பிரீமியம் ஸ்டோரி
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

பிரபல மிருதங்கச் சக்கரவர்த்தி பாலக்காடு மணி ஐயர் மறைந்தார். அப்போது விகடன் எழுதிய தலை யங்கத்திலிருந்து...

பாரதமணி

பாரதத்தின் தென்கோடியில் உள்ள பாலக்காட்டில் பிறந்து 'பாலக்காடு மணி' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுத் திகழ்ந்த மிருதங்க வித்வான், தன் கலைத் திறனால் பாரதத்தின் பெருமையை உயர்த்திய பாரதமணியாவார்.

பக்கவாத்தியத்திற்கு மதிப்பும் மரியாதையும் சம்பாதித்துத் தந்தவர் அவர். மகாவித்வான்கள்கூட மணியின் பக்கவாத்தியத்திற்குப் பாடவேண்டும் என்று விரும்பு வார்கள். தனி ஆவர்த்தனத்தின் போது சோடா குடிக்கவும், வெற் றிலை சீவல் போடவும் ரசிகர்கள் வெளியே செல்வது வழக்கம். அந்நிலையை மாற்றி, 'தனி'யின் போது வெளியிலிருப்பவர்களைப் பரபரப்புடன் உள்ளே ஓடிவரச் செய்து சரித்திரம் படைத்தவர். உலக மகா இசை விற்பன்னர்கள் பலர், மணி வாசிக்கும்போது திகைத்துப் போய்ப் பணிவுடன் கை கட்டி அமர்ந்து கேட்ட நிகழ்ச்சிகள் பலப்பல!

காலப்பெட்டகம்

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக லய லட்சண வளத்தோடு வாசித்து, கேட்போரைப் பிரமிக்கவைத்து, வானுயர் புகழ் எய்தி, கர்னாடக இசையுலகில் தனக்கென்று தேடிக் கொண்ட இடத்தை யாருமே நெருங்கமுடியாத தன்னிகரில்லாத் தனிப்பெரும் கலைஞனாக வாழ்ந்து, மாபெரும் உலகக் கலைஞர்களின் வரிசையில் சகல கௌரவங்களோடு வீற்றிருந்த மாமேதை, பாலக்காடு மணி ஐயர். அவர் மறைந்தாலும், தன் விரல் நுனிகளில் அவர் எழுப் பிய நுட்பமான இசையலிகள், ரசிகர்களின் உள்ளங்களில் கால மெல்லாம் எதிரொலித்துக்கொண்டு இருக்கும்.

கவிஞர்களில் ஒரு சகாப்தமாக விளங்கிய கவியரசு கண்ணதாசன் மறைந்தது இந்த ஆண்டில்தான். அப்போது விகடன் வெளியிட்ட தலையங்கத்திலிருந்து...

கண்ணிலே நீர் எதற்கு..?

மகாகவி பாரதிக்குப் பிறகு இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராக விளங்கிய கண்ணதாசனின் மறை வைக் குறித்து, 'போனால் போகட் டும் போடா, இந்த பூமியில் நிலை யாய் வாழ்ந்தவர் யாரடா?' என்று நம்மால் இருக்கமுடியவில்லை. மகத் தான ஒரு வேதாந்த உண்மையை மிக எளிதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் அவர். ஆனால், இந்த இழப்பை அத்தனை எளிதாக நம் உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுக் கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலான காலத்தை கண்ணதாசனின் சகாப்தம் என்று கூறலாம். தமது பாடல்களாலும், கவிதைகளாலும், கதை கட்டுரைகளாலும், மேடைப் பேச்சாலும், ஆத்திகப் பிரசாரத்தாலும் தேன் தமிழுக்குத் தீஞ்சுவை கூட்டி, தான் மகிழ்ந்ததோடு தமிழ்ச் சமுதாயத்தை யும் மகிழவைத்தவர் நம் கவியரசு.

'கண்ணிலே நீர் எதற்கு?' என்று கேள்வி கேட்டு, 'காலமெல்லாம் அழுவதற்கு' என்று பதிலும் கூறிய கவிஞனுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.

ராஜா வீட்டுக் கல்யாணம்!

காலப்பெட்டகம்

ராஜா வீட்டுக் கல்யாணம் என்றாலே, கொண்டாட்டம்தான்; கோலாகலம்தான்! அதிலும், பிரிட்டிஷாரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தீவிரமான ராஜ விசுவாசிகள். அவர்கள் ஒவ்வொருவரும் இளவரசர் சார்லஸ் - டயானா ஸ்பென்ஸர் திருமணத்தைத் தங்கள் வீட்டு விசேஷம் போலவே கருதிப் பூரித்துப்போவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

சார்லஸ்-டயானா படம் பொறித்த சிகரெட் லைட்டர்கள், ஆஷ்டிரேக் கள், கப் அண்ட் சாஸர், டீ ஸ்பூன் - இப்படிப் பல பொருட்கள் லண் டன் கடைகளில் வந்து குவிந்திருக் கின்றன. திருமணமானதும், சார் லஸும் டயானாவும் ஊர்வலம் போகும் பாதையிலுள்ள ஆபீஸ் கட்டடங்களில் ஜன்னலோர இடங் கள் இப்போதே 'அட்வான்ஸ் புக்கிங்' செய்யப்பட்டுள்ளன.

சார்லஸ் பப்ளிக் ஸ்கூலில் படித்தவர். அதுவும், ஸ்காட்லாந்திலுள்ள கார்டன்ஸ்டௌன் பள்ளியில் கட் டுப்பாடுகள் அதிகம். காலையில் பச்சைத் தண்ணீரில் குளிக்க வேண் டும்; வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன் - மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும் - பள்ளி மைதானத்தில் ஓடியாக வேண்டும்... இப்படிக் கண்டிப்பான சூழ்நிலையில் பயின்று, பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற வர். ஒரு ரகசியம்: அரச குடும்பத் திலேயே முதல் பல்கலைக்கழகப் பட்டதாரி - சார்லஸ்தான்!

டயானாவும் போர்டிங் பள்ளியில் படித்தவர்தான். ஸ்போர்ட்ஸில் நிறையவே ஆர்வம் உண்டு. 16 வயதில் ஸ்விட்ஸர்லாந்தில் பிரெஞ்சு, சமையல், தையல், தட்டெழுத்து அத்தனையும் கற்றுக்கொண்டார்.

சார்லஸுக்கு ஏற்கெனவே சில பெண்களைப் பார்த்தார்கள். அதில் ஃபியோனா வாட்ஸன் என்பவர், பென்ட்ஹவுஸ் பத்திரிகைக்கு 'ஒரு மாதிரி'யாக போஸ் கொடுத்ததற்காக, தள்ளுபடி செய்யப்பட்டார். டேவினா ஷெஃபீல்ட் என்ற பெண்ணுக்கு இன்னொரு காதல் விவகாரம் இருந்த தால் அதுவும் அவுட்! டயானாவின் மூத்த சகோதரி ஸாராவுக்கும் அதிர்ஷ் டம் அடிக்கவிருந்தது. ஆனால் அவர், "சார்லஸை நான் காதலிக்க வில்லை. நான் காதலிக்காத ஆசா மியை - அவன் குப்பைக்காரனாக இருந்தாலும் சரி, இங்கிலாந்து மன் னனாக இருந்தாலும் சரி - கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன்!" என்று ஒருமுறை சொல்லி, அது பத்திரிகை களிலும் வெளியாகிவிட்டது. ஸாராவுக்கும் சான்ஸ் குளோஸ்!

டயானாவுக்கு உறவு என்று பார்க்கப்போனால் பெரிய பெரிய புள்ளிகளெல்லாம் சிக்குவார்கள். அமெரிக்க ஜனாதிபதிகள் ஜார்ஜ் வாஷிங்டன், கால்வின் கூலிட்ஜ், ரூஸ்வெல்ட், தத்துவமேதை பெர்ட் ராண்ட் ரஸ்ஸல், டிக்ஷனரி புகழ் வெப்ஸ்டர், சினிமா புகழ் ஹம்ப்ரி போகார்ட்...

