Published:Updated:

தில்லு முல்லு

தில்லு முல்லு
பிரீமியம் ஸ்டோரி
News
தில்லு முல்லு

'மசாலா' மணக்கும் இந்தியைத் தான் இறக்குமதி செய்யவேண்டும் என்றில்லாமல், தமாஷாக பம்பாயைத் தழுவியிருக்கிறீர்கள்! இருந்தாலும், நீங்களுமா இந்த இறக்குமதி வியாபாரத்தில் ஈடு படவேண்டும்?


விகடன் பொக்கிஷம்
தில்லு முல்லு
தில்லு முல்லு

டியர் டைரக்டர்,

கொஞ்சம் திரும்பி நில்லுங்க. உங்க முதுகிலே 'ஷொட்டு' தரணும்! மூக்கிற்குக் கீழே ஒரு சின்ன இடம். அதுலே இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் அரை அங்குலத்துக்குக் குட்டி மீசை. இதை வச்சு என்னமாய்ச் சிரிக்க வச்சுட்டீங்க!

இந்த முழு நீள ஹ்யூமரஸ் படத்துக்கு உங்க சிஷ்யப் பிள்ளை ரஜினியை ஹீரோவாக்கி, மாறுபட்ட வேடத்தில் அவரை நடிக்க வச்சு, 'என்னாலே முடியாதது எது வுமில்லே'னு மறுபடியும் நிரூபிச்சுக் காட்டிட்டீங்க!

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாளின் மகன் சந்திரனாக ஒட்டு மீசையுடன்; அவனுடைய தில்லுமுல்லு தம்பி இந்திரனாக மைனஸ் மீசையுடன் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

தில்லு முல்லு

தேங்காய்க்கு அழகான குணசித்திர வேடம். இந்தப் பக்கம் சந்திரன்|இந்திரனிடமும், அந்தப் பக்கம் மிஸஸ் மீனாட்சி துரைசாமியிடமும் ஏமாளியாக மாட்டிக் கொண்டு அவர் படும் அவதிகள் சுவையான சிரிப்பு விருந்து.

சௌகார், கொஞ்சம் கண்ண சந்தால் அழ ஆரம்பித்துவிடுவார். நீங்கள்தான் அவரையும் சிரிக்க வைத்திருக்கிறீர்கள்!

விசுவிடம் எங்க சார்பாக 'கங்கிராட்ஸ்' சொல்லுங்க. நாடக மேடையிலே துணுக்குத் தோரணம் கட்டின அவரோட அனுப வம் இப்போ படுஜோரா உங்களுக் குத் துணை நின்னிருக்கு!

டைரக்டர் சார், 'ஷொட்டு' தீர்ந்துடுச்சு. கொஞ்ச எங்க பக்கம் திரும்பறீங்களா?

பிறந்த நாள் பார்ட்டியின்போது நிர்வாண நடனம் என்று சொல்லி இரண்டரை வயசுக் குழந்தை டான்ஸ் ஆடறதைக் காட்டறீங் களே, இது தேவைதானா? சிரிக்க வைப்பவர்களின் அரிச்சுவடி வகுப்பல்லவா அது!

'மசாலா' மணக்கும் இந்தியைத் தான் இறக்குமதி செய்யவேண்டும் என்றில்லாமல், தமாஷாக பம்பாயைத் தழுவியிருக்கிறீர்கள்! இருந்தாலும், நீங்களுமா இந்த இறக்குமதி வியாபாரத்தில் ஈடு படவேண்டும்? சொந்தத்திலேயே ஒரு முழு நீள நகைச்சுவைப் படத்தைத் தயாரித்துக் கொடுக்க உங்களால் முடியுமே!

-Critically Yours,

விகடன் விமரிசனக் குழு