Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலப்பெட்டகம்
.
காலப்பெட்டகம்

விகடனுக்கு நன்றி!

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 'ரோமாபுரிப் பாண்டியன்', சாகித்திய

அகாடமி யின் பரிசுக்காகப் பரிந்துரைக்கப் பட்டுச் சென்ற இடத்தில் ஒரு மட் டத்தில் அது வேண்டுமென்றே தடுக்கப்பட்டது என்கிற விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த விகடனுக்குத் தமிழ்கூறும் நல் லுலகம் கடமைப்பட்டிருக்கிறது.

வாசகர்கள்தாம் ஓர் இலக்கியப் படையலுக்குச் சரியான நீதிபதிகள். அவர்களின்

காலப்பெட்டகம்

தீர்ப்புக்கு அகாடமி உருப்படியான அங்கீகாரம் தரலாமே தவிர, தங்கள் விருப்பங்களை வாசகர்களின் முதுகின்மேல் ஏற்றி வைப்பதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் குஜராத்தைச் சேர்ந்த திரு.ஜகன்னாத ஜோஷி அவர்கள் என்னிடம் தெரிவித்தார்- அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' ஒரே புத்தகம் 3 தடவை 'ஞானபீடம்' பரிசுக்காகத் தொடர்ந்து சிபாரிசு செய்யப்படுகிறது என்று. ஞானபீடத்திற்கே இந்த நிலைமை என்றால், சாகித்திய அகாடமியைப் பற்றிக் கேட்கவேண்டியதில்லை.

- வலம்புரி ஜான், எம்.பி.,

வள்ளுவர் கோட்டம் திறக்கப் பட்டது. அது பற்றி, 25.4.76 தேதி யிட்ட விகடன் இதழில் வெளியான தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி...

வள்ளுவர் கோட்டம்

சென்னை மாநகரம் எத்தனையோ சிறப்புக்களால் பெருமை பெற்றுள்ளது. கடந்த வாரம் பாரதக் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் அவர்கள், நுங்கம்பாக்கத்தில் திறந்து வைத்துள்ள வள்ளுவர் கோட்டம், நகரத்தின் பெருமைக்குப் பொலிவூட்டும் புதியதோர் அணிகலனாகத் திகழ்கிறது.

மனித சமுதாயத்திற்குப் பொதுமறையன்று கண்ட பொய்யாமொழிப் புலவனுக்குத் தமிழ் மகன் நன்றியுணர்வோடு, நல்லிதயத்தோடு எழுப்பியுள்ள நினைவாலயம் அது. நம் பண்டைய புகழுக்கும், தொன்மைமிகு இலக்கிய பாரம்பரியத்திற்கும் கம்பீர எடுத்துக்காட்டாக, தலை நிமிர்ந்து நிற்கிறது அக்கலைக் கோயில்.

காலப்பெட்டகம்

ஈரடி குறட்பாவில் உலகையே அடக்கி வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின் கண்கவர் சிலை திருக்கோயில் கொண்டிருக்கும் கோலமிகு கல் தேர், சிற்ப எழில் மணக்கும் சித்திரத் தேர். அதையட்டி எழுந் துள்ள மாபெரும் கலைக்கூடம், அளவிலும் அமைப்பிலும் ஆசியா கண்டத்திற்கே ஓர் அதிசயமாகும்.

இதற்கு வித்தூன்றிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையும், வியத்தகு விரைவில் முடித்துத் தந்த சிற்பக் கலைஞர்களையும், கட்டடக் கலை வல்லுநர்களையும் நாம் உள மாரப் பாராட்டக் கடமைப்பட்டிருக் கிறோம்.

ஒலியைவிட வேகமாகச் செல் லும் ஏர்-பிரான்ஸ் கன்கார்ட் விமானத்தில் பயணம் செய்த முதல் இந்தியர், ஆனந்த விகடனின் துணையாசிரியர் மணியன். இது பற்றி, 'தென் அமெரிக்கப் பயணக் கதை' கட்டுரைத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் அவர் வர்ணித்துள்ள பகுதி இது...

பாரீஸ் நகரின் 'சார்லஸ் டிகால்' ஏர்போர்ட்டில் நின்றால், ஒரு விமான நிலையத்தில் இருப்பது போன்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. ஏதோ ஒரு ஸ்டூடியோவில் சினிமாவுக்கான ஜோடனை செய்த அரங்கத்தில் வந்து நிற்பது போலத் தான் தோன்றுகிறது. வட்ட வடிவ மும், வண்ணங்கள் நிறைந்த காட்சி யுமாக, நம்மை அதன் தோற்றமே சொக்க வைக்கிறது. நாம் ஒவ்வோர் இடத்துக்கும் நடந்து போய்க்கொண் டிருக்கவேண்டியதில்லை. சும்மா நின்றுகொண்டால் போதும்; 'கன் வேயர் பெல்ட்'டுகள் நம்மை அந் தந்த இடங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் விடுகின்றன.

காலப்பெட்டகம்

பாரீஸ் நகரிலிருந்துதான், தென் அமெரிக்காவின் ஒரு முக்கிய நகரமான 'ரியோ-டி-ஜெனிரோ' நக ருக்கு, ஏர்பிரான்ஸ் கன்கார்ட் விமானம் பறக்கிறது. மறுநாள் காலை நான் புறப்பட வேண்டும்.

அன்றிரவு பாரீஸ் நகர ஓட்டல் 'லாபி'யில், பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் கன்கார்ட் விமானத்தைப் பற்றி விசாரித்தேன்.

"ஓ, கன்கார்டில் பறக்கப் போகிறீர்களா? யூ ஆர் லக்கி!" என்று கையைக் குலுக்கினார் அவர்.

"எப்படி?" என்று கொஞ்சம் உற்சாகத்துடன் கேட்டேன்.

"1938-ம் ஆண்டில் பாரீஸிலி ருந்து நியூயார்க்கிற்குப் போகக் கப்பலில் ஆறு நாள் பிரயாணம் தேவையாக இருந்தது. 1946-ல் விமானத்தில் போக சுமார் 30 மணி நேரம் வரை ஆயிற்று. 'போயிங்' விமானம் வந்த பிறகு ஏழு முதல் எட்டு மணி நேரம் பிடித்தது. இப்போது கன்கார்ட் விமானத்தில் மூன்றரை மணி நேரம்தான் ஆகும்!" என்று புள்ளி விவரங்கள் கூறி, என்னை திகைக்க வைத்தார்.

"எத்தனை நாட்களாக இந்த கன்கார்ட் சர்வீஸ் நடந்துகொண்டிருக்கிறது?" என்று கேட்டேன்.

"1971-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்துதான் பொதுமக்களை ஏற்றிச் செல்லும் கமர்ஷியல் சர்வீஸ் ஆரம்பமாகியிருக்கிறது. இது ஆரம்பமாவதற்கு முன்பு 4,990 மணி நேரம் பறக்க விட்டிருக்கிறார்கள். அதில் 1,724 மணி நேரம் 'ஸ¨பர்ஸானிக்' வேகத் தில் பறந்திருக்கிறார்கள். அப்புறம்தான் கமர்ஷியலாக விமான சர்வீஸ் தொடங்கி இருக்கிறார்களாக்கும்" என்று மேலும் புள்ளி விவரங்களை அடுக்கினார்.

காலப்பெட்டகம்

"மணிக்கு 1,350 மைல் வேகத்தில் பறக்கும் என்கிறார்களே, உண்மையா?" என்று கேட்டேன்.

"ஆமாம்... ஒலியின் வேகம் மணிக்கு 675 மைல்தான். இந்த விமானம் ஒலியைவிட வேகமாகப் போகிறது. சுமார் 204 அடி நீளமும் 40 அடி உயரமும் கொண்ட இந்த விமானத்தில் 95 டன் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு போகிறார்கள்!" என்றார் அவர்.

"இவ்வளவு நுட்பமான தகவல்களையும் எப்படிக் கச்சிதமாகச் சொல்கிறீர்கள்?"

"கன்கார்ட் விமான உற்பத்தித் தொழிற்சாலையில் வேலை செய் யும் ஆயிரக்கணக்கான நிபுணர்களில் நானும் ஒருவன்!" என்று சொல்லிக் கை குலுக்கிவிட்டு, பெருமையுடன் மார்பை நிமிர்த்திக்கொண்டு நடந்து போனார் அந்த மனிதர்.

'மணிக்கு 1,350 மைல். அதாவது கிட்டத்தட்ட 3 செகண்டுக்கு ஒரு மைல்!' என்று சொல்லி, விரலை மடித்து மூன்று தடவை சொடுக்கிப் பார்த்தேன். உண்மையிலேயே கொஞ்சம் 'திக்'கென்றது.

'கன்கார்ட்' என்ற அந்த அதிசய விமானம் பார்வைக்குக் கொக்கு மாதிரி இருந்தது. அதற்கு நீளமான ஓர் அலகு மூக்கும் இருந்தது. அதி வேகமாகப் போகும்போது, அந்த அலகு காற்றைக் குத்திக் கிழித்துக் கொண்டு போகுமாம். விமான தளத்தில் இறங்கும்போது, விமானிக் குப் பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த அலகு மடிந்து இறங்கிவிடுமாம்!

இறையருள் ஓவியர் கொண் டையாராஜு அமரரானார். அப்போது விகடனில் வெளியான கட்டுரையிலிருந்து...

கஜேந்திர மோட்சத்தில் இருந்து மீனாட்சி கல்யாணம் வரை...

காலப்பெட்டகம்

கஜேந்திர மோட்சம், மீனாட்சி கல்யாணம் ஆகிய காட்சிகளை ஓவியமாகப் பார்க்கும்போது ஓவிய மேதை கொண்டையா ராஜுவை நினைக்காமல் இருக்க முடியாது. தெய்விகப் படங்கள் தீட்டுவதைத் தனிக் கலையாக எடுத்துக்கொண்டு சாதனை புரிந்தவர் அவர். காலண்டர்களை அலங்கரிக்கும் தெய்வப் படங்களில் பெரும்பாலானவை அவரால் வரை யப்பட்டவை.

காலப்பெட்டகம்

சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது, தனிமையை நாடி, ரமண மகரிஷியிடம் சென்றார். அவருடைய கலைத் திறனை அறிந்த மகரிஷி, கலைப் பணி புரியுமாறு ஆசீர்வதித்தாராம். நாடக குழுவில் ஓவியராகச் சேர்ந்து நாடு சுற்றிய கொண்டையா ராஜு, கோவில்பட்டியில் சித்திரக்கூடம் அமைத்துப் பல மாணவர்களை உருவாக்கிவிட்டு, அண்மையில் காலமானார்.

இந்த ஆண்டு, கம்பன் கழகம் வெளியிட்ட கையடக்க ராமாய ணப் புத்தகம் ஓர் அருமையான முயற்சி! இந்தப் பெருமைக்குரியவர் கம்பன் கழகத் தலைவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல்.

கம்பனைக் கைக்குள் அடக்கலாம்!

கிறிஸ்துவர் கரங்களில் விவிலியம் (பைபிள்) தவழ்வதுபோல தமிழர் கரங்கள்தோறும் கம்பன் கவிதை நடமாட வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஒரு தமிழறிஞர்.

இது நடைபெறக்கூடிய காரியமா என்ற கேள்விக்குறி சில அறிஞர்க ளின் சிந்தனையைக் குடைந்தது.

இதற்குக் காரணம் உண்டு. ஆறு காண்டங்களைக் கொண்ட பெருங்காப்பியமான கம்பராமாயணத்தை பைபிளைப் போலக் கையடக்கமான புத்தக வடிவில் நினைத்த இடத்திற்கு எடுத்துச் செல்லமுடியாது.

கம்பனைக் கைக்குள் அடக்கியே தீருவது என்ற முனைப்போடு தீவி ரமாகக் காரியத்தில் இறங்கியது சென்னையில் உள்ள கம்பன் கழகம். டாக்டர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் தலைமையில் பதிப்பாசிரியர் குழு அமைக்கப்பட்டது.

காலப்பெட்டகம்

"ஏழே மாதத்தில் எண்ணியதை முடித்துவிட்டோம். இதோ, புத்தகம் தயார். கம்பராமாயணத்தின் ஆறு காண்டமும் ஒரே புத்தக வடிவில் கையடக்கமான உயர்ந்த பதிப்பாக வெளிவருவது இதுவே முதல் முறை. மற்றொரு சிறப்பு, பைபிள் போன்ற நூல்களை அச்சிடுவதற் கென்று பயன்படுத்தப்படும் மெல் லிய, விலையுயர்ந்த காகிதத்தில் சுமார் 2,000 பக்கங்களில் ஒரு தமிழ் நூல் இதற்கு முன்பு வெளி யிடப்பட்டதில்லை!" என்றார் கம்பன் கழகத் தலைவர் ஜஸ்டிஸ் மு.மு.இஸ்மாயீல்.

உண்மைதான். நூலின் அச்சும் அமைப்பும் வெகுவாகக் கவர்கின்றன. ஆங்கிலப் புத்தகம் போன்ற தோற்றத்துடன் கம்பன் கவிதைகள் தமிழ் மக்களிடையே தவழ வந்தி ருப்பது பெருமைக்குரிய விஷயம்.

மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் மாசே-துங் மறைந்தார்.

மாசே-துங்

காலப்பெட்டகம்

உலக அரங்கில் மாமலையாக விளங்கிய மாபெரும் தலைவர் மாசே-துங் மறைந்தது, சீன மக்க ளைப் பொறுத்தவரையில் அண் மையில் அந்நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தைவிடக் கொடிய நிகழ்ச்சியாகும்.

இன்றைய சீனா, தன்னிகரில்லா அந்தத் தலைவனின் தனிப்பெரும் சாதனையாகும். தீர்க்க தரிசனமும், ஆழ்ந்த சிந்தனையும், புரட்சி உள் ளமும், திட சித்தமும், ஓயாத உழைப் பும், தளராத நெஞ்சமும் கொண்ட தளபதியாகக் காலமெல்லாம் பணி யாற்றி, வறுமையில் மூழ்கியிருந்த ஒரு விவசாய சமுதாயத்தைக் கைதூக்கிவிட்டவர் அவர். இன்று செஞ்சீனா மூன்றாவது வல்லரசாகத் திகழ்வதோடு, உலக அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய வலிமையும் வாய்ப்பும் பெற்ற பெரும் சக்தியாக விளங்குவதற்குக் காரண புருஷராக இருந்தவர்.

'புரட்சிக்கு ஓய்வில்லை' என்றும், 'துப்பாக்கி முனையில்தான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது' என்றும், 'அரசியல் என்பது ரத்தக் கிளறியற்ற போர்; போர் என்பது ரத்தக் கிளறிமிக்க அரசியல்' என்றும் முழங்கிய அந்த அரசியல் மேதை, தமது இறுதிக் காலத்தில், பகை பாராட்டிய நாடுகளுடன் நட்புறவு கொள்வதில் நாட்டம் கொண்டிருந்தார். அமெரிக்காவுடன் கைகுலுக்கினார்; இந்தியாவிடம் நேசக்கரம் நீட்டினார். உடல் நலம் குன் றாமல் இருந்திருந்தால் ருஷ்யாவிட மும் நட்புறவை வளர்த்திருப்பார்.

புரட்சி வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட முப்பெரும் தலைவர்களான மாசே-துங், சூ-யென்-லாய், சூ-டே மூவரும் ஒரே ஆண்டில் மறைய நேரிட்டது சீனாவின் பேரிழப்பாகும்.

பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்து 'இருபது அம்சத் திட்டம்' அந்நாளில் வெகுவாகப் பேசப்பட்டது. அந்த இருபது அம் சத் திட்டங்களையும் மையமாக வைத்து வாரம் ஒரு சிறுகதை வெளியிட்டது ஆனந்த விகடன்.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்