'பாரத்' விருது பெற்றார் எம்.ஜி.ஆர்.
வங்கக் கடலோரம் ஒரு தங்கவிழா!
பருப்பு இல்லாமல்கூட ஒரு விருந்து நடந்துவிடலாம். ஆனால், வட இந்திய நடிகர் டேவிட் அறிவிப்பாளராக மாறிக் குரல் கொடுக்காமல், ஓர் அகில இந்திய திரைப்பட விழா அவ்வளவு சோபிக்காது. அப்படியரு கம்பீரமான குரல் திரு. டேவிட்டுக்கு.
இப்படிக் 'குரல் புரட்சி' செய்த டேவிட், மைக்கில் கம்பீரமாக அறி விக்க, புரட்சிகரமன பெண் முதல் அமைச்சர் திருமதி நந்தினி சத்பதி தலைமை வகிக்க, வங்காள முதல் அமைச்சர் திரு.சித்தார்த்த சங்கர்ராய் சிரித்த முகத்துடன் வரவேற்க, நம் புரட்சி நடிகர் பரிசு பெற மேடை ஏறியபோது, கல்கத்தா ரவீந்திர சதன் அரங்கமே ஆரவாரித் துப் பொங்கியது. அந்தக் கலகலப் பான கையலிகளுக்கிடையே புரட்சி நடிகர் அடக்கமாக வந்து நிற்கிறார். வங்காள முதல்வர் பெரு மிதத்துடன் புரட்சி நடிகரிடம் 'பாரத்' விருதை வழங்குகிறார். கலைத்துறையில் புரட்சி செய்தவரும், அரசியல் துறையில் புரட்சி செய்தவரும் நேருக்கு நேர் நிற்கும் காட்சியில் இணையற்ற ஒரு கம்பீரம்! சொந்தச் சகோதரனை அணைத்துக்கொள்வதுபோல் திரு.ராய், எம்.ஜி. ஆர். அவர்களின் தோளில் கரம் வைக்கிறார். இரு வரும் புன்னகை புரிகிறார்கள். காமிராக்கள் இடைவிடாமல் ஒளி ஜாலம் புரிகின்றன. கையலி அடங்கச் சில நிமிடம் பிடிக்கிறது.
புரட்சி நடிகர் பணிவுடன் மேடையிலிருந்து இறங்கி, பார்வை யாளர்கள் அமர்ந்திருக்கும் முதல் வரிசைக்கு வருகிறார். அங்கே அமர்ந்திருக்கிறார் ராஜ்கபூர். ராஜ் கபூரைக் கண்டதும் கண் கலங்க, தாம் பெற்ற பரிசை அவரிடம் கொடுத்துத் திரும்பப் பெறுகிறார் எம்.ஜி.ஆர்.
ஏன்? பிறகு, எம்.ஜி.ஆரே சொன்னார்...
''ராஜ்கபூரின் உருவில் பிரதிவிராஜ் கபூரை நான் கண்டேன். அமரர் பிருதிவிராஜ் கபூரை 1936-ம் ஆண் டிலிருந்து எனக்குத் தெரியும். அவர் என் தந்தைக்குச் சமம். அவருக்கு நான் தெரிவிக்கவேண் டிய மரியாதையைத்தான் ராஜ் கபூருக்குத் தெரிவித்தேன்.''
உண்மையில், அங்கே ராஜ்கபூர் ராஜ்கபூராக வரவில்லை. காலஞ்சென்ற திரு.பிருதிவிராஜ் கபூரின் பிரதிநிதியாக, பிருதிவிராஜ் கபூருக்கு அளிக்கப்பட்ட 'பால்கே' விருதைப் பெறுவதற்காக வந்திருந்தார்.
தம் கல்கத்தா விஜயத்தின்போது ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசி யபோது, ''எனக்குக் கொடுக்கப்பட்ட சிற்ந்த நடிகருக்கான 'பாரத் விருது' எனக்கு மட்டுமே அளிக்கப்பட்ட ஒன்று என நான் எண்ணவில்லை. தமிழுக்கு, தமிழ் மக்களுக்கு அளிக் கப்பட்ட சிறப்பாகவே கருதுகிறேன். என் ஒருவனுடைய உழைப்புக்கு மட்டும் கிடைத்த பரிசு அல்ல இது. ஒரு கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று போற்றுகிறேன். கதை வசனம் எழுதியவர், இயக்கிய வர், ஒளிப்பதிவு செய்தவர், ஒலிப் பதிவாளர் மட்டுமல்ல, லைட் பாயின் ஒத்துழைப்புகூட இருக்க வேண்டும். அத்தனைக் கரங்களும் ஒத்துழைத்தால்தான் படம் வெற்றி பெறும். ஆகவே, என்னுடைய தனிப்பட்ட வெற்றியாக இதை நான் எண்ணிவிடவில்லை'' என்று அடக்கமாகச் சொன்னார்.
ஆடம்பரமாக ஒரு தேசிய விழா வுக்குச் சென்றார். அடக்கத்துடன் திரும்பி வந்தார். இதுதான் புரட்சி நடிகரின் அரிய பண்பு!
|