Published:Updated:

கலங்கவிடலாமா காளத்திநாதரை?

கலங்கவிடலாமா காளத்திநாதரை?

கலங்கவிடலாமா காளத்திநாதரை?

கலங்கவிடலாமா காளத்திநாதரை?

Published:Updated:

விகடன் பொக்கிஷம்
கலங்கவிடலாமா காளத்திநாதரை?
கலங்கவிடலாமா காளத்திநாதரை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலங்கவிடலாமா காளத்திநாதரை?
கலங்கவிடலாமா காளத்திநாதரை?
.
கலங்கவிடலாமா காளத்திநாதரை?
கலங்கவிடலாமா காளத்திநாதரை?

ண்ணப்பரை ஆட்கொண்டு அருள் புரிந்த இடம்; அப்பர், சம் பந்தர், சுந்தரர், மாணிக்கவாசக ரால் பாடப் பெற்ற ஸ்தலம்; நக்கீ ரர் சாப விமோசனம் பெற்று 'கயிலை பாதி, காளத்தி பாதி' என்று பாடிய இடம்; ஆதிசங்கரர் விஜயம் செய்து, அம்மன் (ஞானபிரஸு னாம்பிகை) சந்நிதியில் ஸ்ரீ சக்ரம் பதித்த இடம்; காஞ்சிப் பெரியவர் களின் திருப்பாதம் பட்ட இடம்; பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுத் தலம்... இப்படிப் பல சிறப்புகளைப் பெற்றிருப்பது ஸ்ரீ காளஹஸ்தி «க்ஷத்திரம்.

 

லிங்கத்தின்மீது இறைவனைப் பூஜித்து முக்தி பெற்ற ஒரு சிலந்தி, ஒரு சர்ப்பம், ஒரு யானை மூன்றின் உருவங்களும் பதிக்கப்பட்டுள்ளன. கர்ப்பக்கிரகத்தின்மீது எப்போதும் தங்கும் வெளிச்சத்திற்காக மேற் கூரையில் துவாரமோ, இடை வெளியோ எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் ஓங்கி உயர்ந்த மலை, மறு பக்கம் பொன்மயமாக ஓடிக் கொண்டிருக்கும் ஸ்வர்ணமுகி ஆறு. மலைக்கும் ஆற்றுக்கும் நடுவே, மனத்திற்கு இதமான ஓர் அழகிய சூழ்நிலையில் அமைந் திருக்கிறது இந்தத் தலம்.

பல்லவர்கள், ஆந்திரர்கள், சோழர்கள் ஆட்சியின்கீழ் சிறிது சிறிதாகக் கட்டப்பட்ட இந்த ஆல யத்தின் பல பகுதிகள் கீலமடைந்து இன்று புனருத்தாரணம் செய்யப் படவேண்டிய நிலையில் இருக் கின்றன.

காஞ்சிப் பெரியவர்களின் ஆசியு டன், வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று காளஹஸ்தியில் உறை யும் காளத்தியப்பனுக்குக் கும்பாபி ஷேகம் செய்வது என்றும், நாளடை வில் கோயிலின் மோசமான பகுதி களைப் பழுதுபார்த்துச் செப்பனிடு வது என்றும் திருப்பணிக் கமிட்டி யினர் தீர்மானித்திருக்கின்றனர்.

ஆனால், இவற்றுக்கெல்லாம் தேவையான நிதி வசதி இல்லா மல், பக்தர்களையே பெரிதும் நம்பி இந்தப் புனிதப் பணியில் இறங்கி யிருக்கிறார்கள், தேவஸ்தான திருப் பணிக் குழுவினர்.

"1966-ம் ஆண்டு காஞ்சிப் பெரிய வர்கள், சாதுர்மாஸ்ய விரத காலத் தில் இங்கே வந்து தங்கினார். சுவாமிகள் வருவதற்கு முன்னால் கோயிலின் வருமானம் 70,000 ரூபாய்தான். அவர் திருவடி பட்ட பிறகு ஆண்டு வருமானம் 7 லட்சமாக உயர்ந்தது. இப்போது கோயில் திருப்பணிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடமிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்க இருக்கிறோம். அதுவும் வட்டிக்குதான்" என்கிறார் கும்பாபிஷேகக் கமிட்டி மெம்பர்களில் ஒருவரான கிருஷ்ணன்.

தன் திருமணம் நடக்கக் குபே ரனிடம் கடன் வாங்கிய ஸ்ரீநிவாச னிடம், பாவம், தன் கும்பாபிஷேகத் திற்காகக் கடன் வாங்குகிறார் காளத்திநாதர்!

கடன்பட வைத்துக் காளத்தி நாதரை நாம் கலங்கவிடலாமா!

கலங்கவிடலாமா காளத்திநாதரை?
கலங்கவிடலாமா காளத்திநாதரை?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism