Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
.
தலையங்கம்

நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது

தலையங்கம்

போபால் நகரில், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து அஜாக் கிரதையினால் வெளியேறிய விஷவாயு, நூற்றுக்கணக்கான மக்களைப் பூச்சி புழுக்களைப்போல் கொன்று குவித்திருக்கும் கொடூரச் செய்தி, தேசத்தையே பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. உடனடி யாக மடிந்துபோனவர்களைத் தவிர, ஆயிரக்கணக்கானோர் மூச்சுத் திணறலுடன் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடினார்கள்; பல்லாயிரக்கணக்கானோர் உயிருக்குப் பயந்து, பாதுகாப்பான இடங் களுக்கு விரைந்தார்கள். அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள், போர்க்காலத்தில் காணும் காட்சிகளைப் போல் நம் நெஞ்சைப் பிழிந்தன.

இம்மாதிரி விபத்துக்கள் நடைபெற்றுப் பெரிய அளவில் உயிர்கள் பலியாகும்போதுதான் அரசு விழித்துக்கொண்டு அனுதாபம், கண்டனம், விசாரணை என்று சுறுசுறுப்பாகிறது. உண்மையில், இன்று நம்மைச் சூழ்ந்துள்ள இத்தகைய பல ஆபத்துக்களிடையேதான் நாம் 'வாழ்ந்து'கொண்டிருக்கிறோம். விஞ்ஞான, நாகரிக முன்னேற்றத்தின் காரணமாக, இம்மாதிரியான பல தொழிற்சாலைகள் நாடெங் கும் தோன்றியிருக்கின்றன. அவற்றிலிருந்து வெளியேறும் விஷ வாயுவும், நச்சுப் புகையும், கழிவு நீரும் காற்றிலும் குடிநீரிலும் விஷத்தைக் கலக்கின்றன. இதனால் மனிதனின் உடல்நலம் சிறிது சிறிதாகப் பாதிக்கப்பட்டு, நாளடைவில் அவன் தீராத நோய்க்கு ஆளாகி, உயிரும் துறக்கிறான்.

ரசாயன விஷம் மனிதனை நேரடியாக மட்டும் தாக்கவில்லை; அவன் உட்கொள்ளும் உணவிலும் அது கலந்துவிடுகிறது. விஷம் கலந்த மண்ணும் நீரும் பயிர் விளைச்சலையும் பெருமளவு பாதிக் கின்றன. உணவு உற்பத்தியைப் பாதிப்பவையெல்லாம் நம் உயிரையும் பாதிக்கின்றன. இந்த ஆபத்தைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், பயங்கர விபத்துக்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்தமாக மக்கள் மடியும்போது மட்டும் கவலை தெரிவிப்பதில் என்ன பயன்?

'சுற்றுப்புறச் சூழலில் நச்சுக் கலப்பதைத் தடுத்துச் சமுதாயத்தைப் பாதுகாக்கவேண்டும்' என்று கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் முழங்கப்படுகிறதே தவிர, அதற்கான தீவிர நடவடிக்கைகளில் அரசு இறங்குவதாகத் தெரியவில்லை. கட்டுப்பாடு, விதிமுறைகளைச் சரிவரச் செயல்படுத்தாமல், மக்கள் உயிரைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், காற்றிலும் மண்ணிலும் நீரிலும் நஞ்சைக் கலக்கும் தொழிற்சாலைகளின் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது மிக மிக அவசியம்; மிக மிக அவசரமும்கூட!

தலையங்கம்
தலையங்கம்