Published:Updated:

நகரும் கல்!

நகரும் கல்!

நகரும் கல்!

நகரும் கல்!

Published:Updated:

விகடன் பொக்கிஷம்  
நகரும் கல்!  
பிலோ இருதயநாத்
நகரும் கல்!
நகரும் கல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நகரும் கல்!
நகரும் கல்!

வ்வாண்டு நான் நீலகிரிக்குச் சென்றிருந்தபோது, ஓர் அதிசயமான விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். கோத்தகிரியிலிருந்து ஆறு மைல் பஸ்ஸிலும், அங்கிருந்து ஆறு மைல் ஒற்றையடிப் பாதையில் மலையின் மேலும் நடந்து சென்று, கோத்தர்களின் ஊராகிய, திருச்சிக்கடி என்ற குக்கிராமத்தை அடைந்தேன். அங்கு சுமார் நூறு கோத்தர்களின் வீடுகள் இருக்கின்றன. அவர்கள் என்னை உபசரித்து, ''இன்று எங்கள் ஊரில் நடக்கும் ஒரு விசேஷத்தில் நீங்களும் கலந்து கொள்ளவேண்டும்'' என்று கேட் டுக் கொண்டார்கள்.

அன்று பகல் சுமார் ஒரு மணி அளவில், ஓவ்... ஓவ்... என்று எல்லோரும்

கூவிக்கொண்டே மலை யின் மேலே வந்தார்கள். நானும் அவர்களுடன் குறிப்பிட்ட இடத் திற்குச் சென்றேன்.

அங்கே சுமார் இரண்டடி நீளம், இரண்டடி அகலம், முக்கால் அடி உயரமுள்ள கல்லொன்று, பரந்த ஒரு மைதானத்திலே கிடந்தது. அக்கல்லைக் காண வந்த கோத்தர் கூட்டத்தாரில் ஒருவருக்குத் 'தெய்வம்' வந்து, சற்று தூரத்திலிருந்து ஆடிக்கொண்டே, அந்தக் கல் இருக்குமிடத்திற்கு வந்தார் அவர். ஆடும்போது, ஊரில் உண்டாகப்போகும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கூறினார்.

''இந்தச் சக்திவாய்ந்த கல், மாதத்திற்கு ஒரு முறை இடம் விட்டு இடம் மாறுகிறது. சாதா ரணமாக அமாவாசைக்கு முன், நள்ளிரவில் இடி இடிப்பதுபோல் ஓர் ஓசை கேட்கிறது. அவ்வோசை கேட்ட மறுநாள் காலை, இந்தக் கல் இடம் விட்டு இடம் மாறி இருக்கிறது. மேலும் ஒவ்வோர் ஆண்டும், முதல் அமாவாசைக்கு முன், இந்தக் கல் புல்தரையின் மேல் நகர்ந்துகொண்டே போய், கீழே இருக்கும் குளத்தில் நீராடி விட்டு, இங்கு வருகிறது. அப்படி வரும்போதும் போகும்போதும் ஏற்படும் புல் தேய்வுகள் மறுநாள் நன்றாகத் தெரியும்!'' என்று கூறி னார்கள் பக்கத்தில் இருந்தவர் கள்.

அதன்பிறகு, கல் இருக்கும் இடத்திற்குச் சுமார் ஆறு கெஜ தூரத்தில் எல்லோரும் கல்லைப் பார்த்தவண்ணமாக நின்று, அவர் கள் பாஷையில் ஜபம் செய்த பின், தரையில் விழுந்து வணங்கி னார்கள். எவ்விதமான பண்டங் களோ, பலிகளோ, பூக்களோ படைக்கவில்லை. விருப்பம் இருந் தால், ஒற்றை நாலணாவை ஏதா வது ஓர் இலையிலோ அல்லது மரப்பட்டையிலோ பூசாரி வாங்கி, அதைத் தரையில் வைக்கிறார். பிறகு, கொடுத்தவர் கல்லை நோக்கி தரையில் விழுந்து கும் பிடுகிறார்.

கல் வணக்கம் முடிந்ததும், கல்லைச் சுற்றி நின்று, கோத்தர்கள் சிறிது நேரம் வாத்தியங்கள் வாசிக்கிறார்கள். பின்பு வட்ட மாக நின்று, குடையைத் தோளின் மேல் வைத்துக்கொண்டு நடன மாடுகிறார்கள். நடனத்திற்குப் பின் மறுபடியும் வந்த வழியா கவே தங்கள் இல்லங்களுக்குத் திரும்புகிறார்கள்.

''அக்கல்லில் அப்படி என்ன சக்தி மறைந்திருக்கிறது? அதைக் காணாதவர்களுக்கு எப்படி விளக்குவது?'' என்ற சிந்தனையா கவே நான் வருவதைக் கண்ட அவர்கள், ''பக்தியால் நெருப்பை மிதிப்பதையும், கையில் அள்ளுவ தையும், தேகமெல்லாம் குண்டூசி குத்திக் கொள்வதையும் கண்டிருக் கிறீர்களா? அதைப் போலத்தான் இதுவும் ஒரு வகை வழிபாடு'' என்று கூறினார்கள். ''நாம் ஒரு விதத்தில் கடவுளை வழிபடுகி றோம்; அவர்கள் ஒருவிதமாக வழிபடுகிறார்கள் போலும்!'' என்று எண்ணிக்கொண்டே ஊர் திரும்பினேன்.

நகரும் கல்!
தொகுப்பு:ரவிபிரகாஷ்                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism