Published:Updated:

தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!

தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!

பிரீமியம் ஸ்டோரி

விகடன் பொக்கிஷம்
தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!
தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!
தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!
தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!
தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!

சென்னை போலீஸ் டிராஃபிக் உதவி கமிஷனராகப் பணியாற்றி விட்டு, தற்போது

சென்னை ராஜ்ய போக்குவரத்து பிளானிங் சூபரின்டென்டெண்ட் டாகப் பணியாற்றும் கே.ராதாகிருஷ்ணன் அவர்கள், போக்குவரத்து விஷயத்தில் நன்கு அனுபவம் பெற்றவர். அவரது இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, சாலைப் பாதுகாப்பில் நாம் அதிக அக்கறை செலுத்தவேண்டியது எவ்வளவு அவசியம் என்பது புலனாகும்.

பளபளக்கும் துத்தநாகத் தகடுகளை ஏற்றியபடி, வெகு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது ஒரு லாரி. பின்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றில், ஓர் இளைஞர் பயணம் செய்து கொண்டிருந்தார். குலுக்கலுடன் சென்றுகொண்டிருந்த லாரியிலிருந்து திடீரென்று ஒரு தகடு சரிந்து விழுந்து, பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்த அந்த இளைஞரின் கழுத்தைச் சீவிவிட்டது. ஆமாம்! இளைஞரின் தலை துண்டாக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், மோட்டார்சைக் கிள் மட்டும் அதே வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. தலையில்லாத உடல் ஓட்டிச் சென்ற அந்த மோட் டார் சைக்கிள், லாரியை 'ஓவர்டேக்' செய்துகொண்டு ஓடியது. எதிரே வந்த ஒரு காரோட்டியின் கண்ணில் இந்தக் காட்சி பட்டுவிட்டது. அவ்வ ளவுதான்..! அவர் மிரண்டு போய் 'ஸ்டீயரிங்கை' விட்டுவிட்டார். சாலை ஓரத்தில் நின்றிருந்த ஏழு பேர் மீது வண்டி ஏறிவிட்டது. அனைவரும் ஸ்தலத்திலேயே மாண்டுவிட்டனர். கண நேரத்துக்குள் இப்படி மாபெரும் விபத்து நிகழ்ந்துவிட்டது.

தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!

வெளிநாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது! பத்திரிகையில் படித்திருக்கிறேன்; பலரும் படித்திருப்பார்கள். அத்தகைய ஒரு பயங்கர விபத்து இங்கேயும் நடந்திருக்கிறது. கேட்டாலே உடல் சிலிர்க்கும்.

அமைந்தகரை அருகே, 1960-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ம் தேதி ஒரு கொடூர விபத்து நடந்தது. செய்தி கிடைத்ததும் போலீஸார் ஸ்தலத்திற்கு விரைந்தனர். அங்கே, இரண்டு மனித உயிர்கள், நான்கு கால்நடை உயிர்கள் பறிபோயிருந்தன.

இரண்டு மாட்டு வண்டிகளுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒரு லாரிதான் அந்தக் கொடுமையை நிகழ்த்தியிருந்தது.

இதில் விசித்திரம் என்னவென்றால், நாங்கள் அந்த லாரியைச் சென்று பார்த்தபோது, லாரிக்குள் டிரைவர் 'சீட்' அருகே, துண்டிக்கப்பட்ட ஒரு மனிதத் தலை மட்டும் தனித் துக் காணப்பட்டது. என்னதான் போலீஸ் ஊழியனானாலும், அக்காட்சி மனத்தைக் கலக்கத் தான் செய்தது. இருப்பினும் கலக் கத்தை வெளிக்காட்டிக் கொள் ளாமல், நிலைமையை ஆராய்ந் தேன். லாரியின் இரு பக்கக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. முன்னால் உள்ள 'விண்ட் ஸ்க்ரீன்' கண்ணாடியும் மூடப்பட்டே இருந்தது.

லாரிக்காரர் வண்டியின் மீது மோதியிருக்கிறார்; விபத்து நிகழ்ந்திருக்கிறது. 'அது சரி, இந்தத் தலை எப்படி உள்ளே டிரைவர் 'சீட்' அருகே வந்தது? அது அப்படி வருவதற்கு வழியே இல்லையே! ஒருவேளை ஏதேனும் சதியோ! கொலையோ! கொலைக் குப் பின்பு நிகழ்ந்த போலி விபத்தோ?' இப்படி எண்ணற்ற சந்தேகங்கள்.

