Published:Updated:

கடவுள்கள் ஆடிய விளையாட்டு!

கடவுள்கள் ஆடிய விளையாட்டு!


விகடன் பொக்கிஷம்
கடவுள்கள் ஆடிய விளையாட்டு!
கடவுள்கள் ஆடிய விளையாட்டு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடவுள்கள் ஆடிய விளையாட்டு!
கடவுள்கள் ஆடிய விளையாட்டு!
கடவுள்கள் ஆடிய விளையாட்டு!

கிட்டத்தட்ட 14 அங்குல உயரம்: நாலரை கிலோ எடை; 18 காரட் தங்கத்தால்

உருவாக்கப்பட்ட வெற்றித் தேவதையை (உலக கால்பந்தாட்டக் கோப்பை) மெக்ஸிகோவில் நடக்கும் சுயம்வரத்தில், எந்த நாட்டு வீரர்கள் தட்டிக்கொண்டு போகப் போகிறார்களோ என்ற ஆர்வமும் பரபரப்பும், கோடிக்கணக்கான ரசி கர்களை சீட் நுனிக்குக் கொண்டு வரச் செய்திருக்கின்றன.

முதலில் கால்பந்தாட்டத்தின் சரித்திரத்தைக் கொஞ்சம் புரட் டிப் பார்ப்போமா?

பந்தை வைத்துக்கொண்டு ஆடும் ஆட்டங்களைப் பொறுத்தவரை, இலத்தீன் அமெரிக்காதான் இந்தக் கால்பந்து பாரம்பரியத்தை 'போணி' செய்தது என்கிறார்கள் விளையாட்டு வல்லுநர்கள்.

'கடவுள்களால் ஆடப்பட்ட ஆட்டம் இது', 'இறக்கைகளுடன் கூடிய பாம்புக் கடவுளும் (ராகு, கேது), மழைக் கடவுளும் (வருண பகவான்?) இந்த ஆட்டத்தின் ஹீரோக்களாகத் திகழ்ந்தனர்' என்பது இலத்தீன் அமெரிக்காவில் புராண நம்பிக்கை!

கடவுள்கள் ஆடிய விளையாட்டு!

மன்னர்களிடையே பாப்புலராகத் திகழ்ந்த கால்பந்தாட்டத் தில், மிகவும் கடினமான ரப்பர் பந்து உபயோகப்படுத்தப்பட்டது. இந்தப் பந்தால் அடிபட்டு தொப் பென்று விழுந்து இறந்தவர்கள் நிறையப் பேர்.

"சிவப்பிந்தியர்கள் மத்தியில் கால்பந்தாட்டம் பாப்புலரானபோது, இதில் தோற்ற மன்னனுக்கு என்ன பரிசு தெரியுமா? அவனை ஏக தடபுடலாக வரவேற்று உபச ரித்து, கழுத்தில் மாலை அணி வித்து, பிறகு அவனைத் தூக்கில் தொங்கவிட்டு சாகடிப்பது வழக் கம்" என்கிறார் டீகோ டுரான் என்கிற சரித்திர வல்லுநர்.

இது மட்டுமல்ல; கால்பந்தாட்டத்தை ஒரு சூதாட்டம்போல 'பெட்டிங்' வைத்து அப்போதே ஆடியிருக்கிறார்கள். நிலம், வீடு, வாசல், நகைகள் என்பதோடு நின்றுவிடாமல், தங்களுடைய மனைவி மக்களையும் பணயம் வைத்து (தர்மர்?!) ஆடித் தோற்றும்இருக்கிறார்கள். சில சமயம் தங் கள் ஊர்களையேகூட பணயம் வைத்திருக்கிறார்கள்!

16-ம் நூற்றாண்டின் ஆரம்பத் தில், கால்பந்தாட்டத்துக்கு ஷ்பா னிஷ் நாடு தடை விதித்தது. அந்த ஆட்டத்தில் சிவப்பிந்தியர்களின் மத உணர்வுகளும் கலந்திருந்தன என்று காரணம் சொன்னது அந்த நாடு!

இதற்கு ஆதாரமாக வல்லுநர்கள் கூறுவது: 'அவர்கள் ஆட்டம் ஆடும் களத்தைக் கோயிலாகவும், ஆட்டக்காரர்களைக் கடவுளர்க ளாகவும், கால்பந்தை சூரியனுக்கு ஒப்பிட்டும் ஆடியிருக்கிறார்கள்!' (இது உண்மை என்று நிரூபிப்பது போல, பழைய சிற்பங்கள் சில வற்றைக் கண்டுபிடித்திருக்கிறார் கள்!) இருளை வெற்றி கொள்ளும் வெளிச்சம், இறப்பை வெல்லும் வாழ்க்கை போன்ற தத்துவங்கள் கால்பந்தாட்டத்தில் அடங்கியுள் ளதாகக் கருதி, சிவப்பிந்தியர்கள் ஆடியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

3,000 ஆண்டுகளுக்கு முன்பா கவே கால்பந்தாட்டம், மெக்ஸிகோ வில் மிகவும் புராதனமான ஆட் டமாகக் கருதப்பட்டது!

