Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:

விகடன் பொக்கிஷம்  
தலையங்கம்  
தலையங்கம்
தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்
தலையங்கம்

இதுவும் ஒருவகையில் சதியே!

தலையங்கம்

பெங்களூர் விமானநிலையத்துக்கு அருகே இந்தியன் ஏர்லைன்ஸ் ஏ-320 ரக ஏர்பஸ் விமானம் கீழே இறங்கும்போது தீப்பற்றிக்கொண்டு தரையில் விழுந்து நொறுங்கியதும், 91 பேர் உயிரிழந்ததும் நெஞ்சை நடுங்க வைத்திருக்கிறது! இந்த விபத்து விதிவசத்தால் நடந்தது என்று சொல்லி, நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்வதில் அர்த்தமில்லை!

உண்மையில், ஏ-320 ரக விமானங்கள் பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திடமிருந்து அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் முந்தைய அரசாங்கத்தால் வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

பிரெஞ்சு நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த விமான இன்ஜின்களுக்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுக்கள் இன்னும் உத்தரவாதச் சான்றுகள் அளிக்கவில்லை. அமெரிக்காவும் பிரிட்டனும் இந்த ரக விமானங்களை வாங்கத் தயக்கம் காட்டியிருக்கின்றன.

இத்தனை விஷயங்கள் எதிராக இருந்தும், உடனடியாக முப்பத்தொரு ஏ-320 ரக விமானங்கள் வாங்க, அரசு முடிவு செய்தது எப்படி என்ற வியப்பான கேள்வி எழுகிறது!

விமானங்களுக்கு இயற்கையாக விபத்துக்கள் ஏற்படுவதுண்டு. தீவிரவாத இயக்கங்களால் கடத் தப்பட்டும், குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டும் விமான விபத்துக்கள் நடக்கின்றன.

ஆனால், அரசாங்கத்தின் அலட்சியப் போக்கால், பயணிகள் நலனை மனத்தில் கொள்ளாமல் மக்கள் வரிப் பணத்தில் விமானங்கள் வாங்கப்பட்டு இம்மாதிரி விபத்துக்கள் ஏற்படுவது என்பது மாபெரும் அநீதி; கொடுமை! இந்த விபத்துக்களில் பயணிகளின் மரணத்துக்கு அரசாங்கமே பொறுப்பு!

இன்னும் சொல்லப்போனால், இதுவும் ஒரு வகை சதியே! அரசாங்கமே செய்யும் சதி!
இந்திய அரசு ஏ-320 ரக விமானங்கள் ஓட்டுவதை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்தால் மட்டும் போதாது; முழு விசாரணை தேவை!

தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism