சிறந்த இசையமைப்பாளருக்கான லதாமங்கேஷ்கர் விருதைப் பெற, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூருக்குக் குடும்பத்துடன் கிளம்பிக்கொண்டிருந்தார் இளையராஜா.
"என் தந்தை என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு வைத்த பெயர் 'ஞானதேசிகன்'. பள்ளியில் சேர்க்கும்போது 'ராஜையா' என்ற இன்னொரு பெயரைக் கொடுத்துவிட்டார். சென்னை வந்தபின், தன்ராஜ் மாஸ்டர் என்னை 'ராஜா' என்றுதான் அழைப்பார். பஞ்சு அருணாசலம் அவர்களோ, 'இளையராஜா' என்று மாற்றுப்பெயர் சூட்டினார். கலைஞர் ஐயாவோ 'இசைஞானி' என்று பட்டம் சூட்டிவிட்டார். இப்படி எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்தபடி என்னை அழைக்க, நான் என்ன பேறு பெற்றேன் என்ற கேள்வி என்னுள் அடிக் கடி எழும்!" என்று சிரிக்கிறார் இளையராஜா.
"நீங்கள் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறீர்கள்?"
"அது உங்கள் பாடு! வந்த சுவடு தெரியாமல் சென்றுவிடவே விருப்பம் எனக்கு!"
|