ஜூலை 29-ம் தேதி இங்கிலாந்தில் சார்லஸ்-டயானா திருமணம். அவ ரவர்கள் சக்திக்குத் தகுந்த மாதிரி கமர்கட் முதல் பாதாம் அல்வா வரையில் வாங்கிச் சாப்பிட்டு, வாய் இனிக்க அரச தம்பதியை வாழ்த்து வோம்!

- வானா

நவரச திலகம் முத்துராமன் மறைந்தது இந்த ஆண்டுதான்.

ஜென்டில்மேன்

காலப்பெட்டகம்

அக்டோபர் 18-ம் தேதி பெங்களூரில் நடைபெற இருந்த கால்பந்து போட்டியில் தானும் விளையாடு வதாக இருந்தார் நடிகர் முத்துராமன். அதில் பழைய ஒலிம்பிக் வீரர்கள் சிலரும் விளையாடுவதால், தன்னு டன் ஆட இருந்த நடிகர் ஸ்ரீகாந்த் திடம், "வெடரென்ஸ் எல்லாம் ஆடறாங்க. அவங்களோடு நாம ஆடறது நமக்குப் பெரிய பெருமை" என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார் முத்துராமன். அவர் விளையாடும் முன், அவரை காலன் விளையாடிவிட்டான்.

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாதவண்ணம், பல விளையாட்டு வீரர்களுக்குப் பண உதவி செய்திருக்கிறார் முத்துராமன்.

He is a perfect gentleman. கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்தான் எனக்கு இப்ப நினைவுக்கு வருது. 'சாவே உனக்கொரு சாவு வராதா'ன்னு கேட்கத் தோணுது" என்றார் டைரக்டர் ஸ்ரீதர்.

- பாலா

வம்பு நேரம்!

'துக்ளக்' பத்திரிகையில் அரசியல் கட்சிகளைப் பற்றியும், அதில் உள்ள குறைகளையும், உட்கட்சிப் பூசல்களையும் வெளிப் படையாக வெளியிடும் கட்டுரை யன்று வருகிறது. அந்தத் தகவல் களை அந்தக் கட்சியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவரே மனம் விட்டுச் சொன்னதாகக் கட்டுரை யின் ஆரம்பத்தில் பெரிய எழுத் துக்களில் மின்னுகிறது. சம்பந்தப் பட்ட கட்சிகளில் ஏற்கெனவே இருக்கும் பூசல்களுடன், இந்தக் கட்டுரையாலும் தகராறுகள் அதிகம் ஏற்படுகின்றன.

தி.மு.கழகத்தைப் பற்றி விமரிசனக் கட்டுரை வந்தவுடன், அந்தத் தகவல்களைச் சொன்ன 'துரோகி' யார் என்று தேடும் படலம் நடந்தது. பாண்டிச்சேரியில் நடந்த தி.மு.கழக பொதுக் குழுக் கூட்டத்தில், கே.சுப்பு தான் அவற்றைச் சொன்னவர் என்று கூறி, அவர் தாக்கப்பட்டார். ரசாபாசமான விவகாரங்கள் நடந்தன.

இப்போது மார்க்கெட்டுகளில் காய்கறிகள் விற்கும் விலைகளைப் பார்த்தாலே 'பகீர்' என்கிறது.