இரண்டு அணிகள்; பந்தை விடப் பெரியதாக இரண்டு பக்க மும் கல்லினால் உருவாக்கப்பட்ட வளையம்; உயரத்தில் இருக்கும் இந்த வளையத்துக்குள் பந்து நுழைந்துவிட்டால், கோல்; இதில் ஜெயித்த அணி, தோல்வி யுற்ற அணி ஆடிய பக்கம் உட் கார்ந்து வேடிக்கை பார்த்த ரசி கர்களின் உடைமைகள், சொத் துக்கள் அனைத்தையும் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டுவிடும்! ஆகவே, காலரியில் உட்காரும் போதே ரசிகர்கள் ஒரு முடிவு கட்டிக்கொண்டு உட்கார வேண் டும்! கால் பந்தாட்டத்தில் அப்போதே இவ்வளவு வெறி என்றால் இப்போது கேட்கவேண்டுமா?

24 நாட்டு அணிகள் பங்கேற் கும் மெக்ஸிகோ போட்டி தற் போது பாதி கட்டத்தில் இருக்கி றது. அணிகள் பயிற்சியில் மும்மு ரமாக இருந்த நேரம்... மெக்ஸிகோ வெயிலுக்குத் தகுந்தாற்போல் தன்னைத் தயார்படுத்திக்கொண் டிருந்தார் அர்ஜெண்டினாவின் முக்கிய வீரரும், உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவ ருமான டீகோ மாரடோனா. இந்தப் பயிற்சி ஆட்டத்தின்போது மாரடோனா ரசிகர் (வெறியர்?) ஒருவர், தன் ஹீரோவை அவர் 'பிராக்டிஸ்' செய்துகொண்டிருந்த போது சந்திக்கமுடியவில்லையே என்கிற ஏக்கத்தினாலேயே துப் பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்! (இடது காதில் ஒரு பெரிய வைரத்தோடு போட் டிருக்கும் மாரடோனாவுக்கு வயது 25. 9-வது வயதில் கால்பந்து ஆட ஆரம்பித்தவர்! 'King of Naples' என்ற கௌரவம் பெற்றவர்.)

கடவுள்கள் ஆடிய விளையாட்டு!

மெக்ஸிகோ மக்கள் ஏகமாகக் காரம் சாப்பிடுகிறவர்கள். (நம் ஆந்திர மக்கள் காரமெல்லாம் இவர்களுக்குமுன் ஒன்றுமே கிடையாது!) அவர்களுடைய தீ பறக்கும் மிளகாய் உலகப் பிரசித்தம்! ஆகவே, தொப்பி அணிந்த பச்சைமிளகாய்தான் மெக்ஸிகோ போட்டியின் சின்னமாகத் தேர்ந் தெடுக்கப்பட்டது!

'கால்பந்து மன்னன்' என்றுஅழைக்கப்படும் பீலே, மெக்ஸிகோ போட்டியில், டெலிவிஷனில் காமென்ட்ரி கொடுத்துக்கொண்டு இருக்கிறார்!

எது எப்படியோ, உலக கால்பந்து கோப்பைப் போட்டியை நடத்தவேண்டியது கொலம்பியா தான். பொருளாதார நிலை சரி யில்லை என்று அது மறுத்துவிட்ட தால், மெக்ஸிகோவுக்கு சான்ஸ் கிடைத்தது!

போன செப்டம்பரில் மெக்ஸி கோவில் பயங்கர பூகம்பம் ஏற் பட்டு, அதற்குப் பலியானவர்கள் கிட்டத்தட்ட 10,000 பேர். அந்த பயங்கரமே இன்னும் மெக்ஸிகோ மக்களின் நினைவிலிருந்து அகல வில்லை! எண்ணெய் விலை வீழ்ச்சியினால், மெக்ஸிகோவின் வருமானத்தில் ஆறு பில்லியன் டாலர்கள் நஷ்டம்! இப்படிப் பல கஷ்டங்களை அனுபவித்த மெக்ஸிகோ மக்களுக்கு, இந்தப் போட்டி ஒரு மன ஆறுதல்!

கடவுள்கள் ஆடிய விளையாட்டு!
கடவுள்கள் ஆடிய விளையாட்டு!
- அல்லு