Published:Updated:

மண்வாசனை

மண்வாசனை

மண்வாசனை

மண்வாசனை

Published:Updated:

விகடன் பொக்கிஷம்
மண்வாசனை
மண்வாசனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மண்வாசனை
மண்வாசனை
.
மண்வாசனை
மண்வாசனை

டைவேளை வெளிச்சத்தில்தான் நாம் பட்டணத்தில் இருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படுகிறது. அந்த அளவுக்கு முன்பகுதி முழுவதும் பிரமிப்பான திரைக்கதையமைப்பால் கிராமத் தோடு, கதையோடு, கதாபாத்திரங் களோடு நம்மை ஐக்கியப்படுத்தி விடுகிறார் பாரதிராஜா.

குறிப்பாக, கிராமத்து நடைமுறை பழக்க வழக்கங்களை ஓவி யமாகத் தீட்டி, கிராமத்து அத்தி யாயத்தைச் சுவைபட எழுதி, மனசுக்குள் மண்வாசனை மணக்கும்படி செய்திருக்கிறார். அதில் முத்துப்பேச்சி, ஒச்சாயி என்கிற இரண்டு பெண் வாசனையையும் தூக்கலாகவே கொடுத்திருக்கிறார்!

கழுவாயி, அம்சு, கரஸ்பாண்டு, எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் என்று படத்தில் வரும் அத்தனை பேரும், வந்து போகும் வெறும் பாத்திரங்களாகிவிடாமல் நெஞ்சில் நின்றுவிடுகிற படைப்புகளாக இருப்பதே உண்மை.

வழக்கமாய் கொச்சையாகப் பேசிக் கூச்சப்படுத்தும் அந்த காந்திமதியா இதில் முதிர்ச்சியான பாத்திரத்தில் வந்திருக்கிறார்?! "எதை எப்பக் கொடுக்கணும்னு எனக்கு தெரியும்யா... நான் என்ன வெவரம்கெட்ட சிறுக்கியா!" என்று வீட்டுத் திண்ணையில் வக்ரம் பேசும் ஆரம்பக் காட்சிகளிலும், 'ஊசி வெடி, பாசி வெடி, விருது நகர் ஆனை வெடி, கேட்டுக்கடி கொக்கு, நான் வத்தலகுண்டு ருக்கு' போன்ற 'நாட்டு வெடி' களை நடுநடுவே வீசுமிடங்களிலும் கைதட்டல்களைத் தனதாக்கிக் கொண்டு விடுகிறார் காந்திமதி.

சினிமா கதாநாயகனுக்கென்று காலம் காலமாக எழுதி வைக்கப் பட்டிருக்கும் இலக்கணங்களோடு தன்னை இணைத்துக்கொள்ளா மல், ஒரு சராசரி கிராமத்து இளை ஞராக மட்டும் அறிமுகமாகியி ருக்கும் பாண்டியன்; அழகாய்ச் சிரித்து, இனிமையாய்ப் பேசி, இதமாய் சிணுங்கி, கொஞ்சமாய் அழும் ரேவதி - இருவருமே எந்த விதத்திலும் இயக்குநருக்குத் தொல்லை கொடுக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் கண்ணனும், இசையமைத்துள்ள இளையராஜா வும் டைரக்டருக்குச் செமத்தை யான பக்கபலம்! எழில்மிகு இயற் கைக் காட்சிகளை முன்னவர் காமிராவுக்குள் புகுத்திக்கொண்டு விட்டாரென்றால், பின்னவரின் பின்னணி இசை, டைரக்டரின் கற்பனைகளுக்குத் தாலாட்டுப் பாடுகிறது!

மண்வாசனை
மண்வாசனை
விகடன் விமரிசனக் குழு                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism