Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்

Published:Updated:

விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

மிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி எடுத்த 'பூம்புகார் விழா', இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. அது பற்றி விகடன் வெளியிட்ட இரு வார கட்டுரையிலிருந்து ஒரு துளி...

'திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!!'

'ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!!'

\ என்று சந்திரனுக்கும் (திங்கள்) சூரியனுக்கும் (ஞாயிறு) மங்கல வாழ்த்துப் பாடினார், 'சிலப்பதிகாரம்' படைத்த இளங்கோ அடிகள்.

அவர் மட்டும் இப்போது இருந் திருந்தால் 'ஞாயிறை'யும் திங்களை யும்

போற்றியிருப்பதோடு நிறுத்தியிருக்கமாட்டார்.

'செவ்வாய் போற்றுதும்! செவ் வாய் போற்றுதும்!!' என்று கூடவே ஒரு வரி சேர்த்துப் பாடியிருப் பார்!

காரணம், கடந்த செவ்வாய்க் கிழமை - 17.4.73 - அப்படித் தனிப் பெருமைபெற்ற விழாவொன்று நடந்தது, அவர் பாடிய சிலப்பதி காரத்துக்கு! அதுதான் தமிழக அரசு காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்திய பூம்புகார் இந்திர விழா!

பண்டைய சோழன் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் தலை நிமிர்ந்து நின்ற மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் இன்றையக் கிராமமான காவிரிப்பூம்பட்டினத்தில் இல்லை. அன்றிருந்த 'கொடும்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்' மிக்க நாளங்காடி கடைவீதிகள் இன்று இல்லை. இருந்தாலும் மக்க ளின் எழுச்சியும் துடிப்பும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் புதுப்பித்து எழுந்திருப்பதுபோல் பொங்கிக்கொண்டிருக்கிறது!

"காவிரிக்குக் கரையெடுத்த கரிகால்பெருவளத்தான் வாழ்க!"

"கரிகால்சோழனுக்கு விழா எடுத்த கருணாநிதிச் சோழன் வாழ்க!"

ஊர்வலம் ஆர்ப்பரித்து முழங்குகிறது.

காலப்பெட்டகம்

கட்டியம் கூறுவதுபோல் குதிரை வீரர்கள் முன்வர, அம்பாரி வைத்த பட்டத்து யானை மீது கரிகாலன் (சிலை வடிவில்) வர, தொடர்ந்து எட்டு யானைகள் வர, நாட்டியக் குதிரைகள் தாளத்துக்கேற்ப நடன மாடிவர, தஞ்சையிலுள்ள புகழ் பெற்ற கோயில்களிலுள்ள வாக னங்களும் வாத்தியங்களும் அழ குக்கு அழகு சேர்ப்பதுபோல் மின் னியும் முழங்கியும்வர, சிலப்பதிகாரக் காட்சிகளைச் சித்திரிக்கும் அலங்கார வண்டிகள் அணிவகுத்து வர, சரித்திரத்தில் தனித்து நிற்கும் சோழப் பேரரசனான கரிகால் பெரு வளத்தான் ஊர்வலம் வருகிறான். அவனுக்கு விழா எடுத்த பெருமித நிறைவோடு தமிழரசின் முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள், தம் அமைச்சர் குழு புடைசூழப் 'பத்தினிக் கோட் டம்' அருகே அமைக்கப்பட்ட மேடை மீதிருந்து ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மாலை வேளையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழில்பொங்க மின்னிக்கொண்டு இருந்தது சித்திரக்கூடம். அதனருகே கூட்டம் பரபரத்துக்கொண்டு இருக் கிறது. அப்போது, பரபரப்பே இல் லாமல், சித்திரக்கூடத்தை நிறை வோடும் அமைதியோடும் பார்த்து மெய்ம்மறந்து நிற்கிறார் ஒருவர்.

அவர்தான் அச் சித்திரக்கூடத்தை மூன்றாண்டுகளாக அயராது உழைத்து நிர்மாணித்த சிற்பியான திரு. வை.கணபதி ஸ்தபதி!

"இந்தச் சிற்பக்கூடம் அமைந்த தில் என் பெருமை ஒன்றுமில்லை. எல்லாக் கலைகளிலும் நுணுக்கமான அறிவும், தேர்ச்சியும் பெற்ற கலைஞர் திலகமான நம் முதல்வர் அவர்களின் பெருமைதான் இது. ஒவ்வொரு சிற்பத்தையும் செதுக்கு முன் அதன் வரைபடத்தை அவரி டம் காட்டுவேன். எனக்குத் தோன் றாத பல நுணுக்கமான திருத்தங்களை அவர் தெரிவித்திருக்கிறார்" என்றார் அவர் பரவசத்துடன்.

சித்திரக்கூடத்தில் இருக்கும் கோவலனும், கண்ணகியும் கை கோத்து நிற்பதுபோல் சிலையை அமைக்க யோசனை சொன்னவர் முதல்வர்தானாம். "வாழ்க்கையிலே தான் அவர்கள் இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்தார்கள். சிலை வடி விலாவது அவர்களை நாம் சேர்த்து வைப்போமே!" என்றாராம்.

அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பதவி விலகக் காரணமாக இருந்த 'வாட்டர் கேட்' ஊழல் விவகாரம் வெடித்தது இந்த ஆண்டுதான். அப்போது விகடனில் வெளியான தலையங்கம்...

வாட்டர் கேட்!

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது, ஆளும்கட்சியான குடியர சுக் கட்சியினர் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தில்லு முல்லுகள் செய்திருக்கின்றனர். வாஷிங்டனில் உள்ள 'வாட்டர் மேட்' என்னும் ஜனநாயகக் கட்சியினரின் தேர்தல் அலுவலகத்தில் திருட்டுத்தனமாக நுழைந்து உளவு வேலைகள் செய்திருக்கின்றனர். யந்திர சாதனங்களின் மூலம் அவர் களது பேச்சுக்களை ஒட்டுக் கேட் டிருக்கின்றனர். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக எங்கிருந்தோ வந்த பணம், தண்ணீர்போல் செல வழிக்கப்பட்டிருக்கிறது.

காலப்பெட்டகம்

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த முறைகேடான செயலில் ஈடு பட்ட ஏழு பேர் கைது செய்யப் பட்டு, தண்டிக்கப்பட்டிருக்கிறார் கள். பிறரைக் காட்டிக்கொடுக்காமல், குற்றத்தைத் தாங்களே ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டு, அவர்களுக்குத் 'தேர்தல் நிதி'யிலி ருந்து ஏராளமான பணம் லஞ்சமா கக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காலப்பெட்டகம்

அதிகார பீடமான வெள்ளை மாளிகையின் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதியின் அந்தரங்க ஆலோ சகர்களுக்கும் இந்தச் சதியில் பங்கு உண்டு. முதலில் மறுத்தவர்களும், மழுப்பியவர்களும், முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைத்தவர்களும் நாளடைவில் உண்மையை ஒப்புக் கொண்டார்கள். இது நீதித் துறைக்கும், பத்திரிகைகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

"என் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கோ, வெள்ளை மாளிகையில் உள்ள அதிகாரிகளுக்கோ இதில் துளியும் சம்பந்தமில்லை" என்று முதலில் அடித்துக் கூறிவந்த ஜனா திபதி நிக்சன், உண்மை வெளிப்பட் டதும், "ஐயோ! இது அக்கிரமம்! என்னிடமிருந்து எல்லாவற்றையும் மறைத்துவிட்டார்களே! நடந்ததை கேட்டு நான் திகைத்தேவிட்டேன்" என்று கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெள்ளை மாளிகை அதிகாரி களில் சிலர் ராஜினாமா செய்தனர். ஒருவர் வேலையை விட்டு நீக்கப் பட்டார். அமெரிக்க மக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். 'இது என்ன அநியாயம்! இத்தனை பெரிய ஊழலா நடந்திருக்கிறது? ஆட்சியும் அதிகாரமும் ஜனநாய கத்தை அழிக்கவா பயன்படுத்தப் பட்டிருக்கின்றன!' என்று துணுக்குற் றார்கள்.

மதிப்பிழந்த ஜனாதிபதி நிக்சன், ஒரு நாள் மக்களிடம் உண்மையை ஒப்புக்கொண்டார். "இதற்கான முழு தார்மிகப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கண்ணீருக்கிடையே கூறினார்.

வாட்டர் கேட் விவகாரம் இத்து டன் முடிந்துவிடும் என்று சொல்லி விட முடியாது.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சய மாகக் கூறலாம்:

அமெரிக்காவில் சுதந்திரமான நீதித்துறையும், தைரியமான பத்திரி கைகளும் இல்லாவிட்டால், ஆளும் கட்சியின் இந்த முறைகேடான செயல் வெளியே வந்திருக்காது; மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.

முரசொலி...

காலப்பெட்டகம்

பி.சி.கணேசனை ஆசிரியராகக் கொண்ட 'மாதவி' என்ற புதிய இதழ் ஒன்றின் ஆரம்ப விழாவில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி கூறினார்:|

"மாதவி முதலில் திருவாரூரில் நடத்தி, இடையில் தொய்வு ஏற் பட்டு, இப்போது சென்னையில் ஆரம்பித்துள்ளனர். முரசொலியும் திருவாரூரில் ஆரம்பிக்கப்பட்டு, இடையில் தொய்வு ஏற்பட்டு, சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது முரசொலியின் வெற்றி யைக் கணிக்கும்போது, மாதவியும் நிச்சயம் வெற்றிபெறும் என்பதைச் சொல்லத் தேவையில்லை."

பிறகு பேசிய முரசொலி மாறன், "மாதவியை முரசொலிபோல வெற்றி பெருக என்று வாழ்த்துவது அத்தனை பொருத்தமாகத் தோன்ற வில்லை. பெருமைப்படும் அள விற்கு விற்பனையில் முரசொலி சாதனை புரியவில்லை. அதன் விற் பனை குறைவுதான்!" என்றார்.

சென்னை அண்ணா மேம் பாலம் கட்டப்பட்டது இந்த ஆண்டுதான்!

அண்ணா மேம்பாலத்தில் அரியானா யானை!

புதிதாகக் கட்டப்பட்ட 'அண்ணா மேம்பால'த்தில் சைக் கிள்களும், நடந்து போகிறவர்களும் ஏறிப் போகக்கூடாது என்பது தடை உத்தரவு. சென்ற 4.7.73 அன்று காலை, மேம்பாலத்தில் அரியானா மாநிலத்து யானை ஒன்று கம்பீரமாக நடந்துசென்ற தைச் சிலரே பார்த்திருக்கக்கூடும்! அந்த யானையைப் பல்லவா போக்குவரத்து பஸ்கள் பயந்து கொண்டே 'ஓவர் டேக்' செய்தது வேடிக்கையாக இருந்தது!

அரியானா யானைக்குக்கூட 'அண்ணா மேம்பால'த்தைக் காண வேண்டும் என்று ஆசை போலிருக்கிறது!

'ப்ளாக் பாக்ஸ்'

போயிங் விமானம் விபத்திற் குள்ளானபோது, 'ப்ளாக் பாக்ஸ்' அகப்பட்டதா என்பது பற்றிக் குறிப்பாகச் செய்திகள் வந்ததே, அதென்ன 'ப்ளாக் பாக்ஸ்'?

ஆரஞ்சு வண்ணமுள்ள உருண் டையான 'எலெக்ட்ரானிக்' சாதனம் இது. இதை 'ஃப்ளைட் ரிக்கார்டர்' என்றும் கூறுவார்கள். விமானத்தில் ஏற்படும் எல்லா அசைவுகளையும் இரண்டு அங்குலமுள்ள மிக மெல் லிய அலுமினியத் தகட்டில் ஒரு டேப்ரிக்கார்டர் போலப் பதிவு செய்வதுதான் இதன் வேலை. எந்த உஷ்ணத்திலும் அழியாது. எப்பேர்ப்பட்ட தாக்குதலிலும் உடையாது. விமான விபத்து ஏற் பட்டால், அருகில் எங்காவது உருண்டு ஓடிப் போய்க் கிடக் கும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, நாட்டின் சரித்திர நிகழ்ச்சிகளைத் தொகுத்து, ஒரு பேழையில் வைத் துப் பூமியில் புதைத்தார் பிரதமர் இந்திராகாந்தி. அது சர்ச்சைக் குள்ளானது. அப்போது விகடனில் வெளியான தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி...

பேழைக்குள் பிரசாரமா?

காலப்பெட்டகம்

இந்த 25000 வார்த்தைகள் கொண்ட ஏட்டில் என்ன எழுதப் பட்டிருந்தது என்பதை அரசோ, அதைத் தொகுத்த இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகமோ வெளியிட வில்லை.

பொதுவாக, கடந்த 25 ஆண்டு களில் நடைபெற்ற நாட்டின் முக் கிய நிகழ்ச்சிகளும், முன்னேற்றத் திட்டங்களும், சாதனைகளும் இந்த ஏட்டில் இடம் பெற்றிருக்கும் என்றே எல்லோரும் நினைத்திருந் தார்கள்.

ஆனல், அந்த வரலாற்று ஏட்டில் பல குறைபாடுகளும், தவறுகளும் இருப்பதோடு, அது பாரபட்சமற்ற முறையில் தயாரிக்கப்படவுமில்லை என்ற உண்மையைத் தமிழக அரசின் சரித்திர ஆராய்ச்சித் துறை யின் கமிஷனர் திரு.பத்ரிநாத் சுட் டிக் காட்டியிருப்பதுதான் எல்லோ ருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு சில ஆண்டு களிலேயே வியக்கத்தக்க வகையில் ஆதரவு பெற்று முன்னணிக்கு வந்து, காங்கிரசையே தோற்கடித்துப் பதவியேற்றுள்ள தி.மு.கழகத்தைப் பற்றியோ, தமிழகத்தில் சாதி வேற் றுமையைக் களைந்தெறிய வாழ் நாளெல்லாம் போராடி வரும் ஈ.வெ.ரா-வைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட, இந்த ஏட்டில் இடம் பெறவில்லையாம்!

பாரத நாட்டின் வரலாறு என்ற பெயரில் எழுதி வைக்கப்பட்ட 'சரித்திர ஏட்டின்' உள்ளடக்கத்தை முழுதும் பாரத மக்கள் அறிய உரிமை உண்டு. அதை உடனேயே வெளியிட வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.

வரலாறு காணாத மின்சாரத் தட்டுப்பாடு பற்றிக் கவலை தெரிவித்து, நான்கு பக்க அளவில் நீண்ட தலையங்கம் தீட்டியுள்ளது விகடன், 25.2.73 இதழில்.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism