பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
எப்போதும் வெள்ளி!
எப்போதும் வெள்ளி!
எப்போதும் வெள்ளி!
எப்போதும் வெள்ளி!

நாடகங்கள் நடக்கும்போது அரங்கத்தின் பின்னால் உள்ள பகுதியில், சாய்வு

நாற்காலியில் உட்கார்ந்து வெற்றிலை போட்டபடி, நாடகம் நடப்பதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட் டுத் தனது பகுதி வரும்போது சிறிதும் தாமதியாமல் வந்து கலந்து கொள்வார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

ஒருமுறை, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது, நாற்காலியிலேயே சற்று அயர்ந்து தூங்கி விட்டார். காட்சியில் கலந்து கொள்ள அவர் வராததைக் கண்டு திடுக்கிட்டு, பின்னால் சென்று அவரை எழுப்பினர். தூக்கக் கலக்கத்தோடு அரங்கத்திற்கு வந்தவர், அருகில் நின்ற நடிகர் ராஜகோபாலிடம் ஆத்திரப்பட் டுக் கூறும் வகையில், "உன் பல்லு முப்பத்தொண்ணையும் உடைச்சுடுவேன்" என்று சொன்னார்.

எப்போதும் வெள்ளி!

முப்பத்திரண்டுக்குப் பதில் முப்பத்தொன்று எனச் சொன்ன தால், மக்கள் அதை ரசித்துச் சிரித்தனர். இது நாடகத்திலுள்ள வசனம் என்றும் அவர்கள் நம்பி னர்.

சிரிப்பொலி அடங்கியதும் ராஜகோபால், "ஆமாம், அந்த பாக்கி ஒரு பல்லு என்னாச்சு?" என்று கேட்டார். இதற்கும் மக்கள் சிரித்தார்கள். இது கலைவாணர் எதிர்பாராத கேள்வி!

ஆனாலும், கலைவாணர் தயங்காமல் சட்டென்று "அந்த பாக்கி ஒரு பல்லிலே வலி வந்து நீ கஷ்டப்பட்டுக்கிட்டே இரு!" என்று சொன்னார். அரங்கில் மேலும் சிரிப்பு!

பழனியில் கலைவாணர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்குத் தஞ்சை ஜில்லாவிலிருந்து நாதஸ்வரக் குழு வரவழைக்கப்பட்டிருந் தது. கச்சேரி முடிந்து நாதஸ்வரக் குழுவினர் காலை 3 மணி ரயிலுக் குப் புறப்படுமுன் கலைவாணரை நேரில் சந்தித்து விடைபெற்றனர். கலைவாணர் எப்போதும் ஒரு பெரிய வெள்ளி வெற்றிலைப் பெட்டியைத் தம்முடன் வைத்தி ருப்பார். "அண்ணே, உங்க ஞாப கமா என்னிக்கும் மறக்காம இருக்கிறதுக்கு ஏதாவது ஒண்ணு உங்க கையாலே வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இந்த வெத்திலைப் பெட்டியைக் கொடுங்களேன். உங்க நினைவா வெச்சுக்கறேன்" என்று கேட்டார் நாதஸ்வர வித்வான்.

கலைவாணரும் சற்றும் தயங்காமல் வெற்றிலைப் பெட்டியைக் கொடுத்துவிட்டார். சாமர்த்திய மாக ஒரு வெள்ளி வெற்றிலைப் பெட்டியை வாங்கிவிட்டோம் என்ற பெருமிதம் வித்வானுக்கு.

இந்த விஷயம் தெரியவர, நிர்வாகி ஒரு புது வெற்றிலைப்பெட்டியை வாங்கிக்கொண்டு போய் கலைவாணரிடம் கொடுத்து, "உங்க வெள்ளி வெற்றிலைப் பெட்டியைக் கொடுத்திட்டீங் களா?" என்று கேட்டார். "அது வெறும் வெள்ளி இல்லேப்பா. 'எப்போதும் வெள்ளி'. அதாவது எவர்ஸில்வர்!" என்றார் கலைவா ணர் சிரித்துக்கொண்டே. "எப் போதும் வெச்சிருப்பீங்களே, அந்த ஒரிஜினல் வெள்ளிப்பெட்டி எங்கே?" என்று கேட்டார் நிர்வாகி.

"சென்னையிலே மாடிப் படிக்கட்டிலே இறங்கி வரும்போது, கை தவறிக் கீழே விழுந்து நசுங்கிப் போச்சு. உடனே ஒரு எவர்ஸில்வர் பெட்டி வாங்கினேன். ஒரிஜினல் வெள்ளிப் பெட்டி வீட்டிலேதான் இருக்கு" என்றார் கலைவாணர்.

- ரேவதி

எப்போதும் வெள்ளி!
எப்போதும் வெள்ளி!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு