Published:Updated:

திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!

திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!

பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!
திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!
திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!
திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!

ரு கலை மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக, முருக பக்தரும் அருளிசைச் செல்வருமான

மதுரை மாரியப்பசாமிகளின் தமிழிசை விருந்து நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குக் கலைவாணர் தலைமை வகித்ததால் பெரும் திரளான மக்கள், கட்டுப்பாடு களை மீறி அரங்கத்தில் குவிந்து விட்டனர். ஆகவே, முறையான கட்டண வசூல் செய்ய முடிய வில்லை. கச்சேரி ஓரளவு நடை பெற்றதும், நன்றி கூற மலர் மாலைகளுடன் மேடை ஏறிய கலைவாணர், சாமிகளுக்கு உரிய செலவுத் தொகை கொடுக்க மாநாட்டு அமைப்பாளர்களுக்கு இயலாமல் இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டார்.

ஒலிபெருக்கி முன் வந்து மக்களை நோக்கி, "மாரின்னா என்ன? மழை! அதுதான் நாம இவ்வளவு நேரம் நனைஞ்சுகிட்டு இருந்தோமே, அந்த இசை மழை! அப்புறம் 'அப்பன்' - அதாவது, மாரியப்பன். மாரிக்கு அப்பன் அடைமழை. அதாவது விடாம 'சோ'ன்னு கொட்டிக்கிட்டிருப்பது. சாமிகள் சென்ற ரெண்டு மணி நேரமாகப் பொழிந்து தள்ளினார்களே! சாமி 'மாரியப்பசாமி'தானே! சாமின்னா? எதையும் எதிர்பாராதவர்; விருப்பு வெறுப்பில்லாதவர். எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார். பிறருடைய நல்வாழ்வுக்கு அருள்புரிகிறவர். பிரதி பலனை எதிர்பாராதவர். இனிமே மிச்சமிருக்கிறது கடைசியாக ஒரு கள்ளு. அதாவது, மயக்கம் தருவது கள்ளின் குணம். இசையிலே இதுவரை நாம் மெய்மயங்கி இருந்ததுதான் அது. இப்படி 'மாரியப்பசாமிகள்' என்ற அவருடைய பெயரிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது" என்று பாராட்டுரைகள் கூறி மலர்மாலைகளை அணிவித்தார். ரசிகர்கள் கரகோஷமிட்டுப் பாராட்டினர். கலைவாணர் தந்த சிறு தொகையை சாமிகளும் எந்த மன வருத்தமும் இன்றி, மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டுவிட்டார்.

திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!

நீண்ட நாட்களாக படத் துறையில் ஒன்றாக இருந்த பாகவதர்- கிருஷ்ணன் தொடர்பு, லட்சுமிகாந்தன் கொலை வழக் கில் கைதாகி, சிறை சென்று வந்த பின்பு விட்டுப்போய்விட்டது என்றும், அவர்களுக்குள் சண்டை என்றும் வெளியே ஒரு பேச்சு இருந்தது. அதற்கேற்றாற்போல் இருவரின் சந்திப்பும் இல்லாமல் இருந்தது.

கலைவாணர் வீட்டுத் திரு மணம் ஒன்றுக்கு முன்னறிவிப் பின்றி பாகவதர் வருகை தந்த போது, அவர் தோளில் கையிட்டு அணைத்தவாறு மேடைக்கு அழைத்து வந்து வரவேற்றுப் பேசத் தொடங்கினார் கலைவாணர்...

"எனக்கும் பாகவதருக்கும் சண்டை என்றும், சிறையிலிருந்தே அது ஆரம்பித்துவிட்டது என்றும், அதனால்தான் ஒருவரை ஒருவர் சந்திப்பது இல்லை என்றும், இத்தனை நாளாகத் திரித்து வந்த கயிறு இப்போ அறுந்துபோச்சு! நாங்கள் பிரிக்கப்பட முடியாதபடி ஒன்றானவர்கள். அது எம்.கே.டி-ங் கிற மூன்று எழுத்திலேயே அடங் கியிருக்கு. இன்னும் தெளிவாகச் சொல்றேன். 'எம்'னா மதுரம்; 'கே'ன்னா கிருஷ்ணன்; 'டி'ன்னா தியாகராஜ பாகவதர்."

திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!
திரிச்ச கயிறு அறுந்துபோச்சு!
- ரேவதி                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு