Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:

விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விஞ்ஞான யுகப் புரட்சி!

தலையங்கம்

க்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுமே இன்றைய விஞ்ஞானிகளின் கட்டுப் பாட்டுக்குள் கிட்டத்தட்ட வந்துவிட்டதை அறிந்து உலகமே வியந்து சிலிர்த்து நிற்கிறது!

விரும்பும் தோற்றத்தில், விரும்பும் குணநலன்களுடன் அபாரமான திறமைகள் கொண்ட மனிதனை விஞ்ஞானத்தால் உருவாக்கமுடியும் என்கிற சாதனை இந்த நூற்றாண்டில் சாத்தியமாகப் போகிறது. பிறப்பிலேயே வரக்கூடிய குறைபாடுகளைத் தவிர்க்கவும், உயிர் விழுங்கும் ஆபத்தான நோய்களை அடியோடு ஒழிக்கவும், மனித ஆயுளை விருப்பம் போல் நீட்டித்துக்கொள்ளவும் முடியும் என்பது இந்த விஞ்ஞான யுகப் புரட்சியின் பரவசமூட்டும் பரபரப்பான பக்கங்கள்.

இந்த அற்புதம் மட்டும் நடந்தேறிவிட்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்துப் பரவசத்துடனும் பயத்துடனும் உலக அளவில் விவாதங்கள் நடந்துகொண்டிருக் கின்றன.

இந்த ஜீன் புரட்சி, மனித வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், இதன் சாதனைகளும் சாத்தியக்கூறுகளும் மனித இனத்தை அழிவுச்சக்திக்கு வழிநடத்திச் செல்லாமல் இருக்கவேண்டும்.

இந்த அரிய கண்டுபிடிப்பின் பலனாக, எந்த வகையிலும் மனிதநேயம் பாதிக்கப்படாமல் இருக்க, உலக அளவில் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி விவாதிக்கத் தொடங்கவேண்டும்.

ஏராளமானவர்களின் மூளையும், ஏராளமாகப் பணமும் செலவு செய்து நிகழ்த்தப்போகும் பிரமிக்கத்தக்க இந்தச் சாதனை, வருங்கால சந்ததிக்கு முழு அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படவேண்டியது மிக அவசியம்.

தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism