Published:Updated:

அணுகுண்டு அசடு வழியும்!

அணுகுண்டு அசடு வழியும்!


விகடன் பொக்கிஷம்
அணுகுண்டு அசடு வழியும்!
அணுகுண்டு அசடு வழியும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"அணுகுண்டு அசடு வழியும்!"
அணுகுண்டு அசடு வழியும்!
அணுகுண்டு அசடு வழியும்!
அணுகுண்டு அசடு வழியும்!

இன்னும் ஒரு வாரத்தில் ஒரு பெரிய அணுகுண்டு விழுந்து இந்த உலகமே

அடியோடு அழியப் போகிறது. அந்த ஒரு வார காலத்துக்குள் நீங்க என்னென்ன செய்வீர்கள்?

'மக்கள் சிரிப்பே மகேசன் சிரிப்பு' என்று பாவித்து நாடகம் போட்டு மகிழும் அல்ப சந்தோஷ ஜாதிக்காரன் நான். 'அலமாரியின் அலறல்', 'சக்கர நாற்காலியின் சபதம்' என இரு நாடகங்களை எழுதி வைத்திருக்கிறேன். அவற்றை அரங்கேற்றுவேன். ஒன்று நிச்சயம் - அந்த இரு நாடகங்களும் அரங்கேறினால், ஒரு வாரத்துக்குப் பிறகு அழியவேண்டிய உலகம், அரங்கேறிய அன்றே அழிந்துவிடும். அணுகுண்டு அசடு வழியும்!

கடைசியாக நீங்கள் கடுமையாகச் சண்டை போட்டது யாருடன்? யார் ஜெயித்தது?

கல்யாணத்தன்றே கட்டியவளிடம் தைரியத்தைத் தாரைவார்த்துக் கொடுத்த மறத்தமிழன் நான். நிராயுதபாணி யாகப் புறமுதுகு காட்டி நின்ற என்னோடு, என் மனைவி போட்ட சமீபத்திய 1,111-வது பாணிக்கிரகணபட் யுத்தம் அழுகையில் முடிந்தது. அழுதவர்கள்தான் தோற்றார்கள் என்று வைத்துக்கொண்டால், இருவருமே தோற்றோம். அவள் பொலபொலவெனக் கண்ணீர்விட்டு அழுதாள். நான் அவளைச் சமாதானப்படுத்த பட்டுப்புடவைக்காகக் கைக் காசை அழுதேன்!

அணுகுண்டு அசடு வழியும்!

பத்து லட்ச ரூபாய் பணம் கிடைக்கும்; ஆனால், நாளையிலிருந்து பெண்ணாகிவிடுவீர்கள். இஷ்டமா?

அஞ்சு லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு அர்த்தநாரியாக இருக்கலாமா, கூடாதா? சரி, விடுங்க... 'கிரேஸி'மோகன்கிற பெயரை 'ரோஸி'மோகன்னு மாத்திக்கலாம். என்னோட நாடகக் குழுவில நானே லேடி ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சுடலாம். ஒரு செலவு மிச்சம்!

உங்கள் வீடு திடீரென்று தீப்பற்றி எரிகிறது. வீட்டுக்குள்ளிருந்து ஒரே ஒரு பொருளை மட்டும் வெளியே எடுத்துவர உங்களுக்கு சான்ஸ்! எதை எடுத்து வருவீர்கள்?

நிதானமா ஸ்லோமோஷன்ல உள்ளே போய், என் தங்கையோட வயலினை எடுத்துக்கொண்டு வருவேன். வெளியே வந்ததும், அந்த வயலினை வாசிப்பேன். 'ரோம் நகரம் பத்தியெரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசிச்சான்'கற மாதிரி, 'வீடு தீப்பிடிச்சு எரியும்போது கிரேஸி மோகன் வயலின் வாசிச்சான்'னு சரித்திரத்துல என் பேரு பொறிக்கப்படும் இல்லியா!

பேய் உலாவுகிறது என்று நம்பப்படும் ஒரு காட்டு பங்களாவில் ஓர் இரவு முழுக்கத் தனியாக இருக்கவேண்டும். இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டால், டிஸ்னிலாண்டுக்குக் குடும்பத்தோடு ஒரு இலவச ட்ரிப் உண்டு. ஓகே-வா?

நான் ஆவலோடு பார்க்க விரும்பும் விஷயங்கள் இரண்டு... ஒன்று - பேய்; இன்னொன்று - டிஸ்னிலாண்ட். ஹைய்யா..! ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!

அணுகுண்டு அசடு வழியும்!
அணுகுண்டு அசடு வழியும்!