை அழைத்து வந்த நண்பர்.

இருவரும் ஏர்லைன்ஸ் ஓட்டலில் தங்கியிருந்தபோது, மகமூதை நாகேஷுக்கு அறிமுகம் செய்து வைத்தது அந்த நண்பர்தான்.

அவர்..?

'நெஞ்சில் ஓர் ஆலயத்'தில் நாகேஷை அறிமுகம் செய்து வைத்த டைரக்டர் ஸ்ரீதர்!

இந்தியில் ஒரு நாகேஷ்!
இந்தியில் ஒரு நாகேஷ்!
- குமார்                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு