பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
திரிசூலம்
திரிசூலம்
திரிசூலம்
திரிசூலம்
திரிசூலம்

பெரிய தலைவாழை இலை போட்டு, அதில் வகை வகையான அயிட்டங்களைப்

பரிமாறுவதுபோல, ஒரு சிவாஜிக்கு மூணு சிவாஜியை அஸ்திவாரமாக வைத்து சோகம், பாசம், காதல், நகைச்சுவை என்று விருந்தைக் கொடுத்துத் திணற அடித்திருக்கிறார் கள்.

மூன்று வேடங்களில் தோன்றும்போது மூன்றையும் வெவ்வேறு விதங்களில் நடித்துக் காட்டியிருக்கிறார் சிவாஜி. மூன்று என்ன, முன்னூற்று எட்டு பாத்திரங்களைக் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், சளைக்காமல் சவாலை ஏற்பவராயிற்றே அவர்!

சவுக்கால் தன்னை அடித்துக்கொள்ளும் மாமாவை, 'நடந்த விவரத்தைச் சொல்லுங்க மாமா...' என்று ரீனா கேட்கும்போது, அது மனதுக்குள்ளேயே புதைந்து கிடக்க வேண்டிய ரகசியம் என்பதை எவ்வளவு அநாயாசமாகக் கைகளாலேயே 'ஆக்ஷன்' காட்டுகிறார் சிவாஜி!

திரிசூலம்

கிடைத்த சில காட்சிகளில் நடிகர் திலகத்துக்கு சவால் விட்டு நடித் திருக்கிறார் புன்னகை அரசி. அந்த டெலிபோன் காட்சி ஒன்று போதுமே! அந்தக் காட்சியில் கழுத்து நரம்புகள் புடைக்க, இன்பக் கண்ணீர் பெருக்கி, விம்மி, பொங்கி, தணிந்து.. கணவனைப் பல வருடங்கள் பிரிந்துவிட்டு, மீண்டும் அவரோடு இணையும் ஒரு குடும்பப் பெண்ணைத்தான் பார்க்கிறோமே தவிர, விஜயாவை அல்ல! மறக்கமுடி யாத இந்தக் காட்சியில் சிவாஜியும் உணர்ச்சிப் பிழம்பாகி, நம்மைப் புல்லரிக்க வைத்துவிடுகிறார்.

திரிசூலம்

மாஸ் அப்பீலை மனத்தில் கொண்டு கொலை, கொள்ளை, நகைத் திருட்டு, ஆள் மாறாட்டம், நடனம், சண்டை என்று பல்சுவை மசாலாக்கள் தூவப்பட்டிருக்கும் இந்தக் கதை பெங்களூரிலிருந்து ஹைதராபாத் வழியாகச் சென் னைக்கு வந்திருக்கிறது. திரைக்கதையிலுள்ள ஓட்டைகளையெல் லாம் அடைக்க வேண்டுமென் றால் குறைந்த பட்சம் ஐந்து டன் சிமென்ட்டாவது தேவைப்படும்!

பெரிய பிஸினஸ்மேனான ராஜசேகர், தற்செயலாக நடந்த ஒரு கொலைக்காகப் பயந்து அப்படி விழுந்தடித்துக்கொண்டு ஓடுவதை நம்பமுடியவில்லை. அதே போல, ரயில்வே ஸ்டேஷனில் அவரைப் பிடிப்பதற்கென்றே வேலைமெனக்கெட்டு வந்திருக் கும் போலீஸ்காரர்கள் ஏதோ குடியரசு தின விழா மாதிரி அணி வகுத்து நிற்கிறார்கள். செயற்கை யிலும் செயற்கை!

பலாச்சுளையைத் தேனில் தோய்ப்பதுபோல் பளிச்சென்ற வண்ணக் கலவையில் காமிரா வைத் தோய்த்தெடுத்திருக்கி றார்கள். இரண்டு சிவாஜிகள் ஒரே ஷாட்டில் வருவது நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது.

திரிசூலம்
திரிசூலம்
- விகடன் விமரிசனக்குழு                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு