Published:Updated:

பெண் என்றால் மிதி விழும்!

பெண் என்றால் மிதி விழும்!


விகடன் பொக்கிஷம்
பெண் என்றால் மிதி விழும்!
பெண் என்றால் மிதி விழும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"பெண் என்றால் மிதி விழும்!"
தொகுப்பு:ரவிபிரகாஷ்
பெண் என்றால் மிதி விழும்!
பெண் என்றால் மிதி விழும்!

நாட்டிலுள்ள வறுமை ஒழிந்து எல்லோருக்கும் உண்ண உணவு, இருக்க இடம்

கிடைத்து விடும். ஆனால், உங்களின் வலக் கையை இழக்கவேண்டும். சம்ம திப்பீர்களா?

உடுக்கை இழந்தால்தான் அவமானம்; வலக்'கை' இழந்தால் பரவாயில்லை. நாட்டு மக்களுக்கு வாழ்க்'கை' கிடைப்பதில் எனக்குப் பெருமையே!

100 வயது வரை கெட்டியான ஆயுள். ஒரு வியாதி வராது. ஆனால், நாளைக் காலையிலிருந்து வாயில் பல் துருத்திக்கொண்டு, தலை வழுக்கை விழுந்து, சப்பை மூக்குடன் பார்க்க அவலட்சண மாக ஆகிவிடுவீர்கள். இந்த வரம் கிடைத்தால் ஒப்புக்கொள்வீர் களா?

ஆயுள் பற்றி, அழகைப் பற் றிக் கவலைப்படுபவனல்ல நான்; அறிவைப் பற்றிக் கவலைப்படுப வன். லட்சணத்தைப் பற்றி அல்ல; லட்சியத்தைப் பற்றிச் சிந்திப்பவன் நான்!

பத்து லட்ச ரூபாய் பணம் கிடைக்கும். ஆனால், நாளையிலிருந்து நீங்கள்

பெண் என்றால் மிதி விழும்!

பெண்ணாகிவிடுகிறீர்கள். இஷ்டம்தானா?

நான் பெண்ணாக மாற விரும்பவில்லை. ஏனென்றால், நான் பெண்ணை மதிப்பவன். பெண்ணாக மாறினால், யாராவது என்னை மிதிப்பார்கள் என்று தெரியும். சட்டசபைக்குப் போன பெண்ணுக்கே மிதி விழுகிறது. நான் எம்மாத்திரம்?

பேய் உலாவுகிறது என்று உறுதியாக நம்பப்படும் ஒரு காட்டு பங்களாவில், ஓர் இரவு முழுக்கத் தனியாக இருக்கவேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டால், டிஸ்னிலாண்டுக் குக் குடும்பத்தோடு ஒரு இலவச 'ட்ரிப்' உண்டு. ஓகே?

பயமேயில்லை. மனிதப் பேய்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டுஇருப்பதால், மற்ற பேய்கள் பற்றிக் கவலையில்லை.

இந்தத் திறமை நமக்கு இல்லையே என்று ஏதாவது ஒன்றை நினைத்து ஏங்குவது உண்டா?

ஒரு சிற்பியாகப் பிறக்கவில்லையே என்று அடிக்கடி ஏங்குவதுஉண்டு.

பெண் என்றால் மிதி விழும்!
பெண் என்றால் மிதி விழும்!