கொத்தவால்சாவடி விலை: (ஒரு கிலோ)

பீன்ஸ் ரூ. 2-00

பீட்ரூட் ரூ. 2-00

கத்தரிக்காய் ரூ. 1-00

முட்டைகோஸ் ரூ. 2-00

கேரட் ரூ. 3-00

சேப்பங்கிழங்கு ரூ. 1-80

சேனைக்கிழங்கு ரூ. 0-80

வெண்டைக்காய் ரூ. 2-00

வெங்காயம் (பெரியது) ரூ. 0-80

வெங்காயம் (சிறியது) ரூ. 1-00

உருளைக்கிழங்கு ரூ. 1-80

தக்காளி ரூ. 2-00

நர்ஸரி பள்ளி நடத்துகிறேன் பேர்வழி என்று சந்து பொந்துகள் உள்ள தெருக்களில், காற்று எளிதில் புகாத வீடுகளில், கண்டவர்களெல் லாம் நர்ஸரி பள்ளிகளை ஆரம்பிக் கிறார்களே, இது எப்படி? குழந் தைகள் படிக்கும் இடம் வசதியாக இருக்கிறதா, காற்றோட்டமாக இருக் கிறதா என்றெல்லாம் கல்வி இலாகா வினர் 'செக் அப்' செய்யாமல் எப்படி அனுமதி கொடுக்கிறார்கள்?

காலப்பெட்டகம்

"கடவுளை எதிர்த்த எந்த ஆட்சியும் முன்னுக்கு வந்ததில்லை. மதுரையில் தமிழ் மாநாடு சிறப்பாக நடத்திய எம்.ஜி.ஆருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அதில் 'காஞ்சி காமகோடி சுவாமிகளின் ஆசிப்படி தமிழ் மாநாடு நடத்தினேன்' என்று அவர் கூறினார். அவர் பொன்மனச் செம்மல். பரமசிவனோ செம்மனச் செம்மல்."

காலப்பெட்டகம்

"உலகம் எங்கே போகிறது? மடங்கள்கூட கெட்டுப் போய்விட்டன. டைப் அடிக்க இளம் பெண்ணை மடத்தில் அமர்த்துகிறார்கள். இதனால் ஏற்படும் தொல்லை எவ்வளவு?"

- அரியலூர் காமாட்சி அம்மன் கோவில் கூட்டத்தில் வாரியார்.காலப்பெட்டகம்

சிறுகதைகளுக்கும், தொடர்கதைகளின் ஆரம்ப அத்தியாயங்களுக்கும் ஓவியர்கள் வரைந்த படங்களே, இந்த ஆண்டு வெளியான ஆனந்தவிகடன் அட்டைப் படங் களில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெறுவதையட்டி, இந்த ஆண்டு ஆனந்தவிகடன் வெளியிட்ட முதல் இதழ் (4.1.81 தேதியிட்ட இதழ்) தமிழ்ச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. தவிர, வாரந்தோறும் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, உ.வே.சுவாமிநாதய்யர் எனத் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களின் வாழ்க்கை யில் நடந்த நிகழ்ச்சிகள் படக் கதையாக வெளியிடப்பட்டுள்ளன. படங்கள்: மணியம்செல்வன்.

பரணீதரனின் மிகப் பிரபலமான 'திருத்தலப் பெருமைகள்' கட்டுரைத் தொடர் இந்த ஆண்டில்தான் வெளியாயிற்று.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

ஓவியர் அரஸ் இந்த ஆண்டிலிருந்துதான் ஆனந்த விகடனில் படங்கள் வரையத் தொடங்கியுள்ளார். தி.மதுசூதனன் எழுதிய 'சின்னச் சின்ன வேதனை கள்' என்னும் சிறுகதைக்கு அரஸ் வரைந்த படம் இங்கே.

பாரதியார் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது புரட்சிக் கருத்துக்களை அடிப் படையாகக் கொண்ட சிறுகதைகளை 'பாரதி சிறுகதை' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது ஆனந்தவிகடன். சுஜாதா, ஸ்ரீவேணுகோபாலன், மாலன், பாலகுமாரன் உள்ளிட்ட பல முக்கிய எழுத்தாளர்கள் 'பாரதி சிறுகதை'கள் எழுதியுள்ளனர்.

காலப்பெட்டகம்

புகைப்பழக்கத்துக்கு எதிரான அட்டைப்படம் போலவே, மதுப்பழக்கத்துக்கு எதிராக விகடன் வெளியிட்ட அட்டைப்படமும் வாசகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு