Published:Updated:

நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!

நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!


விகடன் பொக்கிஷம்
நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!
நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
"நத்தையும் வேண்டாம்;கொக்கும் வேண்டாம்!"
நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!
நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!
.
நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!
நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!

நாட்டில் வறுமை ஒழிந்து எல்லோருக்கும் உண்ண உணவு, இருக்க இடம் கிடைத்துவிடும். ஆனால், உங்களின் வலக்கையை இழக்கவேண்டும். சம்மதமா?

வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்பதற்கேற்ப, என் வலது கை கொடுத்துக்கொண்டுதான் இருக் கிறது. அந்த வலது கையையே கொடுத்தால்தான் எல்லோருடைய பசி தீரும் என்றால், வாழ்நாள் முழுவதும் இடது கையால் சாப்பிட நான் தயார்.

100 வயது வரை கெட்டியான ஆயுள்; ஒரு வியாதி வராது. ஆனால், நாளைக் காலையிலி ருந்து மிக மிக அவலட்சணமாக ஆகிவிடுவீர்கள். இந்த வரம் கிடைத்தால் ஒப்புக்கொள்வீர் களா?

20 வயதுவரை பறவை வாழ்க்கை; சுற்றித் திரிகிறோம்.

20 முதல் 40 வரை கழுதை வாழ்க்கை; பொதி சுமக்கிறோம்!

40 முதல் 60 வரை நாய் வாழ்க்கை; அல்லல்படுகிறோம்!

60 முதல் 80 வரை நத்தை வாழ்க்கை; கூட்டுக்குள் மறைந்து கொள்கிறோம்.

80 முதல் 100 வரை கொக்கு வாழ்க்கை; ஒற்றைக்காலில் சாவுக் காகத் தவமிருக்கிறோம்.

அடியேன் கழுதை வாழ்க்கை முடிந்து, நாய் வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறேன்.

எனக்கு நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண் டாம். இருக்கிறவரை 'இப்போ இருக்கிற மாதிரியே' இருந்துவிட்டுப் போய்விடுகிறேன்.

பத்து லட்ச ரூபாய் பணம் கிடைக்கும். ஆனால், நாளையிலிருந்து நீங்கள் பெண்ணாகிவிடுவீர்கள். இஷ்டமா?

பத்து லட்சம் பெரிய தொகைதான். பெண்ணாக மாற நான் தயார். ஆனால், என் மனைவியை ஆணாக மாற்ற, உத்தர வாதம் கொடுக்கவேண்டும்.

ஒரு ஏரியில் விழுந்துவிட்டீர்கள். நீச்சல் தெரியாது. உங்கள் பரம வைரி அந்த வழியே வருகிறார். அவரை உதவிக்கு அழைப்பீர்களா?

தண்ணீர் தலைக்குமேலே இருக்கிறபோது விரோதமெல்லாம் நினைவுக்கு வராது.

இந்தத் திறமை நமக்கு இல்லையே என்று எதைப் பற்றி யாவது ஏங்குவது உண்டா?

'ஆண்டவனே, எனக்கு ஏன் சங்கீத ஞானத்தைக் கொடுக்கலே' அப்படின்னு என்னை நானே நொந்துப்பேன். என் படங்களில் சில பாடல்கள் நல்லா அமையறது என் சங்கீத ஞானத்தை வெச்சு இல்லை. அன்றைய தேதிக்கு மியூ ஸிக் டைரக்டர் அஞ்சுல ஒண்ணு கூட சொத்தைக் கத்தரிக்காய் கொடுக்கலைன்னு அர்த்தம்.

நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!
நத்தையும் வேண்டாம்; கொக்கும் வேண்டாம்!