பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

மதுவுக்கு ஒரு முற்றுப்புள்ளி!

துவிலக்கு நீடிக்குமா? நீடிக்காதா?

தலையங்கம்

இடைக்காலத் தேர்தலில் தி.மு.க. முன்பைக்காட்டிலும் அதிக பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, பழைய கேள்விக்குறி மிகப் பெரியதாகியிருக்கிறது.

தமிழகத்தில் மதுவிலக்கு நீடித்தாகவேண்டிய அவசியத்தை விகடன் வற்புறுத்த விரும்புகிறான்.மது அருந்துவது பாவம், அது காந்திய நெறிகளுக்குப் புறம்பானது என்பதாலோ, உடல் நலம் கெடும், சமூக ஒழுக்கம் சீரழியும் என்ற காரணங்களுக்காகவோ நாம் இவ்வாறு கூறவில்லை. 'எல்லோரும் குடிக்கலாம்' என்று கள்ளுக்கடைகளைத் திறந்துவிட்டால், அதனால் ஏழைக் குடும் பங்கள் பெரும் துயருக்கு ஆளாகும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் விகடன் மதுவிலக்கைத் தீவிரமாக ஆதரிக்கிறான்.

'அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாதபோது, தமிழக அரசு மட்டும் நட்டம் அடைய வேண்டுமா?' என்று முதலமைச்சர் அடிக்கடி கேட்பதில் உள்ள நியாயமும் நமக்குப் புரிகிறது.ஆனால், அதிக வருமானம் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக, ஏழைகளின் இல்லங்களில் ஒளி குன்றும்படி செய்யலாமா?

கள்ளுக்கடைகளைத் திறந்துவிட்டால், ஏழையின் வருவாயில் பெரும் பகுதி அங்குதான் போய்ச் சேரும். அத்தியாவசியத் தேவையான அரிசி வாங்கப் பாடுபட்டுச் சம்பாதித்த கூலிப் பணம், கள்ளுக்கடையிலேயே கரைந்து போகும். அதாவது, அரசு மறைமுகமாக, ஏழைகளை மேலும் ஏழைகளாக்கிக்கொண்டு இருக்கும். சமூகத்தின் அடித்தளத்தில் இருப்பவர்களுக்காகவே பணிபுரியும் தி.மு.க. அரசு, இப்படி அவர்களின் நலனுக்கு எதிராக ஒரு காரியத்தில் ஈடுபடாது என்று நம்புகிறோம்.

மதுவிலக்கினால் அரசுக்கு ஏற்படும் நிதி நட்டத்தைப் பொருட்படுத்தாமல், மத்திய அரசிடமிருந்து உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், 'மதுவிலக்கைக் கைவிடமாட்டேன்' என்ற துணிச்சலான முடிவெடுக்கும் நெஞ்சுரம் நம் முதலமைச்சருக்கு உண்டு என்று நிச்சயமாக விகடன் நம்புகிறான்.

தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு