Published:Updated:

அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!

அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!

அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!

அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!

Published:Updated:

விகடன் பொக்கிஷம்  
அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!  
அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!
அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!
அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!
அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!

டாக்டர் கலைஞரும் திரு.காசிலிங்கமும் 'நாடார் மான்ஷன்' என்ற ஓட்டலில் தங்கியிருந்தார்கள். இரவெல்லாம் கதை எழுதுவார் கலைஞர். பகலில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீதியில், 147-ஆம் எண்ணுள்ள வீட்டில், நாங்கள் தங்கியிருந்த பகுதியில் முன் பக்கத்திலிருந்த அறை யில், கலைஞரும் காசிலிங்கமும் தமையனாரும் நானும் கதையைப் பற்றி விவாதிப்போம்.

கலைஞர், தான் எழுதிய கதையைப் பற்றி ஆதரித்துப் பேச மாட்டார். எழுதப்பட்ட கதைப் பகுதியில் என் னென்ன குறைகள் இருக்கின்றன என்று அவர் எழுதிய கதைக்கு, அவரே எதிரியாகி விவாதிப்பார்.

தான் எழுதிய கதையில் குறைபாடுகள் இருக்கின்றன என்று தெளிவாகத் தெரிந்தாலும், இன்னொரு வர் குற்றங் காண்பதை ஏற்றுக்கொள்ளாவிடினும் கேட்டுக் கொள் ளும் பொறுமைகூட இல்லாத பெரும்பாலோரையே சந்தித்திருந்த எனக்குக் கலைஞரின் இந்தச் செயல் பெருத்த ஆச்சரியத்தை அளித்தது.

அதோடு, அவர் தனது அறிவின்மேலும், எழுத்து வன்மையின்மேலும் வைத்திருந்த திடமான நம்பிக்கையையும், நியாயவாதத் தன்மைக்கு அவர் தருகின்ற மதிப்பையும் எண்ணும்போது, தன்னம்பிக்கையும், பகுத்தறிந்து செயல்படும் பண்பும் கொண்டு, சிறந்த ஓர் எழுத்தாளராக என் உள்ளத்தில் நீங்காத ஓர் இடத்தைப் பெற்றுவிட்டார் அப்போதே!

எழுத உட்கார்ந்தாரானால் அடித்தல் திருத்தல் இன்றி, அறிஞர் அண்ணா அவர்களைப்போல் எழுது கின்ற ஆற்றலை அப்படியே பெற்றி ருப்பவர் கலைஞர் அவர்கள்.

கவிதை நடையைத் தேடிப் போகமாட்டார். எழுதும்போது அது தானாகவே இழைந்து ஓடி வந்துவிடுகிறது. இயல்பாகவே அமைந்துவிடும் எழுத்தாற்றல், இளமையிலிருந்தே கலைஞருக்குக் கைவந்த கலையாகிவிட்டது.

'மருதநாட்டு இளவரசி'யில் அவ ருடைய எழுத்துக்கள் அரசியலை, சமூகக் கொடுமையைப் பலவகைக ளில் சுட்டிக்காட்டி, நகைச்சுவை யோடு சிந்திக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவை. வளைந்து கிடக்கும் சமுதாயத்தைத் தலைநிமிர்ந்து நடைபோடச் செய்யும் கருத்துக்களை அழுத்தமாக அந்த எழுத்துக்கள் வெளிப்படுத்தின.

எம்.ஜி.ஆர்.
('நான் ஏன் பிறந்தேன்' தொடரில்)

அண்ணா போன்ற ஆற்றல் பெற்றவர்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism