Published:Updated:

பழிவாங்கிய பன்றி!

பழிவாங்கிய பன்றி!

பழிவாங்கிய பன்றி!

பழிவாங்கிய பன்றி!

Published:Updated:

விகடன் பொக்கிஷம்
பழிவாங்கிய பன்றி!
பழிவாங்கிய பன்றி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பழிவாங்கிய பன்றி!
பிலோ இருதயநாத்
பழிவாங்கிய பன்றி!
பழிவாங்கிய பன்றி!

தகையிலிருந்து சுமார் இருபது மைல் பஸ் மார்க்கமாகச் சென்றால், கோத்தகிரியை அடையலாம். இயற்கையின் எழிலார்ந்த சூழ்நிலையில்தான், 'லாங்குட் சோலை' என்ற காடு ஒன்று இருக்கிறது. நான் கோத்தகிரியில் தங்கியிருந்த இல்லத்தில், சுமார் 80 வயதுடைய ஒரு பெரியவர் இருந்தார். அவரும் நானும் ஒரு நாள் அச்சோலையைக் காணச் சென் றோம். என்னுடன் வந்த பெரியவர், சிறியவனாக இருந்த போது அச்சோலைக்கு அடிக்கடி வந்திருக்கிறாராம். அங்கே நடந்த பல சம்பவங்களை ரசமாகக் கூறினார் அவர்.

அங்கிருக்கும் பல பங்களாக்களில் மேலை நாட்டினர் பலர், முன்பு வாழ்ந்து வந்தார்கள். ஒரு பங்களாவில் ஓர் அழகிய தம்பதி வசித்து வந்தார்கள். அந்தத் தம்பதியின் ஒற்றுமையைக் கண்டு பலர் பொறாமைப்பட்டார்கள் என்று கூடச் சொல்லலாம். அவர்களின் இன்பத்தைக் கண்டு விதி சிரித்தது; சதி செய்தது.

ஒரு நாள் காலை, வேட்டைப் பிரியரான அந்தத் துரை, டிரைவரை அழைத்து, "நான் பன்றி வேட்டைக்குச் செல்லவேண்டும். துப் பாக்கியைத் தயார் செய்" என்று கூறினார். பிறகு மனைவியிடம் சொல்லிவிட்டுச் சோலைக்குள் புகுந்தார். சிறிது நேரத்திற்குப் பின், 'டுமீல்' என்று ஓசை கேட்டது. பின்பு, வெகு நேரம் கழித்து

துரை வந்தார்.

"துப்பாக்கியின் ஓசை அப்பொழுதே கேட்டதே! ஏன் இவ்வளவு நேரம்?" என்று கேட்டாள் மனைவி. "பெரிய காட்டுப் பன்றி ஒன்று அடி வாங்கிக்கொண்டு ஓடி விட்டது. கிடைக்கவில்லை" என்றார்.

"ஐயோ பாவம்! எப்படியாவது போய், அதை மறுபடியும் சுட்டுவிட்டு வாருங்கள். அப்படிக் குற்றுயிருடன் விடுவது நமக்கு அழகல்ல!" என்று கூறினாள் மனைவி. சிற் றுண்டி அருந்திய பின், மறுபடியும் பன்றியைத் தேடிக்கொண்டு சென்றார் துரை.

பன்றியை வெகு நேரம் தேடினார். ஒரு புதரில் பன்றி, மேல் மூச்சுடன் படுத்திருந்தது. அதைக் கண்ட அவர், சுடுவதற்காகச் சற்று அருகில் சென்றதும், பன்றி திடீரென்று எழுந்து துரைமீது பாய்ந்து, அவரைத் தன்னு டைய கோரைப் பற்களால் குத்தி, அவர் வயிற்றைக் கிழித்துவிட்டது. துரை நகர முடியாமல் விழுந்துவிட்டார். சிறிது நேரத்திற் குப் பின், மனைவியும் டிரைவரும் அவரைத் தேடிக்கொண்டு சென்றார்கள். சோலையில் சிறிது தூரத்தில், துரை குருதி வெள்ளத்தில் கிடந்ததையும், துரைக்குப் பக்கத்தில் பன்றியும் இறந்து கிடந்ததையும் கண்டார்கள். அக் கோரக் காட்சியைக் கண்ட மனைவி மனம் உடைந்து, மயங்கி விழுந்துவிட்டாள்.

பின்னர், தன் கணவர் இறந்த தினத்திலி ருந்து அவ்வம்மையார் தன் சொத்தையெல் லாம் ஏழைகளுக்குத் தான தர்மம் செய்து, தன் கணவரின் ஆத்மா சாந்தி அடைய அன்னதானமும் செய்து, கடைசியில் மேலை நாட்டுக்குச் சென்றாளாம். 'அந்த டிரைவருக்கு மாதா மாதம் இங்கிலாந்திலிருந்து இன்னும் சம்பளம் வந்துகொண்டிருக்கிறது' என்று கூறி முடித்தார் அந்தப் பெரியவர்.

பழிவாங்கிய பன்றி!
பழிவாங்கிய பன்றி!
தொகுப்பு: ரவிபிரகாஷ்                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism