Published:Updated:

புதிய பறவை

புதிய பறவை

புதிய பறவை

புதிய பறவை

Published:Updated:

விகடன் பொக்கிஷம்  
புதிய பறவை  
புதிய பறவை
புதிய பறவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதிய பறவை
புதிய பறவை
புதிய பறவை

சேகர்-சந்தர்

சேகர்: மலேயாவிலிருந்து புறப் பட்டு, கப்பல் வழியாக இந்தியாவுக்கு வந்து, ஊட்டிக்குச் சென்று உல்லாசமாகப் பறக்கிறதல்லவா பறவை!

சந்தர்: ஆமாம்! கதைகூட ஆங்கிலத்திலிருந்து புறப்பட்டு, வங்காளத்துக்கு வந்து, அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது.

சேகர்: சஸ்பென்ஸை கடைசி வரை நன்றாகக் காப்பாற்றி இருக்கிறார்கள். தாதா மிராசி திறமையாக டைரக்ட் செய்திருக்கிறார்.

சந்தர்: யு ஆர் ரைட்! நடிப்பு, டைரக்ஷன், போட்டோகிராபி, கலர் எல்லாமே பிரமாதம்தான்.

சேகர்: சிவாஜியின் முத்திரை பல இடங்களில் சிறப்பாக விழுந் திருக்கிறது. சௌகார்ஜானகி இயற்கையாக நடித்திருக்கிறார். சரோஜாதேவி அழகாக வந்து போகிறார்.

சந்தர்: நாகேஷ் காமெடி?

புதிய பறவை

சேகர்: கொஞ்சம் மிகையாகஇருந்தாலும், நகைச்சுவை குறையவில்லை.

சந்தர்: இரவுக் காட்சிகளெல்லாம் ரொம்பப் பிரமாதமா எடுத்திருக்காங்க, இல்லையா சேகர்?

சேகர்: ஆமாம்! வெறும் நிழலைக் காட்டி இரவு என்று சொல்லாமல், இங்கிலீஷ் படம் மாதிரி எடுத்திருக்காங்க. 'செட்' கண்ணைக் கவர்கிறது.

சந்தர்: 'பிளாஷ் பாக்' காட்டிய முறை உனக்குப் பிடித்ததா?

சேகர்: ஓ யெஸ்! சஸ்பென்ஸைக் கெடுக்காமல் காட்டி இருக்கிறார் களே! ஆமாம், பாடல்கள் எப்படி சந்தர்?

சந்தர்: பாட்டுக்களில் குயிலாகத்தான் இருக்கு இந்தப் பறவை.

சேகர்: இப்படி எல்லாமே நன்றாக இருந்தும், படம் ஒரு நிறைவைத் தரவில்லையே, ஏன்? ஏதோ குறையோடுதானே வெளியே வர வேண்டியிருக்கிறது! என்ன காரணம்?

சந்தர்: காரணம், வெளியே சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்களே, அந்தப் புதிய முடிவுதான்!

சேகர்: அப்படியென்றால்..?

சந்தர்: ஆங்கிலேயர்களே, அவர்கள் கலாசாரம் ஒப்புக்கொண்டபோதிலும், இந்த முடிவைத் தலைவன் தலைவி உறவில் கொடுக்க பயந்து சகோதரன், சகோதரி உறவில் கொடுத் திருக்கிறார்கள்.

சேகர்: அப்படியென்றால், நம்மவர்கள் தழுவும்போது துணிந்துவிட்டார்கள் என்று சொல்லு!

சந்தர்: ஆமாம். பலன், அறிவால் ஒப்புக்கொள்ள முடிய லாம்; இதயத்தால் ஒப்புக்கொள்ள முடியவில்லையே!

சேகர்: கரெக்ட்! வானம்பாடியாக இருக்கவேண்டிய புதிய பறவை, வல்லூறாகிவிட்டது.

புதிய பறவை
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism