Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
.
தலையங்கம்
தலையங்கம்

பெயர்ப் பலகைகள்

தலையங்கம்

கடந்த வாரம் பத்திரிகைகளில் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் ஓர் அறிவிப்பு வெளியாகியிருந்தது - வழக்கப்படி முதலமைச்சர், அந்த இலாகாவின் அமைச்சர் இருவரின் புகைப்படங்களுடன்!

அந்த அறிவிப்பின் முதல் பாராவில், ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், கேளிக்கை மற்றும் மனமகிழ் மன்றங்கள், சிற்றுண்டிச்சாலைகள், தங்கும் வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள், கான்டீன்கள், தொழிற்சாலைகள் முதலியவற்றின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்கவேண்டும் என்பதும், மற்ற மொழிகள் பயன்படுத்த வேண்டியிருந்தால், அவை தமிழ்ப் பெயருக்குக் கீழ்தான் எழுதப்படவேண்டும் என்பதும் நினைவுபடுத்தப்பட்டிருந்தது.

இரண்டாவது பாராவில், கடைகள் மற்றும் நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு திருத்தம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன்படி, இவற்றின் பலகைகளில் உள்ள தமிழ்ப் பெயர்கள் மேலே இருக்கவேண்டும் என்றும், தமிழ் எழுத்துகளுக்கு அதிக இடம் ஒதுக் கப்பட்டு, மற்ற மொழிகளுக்கு அதைவிடக் குறைவான இடம் ஒதுக்கப்படுவதோடு, சீர்திருத்திய தமிழ் எழுத்துக்களே கட்டாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தமிழுக்கு முதலிடம் தரப்படுவதில் கருத்து வேற்றுமைக்கு இடம் இருக்கப்போவதில்லை. ஆனால், முக்கியமான பெயர்ப் பலகைகளில் ஆங்கிலத்திலும் பெயர் இருக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும். பொது இடங்களில் உள்ள போர்டுகளிலும், பேருந்துகள், வீதிகள், நகர்கள், காலனிகள் இவற்றிலும் ஆங்கிலம் கட்டாயமாக இடம் பெறச் செய்யவேண்டும்.

தமிழகத்திற்கு, வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும், தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் நிறையப் பேர் வந்து போகிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அவர்களின் 'கண்ணைக் கட்டிக் காட்டில் விடும்படியாக' பெயர்கள் தமிழில் மட்டும் எழுதப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

தலையங்கம்
தலையங்கம்