குஷ்பு பற்றிக் கவிதை எழுதும்படி வாசகர்களுக்கு ஒரு போட்டி வைத்து, அதில் வென்றவர்களுக்கு குஷ்புவோடு கலந்துரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது விகடன். போட்டியில் வென்ற கவிதைகளும், அடையாறு பார்க் ஷெரட்டனில் நடந்த கலந்துரையாடலில் ஒரு துளியும் இங்கே...
''நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்களே... என்ன காரணம்?!''
''சும்மா வுடாதீங்க... நான் ஒண்ணும் ரொம்ப அழகில்லே!''
''இல்லே மேடம்... நிஜமாவே நீங்க ரொம்ப அழகு!''
''சரி... தாங்க்யூ! அதுக்கு என்ன காரணம்னு எங்க அப்பா அம்மாவைத்தான் கேட்கணும்!''
''எப்பவுமே இந்த மாதிரி ஆடிப் பாடறது, சூப்பர் டிரஸ்ல வந்து கலக்கறதுன்னு மட்டும் இருக்கீங்களே...நல்ல நடிப்புத் திறமையும் இருக்குன்னும்போது வெயிட்டான கதாநாயகி ரோல் ஏதாவது செய்யக்கூடாதா?''
''ஏன் சார்... 'சின்ன தம்பி' யெல்லாம் உங்களைப் பொறுத்தவரை நல்ல ரோல்
இல்லையா?''
''யாரையாவது லவ் பண்றீங்களா?''
''யெஸ்!''
''யாரை?''
''என் தொழிலை!''
''நடிகைங்கிறவங்களுக்கு சமூக அந்தஸ்து உண்டா?''
'அது இருக்கிறதாலதானே நீங்கள்லாம் இப்போ என்னோடு டின்னர் சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க..!''
''அரசியல்ல நுழையறதுக்கு உங்ககிட்டே அடிப்படை மற்றும் ஆஸ்தான தகுதிகூட இருக்கு. அப்புறமும் என்ன தயக்கம்?''
''எனக்கு அரசியலில் நுழைய இஷ்டமில்லே!''
''அடுத்த முதலமைச்சர் நீங்களா, ரஜினிகாந்த்தா?''
''எனக்குத்தான் அரசியலே பிடிக்காதுன்னு சொல்றேனே! ரஜினிகாந்த் பத்தி அவர்கிட்டேதான் கேட்கணும்!''
- எஸ்.சுபா
வெண்ணெயால கடவுள் செஞ்ச உருவம்!
|