நாங்கள் விபத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்து, அந்த மர்மத் தைக் கண்டுபிடித்தோம். அது, லாரியின் மோதலால் ஏற்பட்ட கொடூரம்தான் என்பதைக் கோர்ட்டுக்கு நிரூபித்துக் காட்டி னோம். அதற்கான 'மாடல்'களைத் தயாரித்து, விபத்தை மீண்டும் ஒரு முறை 'நடத்தி'க் காட்டினோம்.

அது இப்படித்தான் நிகழ்ந்திருக்கவேண்டும்.

அதாவது... ஒரு மாட்டு

தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!

வண்டி போகிறது. அதைத் தள்ளியபடி, ஓர் ஆள் நடக்கிறான். அவனுக்குப் பின்னே இன்னொரு வண்டி. அந்த வண்டியைத் தள்ளியபடி இன்னொரு ஆள். இருட்டு நேரம். களைத்துப்போய் நடந்துகொண் டிருந்தார்கள் அவர்கள். அப்போது, 40 மைல் வேகத்தில் ஒரு லாரி பின்னால் வந்தது. டிரைவர் அரைத் தூக்கத்தில் இருக்கிறார். முன்னால் சென்றுகொண்டிருக்கும் மாட்டு வண்டி அவர் கண் ணில் படவில்லை. மிக நெருக்கத் தில் வந்த பிறகு, சட்டென்று 'பிரேக்' போட்டிருக்கிறார், பலிக்க வில்லை. லாரி, இரண்டாவது மாட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றவர்மீது மோதி விட்டது. சரியாக அவர் கழுத்து அருகே மோதி இருக்கிறது. அந்த வேகத்தில், அந்த மாட்டு வண்டி யின் பின்னால் இருந்த தகரத் தகடு பெயர்ந்து, சரிந்து, அவர் கழுத்துக்கு நேராக விழுந்திருக்கிறது. ஒரு பக்கம் லாரியின் முகப்பு, இன்னொரு பக்கம் மாட்டு வண்டியின் தகரத் தகடு. இந்த இருபுறத் தாக்குதலால் அவர் தலை துண்டிக்கப்பட்டு விட்டது. அப்படி வெட்டப்பட்ட தலை, லாரியின் 'பானெட்' மீது உருண்டு பயணம் செய்து, சற்றே திறந்துவைக்கப்பட்டிருந்த 'விண்ட் ஸ்கிரீன்' கண்ணாடி வழியாக லாரியின் உள்ளே நுழைந்து, டிரைவர் அருகாமையில் வந்து அமர்ந்திருக்கிறது. தலை வந்த வேகத்தில், திறந்திருந்த 'விண்ட் ஸ்க்ரீன்' கண்ணாடி மூடிக்கொண் டிருக்கிறது. மண் லாரியானதால், ரத்தப் பெருக்கம் மண்ணால் இழுக்கப்பட்டுவிட்டது. டிரைவர் பல்லாயிரம் பேய்கள் அறைந்தவர் நிலையை அடைந்து, லாரியை நேராகச் செலுத்தி, இரண்டு வண்டிகளுக்குள்ளும் நுழைந்து, நான்கு எருதுகளையும், இரண்டு நபர்களையும் நசுக்கிவிட்டார். பின்னர் பயந்தடித்துக்கொண்டு ஓடியும்விட்டார்.

இத்தனையும், நாங்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த உண்மைகள். அந்த விபத்தையே மீண்டும் ஒரு முறை மாடலாக நடத்திக் காட்டி, கோர்ட்டுக்கு நிரூபித்த உண்மைகள்.

அண்மையில், ஜனாதிபதி கென்னடியின் மரணம் குறித்து, அமெரிக்க போலீஸார் அந்த நிகழ்ச்சியை மீண்டும் 'நடத்திக் காட்டி' பல உண்மைகளைச் சேகரித்திருக்கிறார்கள். அதைப் படித்த போது, எனக்கு, நாங்கள் நடத்திய அந்தப் பயங்கர விபத்து 'ஒத்திகை' தான் நினைவுக்கு வந்தது.

சாலைப் போக்குவரத்தில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை இந்த விபத்துகள் வலியுறுத்துகின்றன.

தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!
தலை இல்லாதவன் ஓட்டிய மோட்டார் சைக்கிள்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு