Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்


விகடன் பொக்கிஷம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

பிரதமர் இந்திராகாந்தி 'வரலாற்றுப் பேழை' புதைத்ததைக் கேலி செய்யும் வகையில், பத்திரிகையாளர் சோ தானும் ஒரு 'டைம் காப்ஸ்யூல்' புதைத்தார். அதுபற்றி..

சோ புதைத்த 'டைம் காப்ஸ்யூல்'

பொங்கல் அன்று மாலை சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களைச் சிரிக்க வைத்து, சில மணி நேரம் கவலைகளை மறக்கச் செய்து, துக்ளக் இதழின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார் சோ.

அந்த விழாவில் துருப்பிடித்த ஒரு தகர டப்பாவை 'டைம் காப்ஸ்யூல்' என்று சொல்லி மேடைக்கு அருகிலேயே மண்ணில் புதைத்தார். அதில் என்ன எழுதி புதைக்கப்பட்டது என்பதை விழா இறுதியில் சோ படிக்க, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். "ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவில் நடந்த முதல் சுதந்திரப் போர் சிப்பாய்க் கலகம். அப்போது சிப்பாயாக இருந்த சோ அவர்கள், அந்தக் கலகத்தில் முன்னணி யில் நின்றார். பிறகு பல சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தி,

கடைசியாக 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி மவுன்ட் பேட்டனிடமும் அட்லியிடமும் பேசி, திரு.சோ இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார். பாகிஸ்தான் சீனப் போர்களில் திரு. சோ, தானே போர் விமானங்களில் அமர்ந்து, டாங்குகளை ஓட்டி, கடல்மார்க்கமாகச் சென்று அதி தீவிர சாகசச் செயல் களைப் புரிந்தார். சோ, தாஜ்மகாலைக் கட்டினார்; தஞ்சை பெரிய கோயிலைக் கட்டினார்; கூவம் ஆறு வெட்டினார்; தனது முற்பிறவிகளில் சோ, காளிதாசனாகவும், கம்பனாகவும், பெர்னாட்ஷாவாகவும் அவதரித்தார்..."

- இப்படி சோ படித்துவிட்டு, "இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ, அவ்வளவு உண்மை டெல்லியில் புதைத்த காலப் பெட்டகத்திலும் இருக்கிறது" என்றார்.

அஞ்சுகம்...

காலப்பெட்டகம்

வேளாண்மைத் துறையினர், 65 நாட்களுக்குள் பயிராகின்ற பாசிப்பயறு ஒன்றுக்கு 'அஞ்சுகம்' என்று பெயரிட்டு விளம்பரம் செய்கிறார்கள். 'அஞ்சுகம்' என்பது முதலமைச்சரின் அன்னை பெயர்.

வந்தியத்தேவன் சிலை!

ஆகஸ்ட் 14-ம் தேதி நள்ளிரவில், ஜெமினி ரவுண்டானாவில் போலீஸ் பாதுகாப்புடன் இறக்கி வைக்கப்பட்டது, வெண்கலத் தாலான குதிரை வீரன் சிலை.

"முதலில் இந்தக் குதிரை வீரன் சிலை அடையாறு திரு.வி.க. பாலத்தில் வைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு திடீரென்று ஜெமினி ரவுண்டானாவில் வைக்கப்போவதாக அரசாங்க இன்ஜினீயர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார் இந்த சிலையைச் செய்த சிற்பியான எம்.என்.ஜெயராமன்.

"இந்த வெண்கலச்சிலை மட்டும் பத்தரை அடி உயரம். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் வந்தி யத்தேவனையும் அவன் குதிரையையும்போல சிலை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதாக இன்ஜினீயர்கள் தெரிவித்தார்கள். ஓவியர் வினு வரைந்த குதிரை வீரன் படத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதை வைத்து மாதிரி சிலையைச் செய்தேன். இரண்டு முறை முதலமைச்சர் நேரில் வந்து, திருத்தங்கள் கொடுத்தார். குதிரையில் இருந்த அலங்கார ஆபரணங்களை எடுத்துவிடும்படி சொன்னார்" என்றார் ஜெயராமன்.

இந்த சிலையைச் செய்ய நாலு மாதங்கள் ஆயிற்று. இரண்டு கால்களில் குதிரை நிற்பதால், பின்புறக் கால்கள் பலத்தைச் சுமக்க வேண்டி யிருந்தது. அதை நல்ல முறையில் சமாளித்திருப் பதாக இன்ஜினீயர்கள் சிற்பியைப் பாராட்டியி ருக்கிறார்கள். மூன்றரை டன் எடையுள்ள இதைத் தூக்க கிரேன் பயன்படுத்தப்பட்டது.

ஜெமினி ரவுண்டானாவில் மொத்தம் இரண்டு குதிரைச் சிலை கள் வைக்கப்போகிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெமினி பகுதியில் வைக்க அனுமதி கேட்ட பெரியார் சிலையையும் ஜெயராமனே தயார் செய்துகொண்டிருக்கிறார்.

காலப்பெட்டகம்

சென்னையில் டெலிவிஷன் நிலையம் செயல்படத் தொடங்கி யது 1975-ஆம் ஆண்டிலிருந்து. அதன் முன்னோட்டமாக வெளி யான கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

சென்னையில் டெலிவிஷன்

அண்ணாசாலையை அடுத் துள்ள தமிழ்நாடு அரசாங்க எஸ் டேட்டில் எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக் குப் பின்னால், கூவத்தை நோக்கிய படி ஒரு பெரிய கட்டடம் எழுந் திருக்கிறது. அதுதான் டெலிவிஷன் நிலையம். கண்டதுமே அடையாளம் கண்டுகொள்வதற்கு அங்கே உயரமான டெலிவிஷன் டவரைக் காணோம். நிகழ்ச்சிகளை வாங்கி, டெலிகாஸ்ட் (ஒளிபரப்பு) செய்வதற்கு டவர் அவசியம்.

காலப்பெட்டகம்

சாதாரண டெலிவிஷன் டவருக்கு பதிலாக 'ரிவால்விங் டவர்' (சுழல் கோபுரம்) வேண்டும் என்று தமிழக அரசு கேட்டிருக்கிறது. அதற்கு மத்திய அரசு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

ரிவால்விங் டவர் அமைப்பதற்கு செலவு அதிகம் பிடிக்கும். இந்தி யாவிலுள்ள மற்ற டெலிவிஷன் நிலையங்களில் (புதுடில்லி, பம்பாய், சண்டிகர்) ரிவால்விங் டவர் கிடையாது. ரிவால்விங் டவர் அமைக்கப்பட்டால், டெலிவிஷன் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்புச் சக்தி அதிகமாக இருக்கும் என்றும், பய ணக் கவர்ச்சி (Tourist Interest) அம்ச மாக இருக்கும் என்றும் கருதப்படு வதாகத் தமிழக அரசு செய்தி - மக்கள் தொடர்பு இயக்குநர் திரு. பரமசிவம் கூறுகிறார்.

"டெலிவிஷன் நிலையம் எப் போது இயங்கத் தொடங்கும்?"

"முதலில் டவர் தயாராக வேண்டும். 1975 மார்ச்சில் இயங்க வேண்டும் என்பது திட்டம்" என்றார் பொதுப்பணித் துறை கட்டடப் பிரிவு தலைமை இன்ஜினீயர் திரு.அம்புரோஸ்.

டவரைக் கட்டி முடிப்பதற்குப் பல மாதங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது. டவருக்கான 'பைலிங்' வேலைகளைச் செய்வதற்கான சில இயந்திரங்கள் ஸ்தலத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பிறகு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. சென்னை நிலையத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும், கல்கத்தாவிலும் ஹைதராபாத்திலும் டி.வி.நிலையம் அமைப்பதில் மத்திய அரசு விசேஷ அக்கறை காட்டுவதாகவும் செய்திகள் அடிபடுகின்றன. இதனால், சென்னை நிலையத்திற்கு வரவேண்டிய சாத னங்கள் அங்கு திருப்பிவிடப்படு வதாகவும் கேள்வி.

"டெலிவிஷன் எப்பொழுது வரும் என்று மற்றவர்களைவிட நாங்கள் அதிக ஆவலோடு எதிர் பார்க்கிறோம்" என்கிறார் பிரபல டென்னிஸ் வீரர் கிருஷ்ணன். 'கிருஷ்-டி.வி.' என்ற பெயரில் டெலிவிஷன் பெட்டிகளை கிருஷ் ணன், பாலு, ஏ.என்.சீனிவாச ராவ் ஆகிய மூவரும் தயாரித்து வருகி றார்கள்.

"டெலிவிஷன் வந்ததும் டிமாண்ட் அதிகம் இருக்கும் என்று நினைத்து இப்போதே செட்டுகளை வாங்கிக்கொண்டு போகிறார்கள். ஏராளமானவர்கள் 'புக்' செய்தும் வைத்திருக்கிறார்கள். முன்பு புக்கிங் வேகமாக நடந்துகொண்டிருந்தது. டி.வி. நிலையம் எப்பொழுது இயங்க ஆரம்பிக்கும் என்பது தெரியாததால் வேகம் கொஞ்சம் குறைந்திருக்கிறது" என்கிறார் வி.ஜி.சந்தோஷம்.

"டெலிவிஷனுக்கு லைசென்ஸ் கட்டணம் எப்படி?"

"வருடக் கட்டணம் 30 ரூபாய். இப்பொழுது சென்னையில் டி.வி. செட் வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் டி.வி. நிலை யம் இயங்காவிட்டாலும் வருடத் திற்கு 15 ரூபாய் லைசென்ஸ் கட் டணம் செலுத்தியாகவேண்டும்."

டெலிவிஷன் நிலையம் அநேக மாகத் தயார். டெலிவிஷன் பெட்டி கள் தயாராகி, விற்பனைக்கு வந்து விட்டன. சென்னை டெலிவிஷன் நிலையம் எப்பொழுது இயங்கும்? மத்திய அரசுக்கே வெளிச்சம்!

- ஜே.எம்.சாலி

தமிழுக்கும் கலைக்கும் சோதனையான ஆண்டு இது. இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கும் தொண்டாற்றிய பல ஜாம்பவான்கள் மறைந்தது இந்த ஆண்டில்தான்.

காலப்பெட்டகம்

கொத்தமங்கலம் சுப்பு

காலப்பெட்டகம்

மக்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பரவ வேண்டும், நம் கலாசாரங்கள் ரத்தத்தில் ஊற வேண்டும், பண்பட்ட சிந்தையில் உயரிய கருத்துக்கள் பயிராகி, நாடு செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் காலமெல்லாம் எழுதி வந்த அன்பர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் உறக்கத்திலேயே உயிர்நீத்து, இறைவனடி சேர்ந்து விட்ட செய்தி, தமிழன்னையைக் கண்கலங்கச் செய்துவிட்டது.

திரையுலகில் பணியாற்றிய போதும், பத்திரிகைகளில் எழுதிய போதும், கவியரங்குகளில் பங்கு பெற்றபோதும் சுப்பு தம் முத்திரை யைப் பதிக்காமல் விட்டதில்லை. தமது பாடல்களில், எழுத்தில், பேச்சில் தேசிய உணர்வையும், தமிழ்ப்பற்றையும், கிராமிய மணத் தையும், நகைச்சுவையையும் கலந்து நம் இதயத்தைத் தொடும் ஓர் அபூர்வ பாணியை உருவாக்கிய வர் அவர்.

அவர் ஒரு கவிச்சுரங்கம். அவரது பேனாவிலிருந்து சொற்கள் சொட்டும்போதும், கருத்துக்கள் கொட்டும்போதும் குற்றால அருவி யின் சுகத்தை அனுபவிக்கலாம். 'ஒளவையார்' திரைப்படம் அவர் உண்மையான உழைப்பிற்கு ஒரு சான்று. 'காந்தி மகான் கதை' அவரது தூய உள்ளத்தின் பிரதிபலிப்பு. 'தில்லானா மோகனாம்பாள்' அவரது உன்னத கற்பனை வளத்திற்கு ஒரு சிகரம்.

வாழ்க்கைப் போராட்டங்களை யும் குடும்பப் பொறுப்புக்களையும் சிரித்துக்கொண்டே சந்தித்த ஓர் அசாதாரண மனிதர் சுப்பு. பரம ரசிகர். பிறரைத் தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் இணையற்றவர்.

ஒரு நல்ல கவிஞரை, நல்ல தமிழ் அன்பரை, நல்ல மனிதரை இழந்த துயரத்தில் தமிழகம் சோகக் கண்ணீர் வடிக்கிறது.

மு.வரதராசனார்

மு.வ. என்றாலே அன்பு, பணிவு, கனிவு, கடமை, ஒழுக்கம் என்று பொருள்.

'முன்னுக்கு வருக' என்று இளை ஞர்களைத் தம் எழுத்தால் உணர்ச்சி யூட்டி ஆர்வத்துடன் அழைத்த டாக்டர் மு.வ., சங்க இலக்கியங் களில் தேடியது இயற்கை. தம் வாழ்நாளில் ஊசியோ மாத்திரையோ ஏற்றுக்கொள்ளாமல் அவர் பின் பற்றியது இயற்கை வைத்தியம். இன்று அவரை அணைத்துக் கொண்டதும் இயற்கை.

பள்ளி ஆசிரியராகப் பணியி னைத் துவங்கி, பல்கலைக்கழகத் துணைவேந்தராக உயர்ந்த அவர் வாழ்க்கை சொல்வது... 'எறும்பு போல் விடாது முயலவேண்டும்!' அதன்படி, அவர் முயற்சியின் முடிவாய் வாழ்ந்து மறைந்தார். ஒரு தமிழன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அவர். ஓர் அரசியல் தலைவரை அவரது கட் சிக்காரர்கள்தான் பின்பற்றுவார்கள். ஆனால் மு.வ. அவர்களைப் பின்பற்றிய லட்சக்கணக்கான இளைஞர்கள் எல்லாக்கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்கள் 'மு.வ. கட்சி' என்ற தனி உலகத்தைச் சேர்ந்தவர்கள்.

இதயவலித் துடிப்போடு கடமையை முடித்து, சென்னைக்கு வந்தவர், வீட்டிலேயே இயற்கை வைத்திய முறையில் தன் மனக் கட்டுப்பாடே மருந்தென்று இருந் தார். தன் வைத்திய முறை தோல்வி கண்டதை உணர்ந்த நிலையில், மருத்துவமனையில் நுழையச் சம்மதித்திருக்கிறார் அவர்.

அமைச்சர் அன்பழகன் அவரை மருத்துவமனையில் காண வந்த போது, "நேற்று இரவும் சந்திக்க வந் தீர்களாம். அப்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேனாம். மன்னிக்க வும்!" என்றார் பணிவுடன். தனக் குக் கீழ் பேராசிரியராகப் பணியாற்றி யவர் அந்த அமைச்சர் என்பதை அவர் எண்ணவில்லை.

மறைந்த அவரை நினைத்து 'அல்லி' அழுகிறாள். 'கரித்துண்டு' கரைகிறது. 'கி.பி. 2000' 'என்னைக் காண வந்தாயோ' என்று துடிக் கிறது.

பி.ஆர்.பந்துலு

திரைப்படத் தொழிலை வியா பாரமாக மட்டும் நினைக்காமல், அடித்தளத்தில் தேசிய உணர்வோடு கூடிய படங்கள் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டவர் தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலு. சித்தூரில் பள்ளி ஆசிரியராகத் தன் வாழ்நாளைத் தொடங்கியவர், பிறகு நாடக நடிகராக மாறி, திரைப்பட நடிகராகி, டைரக்டராக உயர்ந்து, தயாரிப்பாளராக முன்னுக்கு வந்தவர்.

அவர் தயாரித்து நடித்த ஒரு கன்னடப் படத்தில் நடிப்பிற்கான பரிசு தனக்குக் கிடைத்தபோது, அதை நிராகரித்து, உண்மையில் பரிசு பெறத் தகுதி உடையவர் சக நடிகர்தான் என்று கூறிய பரந்த மனம் படைத்தவர் பந்துலு. பந்துலுவின் மறைவு, கலைமகளுக்கு ஒரு பேரிழப்பு!

சந்திரபாபு

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பற்றி, நடிகை மனோரமா கூறியது:

காலப்பெட்டகம்

"எனக்கும் சந்திரபாபுவுக்கும் இடையே ஏதோவோர் ஒற்றுமை இருந்தது. நான் நாடகங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தபோது, சந்திரபாபு நகைச்சுவை நடிகராக நடித்துக்கொண்டிருந்தார். கதாநாயகியாக இருந்த நான், நகைச்சுவை நடிகையாக மாறிய பிறகு, 'ஒரு படத்திலாவது சந்திரபாபுவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்' என்று என் தோழிகளிடம் அடிக்கடி கூறுவேன். அவர் 'குமாரராஜா', 'கவலையில்லாத மனிதன்' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகு, 'இனிமேல் நான் காமெடியனாக நடிக்கமாட்டேன்; ஹீரோவாகத்தான் நடிப்பேன்' என்று திடீரென ஓர் அறிக்கை விட்டார். அதைக் கேட்டதுமே, 'ஐயோ, என் ஆசை நிறைவேறாது போலிருக்கிறதே' என்று மிகவும் வருத்தப்பட்டேன். பிறகு, 'போலீஸ்காரன் மகள்', 'யாருக்குச் சொந்தம்', 'நீதி' ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்ததில் என் ஆசை நிறைவேறியது. 'போலீஸ்காரன் மகள்' படத்தில் நான் பேசின 'மெட்ராஸ் பாஷை'யை அவர் பாராட்டாத நாளே கிடையாது.

சந்திரபாபுவை முதன்முதலாக கோயம்புத்தூரில் நடந்த ஒரு விழாவில் நடிகை எல்.விஜயலட்சுமிதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சந்திரபாபு தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருந்தார். அவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். பாட்டு, டான்ஸ், நடிப்பு எல்லாவற்றையும் பிரமாதமாகச் செய்வார். பேன்ட், கோட் போட்டுக் கொண்டு நகைச்சுவை நடிப்பை நாகரிகமாக்கியவரே அவர்தான்! அவர் பாடிய பாடல்களை யாராலுமே மறக்கமுடியாது.

அவர் மறைவதற்கு இரண்டு நாள் முன்பு நான் சேலத்தில் இருந்தேன். அப்போது என் மகனிடம் அவரைப் பற்றி இரவு ஒரு மணி வரையில் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் பாடின பாட்டுக்களையெல்லாம் பாடிக் காண்பித்தேன். இது ஏதோ எதேச்சையாகத்தான் நடந்தது. சேலத்திலிருந்து சென்னை வந்ததும், 'சந்திரபாபு மறைந்துவிட்டார்' என்ற செய்தி என்னைத் திகைக்க வைத்தது. என்னால் நம்பவே முடியவில்லை.

கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை

காலப்பெட்டகம்

நடை பயிலும் குழந்தைகளையும் தனது நட்டுவாங்கத்தினால் நாட்டியமாட வைத்தவர் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை அவர்கள். தனது பள்ளியில் சேர்ந்த மாணவிகளைத் தரணி முழுவதும் புகழ் அடையச் செய்வர். அவர் டான்ஸ் மாஸ்டராக மட்டும் இருக்கவில்லை; தாய் காட்டும் பாசத்தையும், தந்தை காட்டும் கண்டிப்பையும், குரு காட்டும் கருணையையும் தனது சிஷ்யைகளிடம் காட்டினார்.

அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்', பிள்ளையவர்கள் தயாரித்த நாட்டிய நாடகத்தால் பன்மடங்கு புகழடைந்தது.

தனது நாட்டியப் பள்ளியின் வெள்ளி விழாவை விஜயதசமி தினத்தன்று பெரிய அளவில் விழாவாக எடுத்து கலைஞர்களையெல்லாம் கௌரவிப்பதாகத் திட்டமிட்டிருந்தார் தண்டாயுதபாணி. அன்று, நாட்டிய உலகில் தன் அனுபவங்களைத் திரட்டிப் புத்தகமாக வெளியிடவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். அந்த விழாவைத் தானும் கண்டுகளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைமகள் தன் அருமைப் புதல்வனைத் தன்னிடம் அழைத்துக்கொண்டுவிட்டாளோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

சசிகுமார்

காலப்பெட்டகம்

பட்டப்படிப்பை முடித்து, நம் ராணுவத்தில் சேர்ந்து, எல்லைப் பகுதிகளில் தீரமிக்க செயல்கள் புரிந்து, பின்னர் கலையுலகில் புகுந்து, நாடக மேடையிலும் திரைப்படத்திலும் திறமைமிக்க நடிகராக முன்னணிக்கு வந்து கொண்டிருந்த இளைஞர் சசிகுமாரும், அவரது துணைவியார் திருமதி சசிகலாவும் கடந்த வாரம் தங்கள் வீட்டில் நடந்த தீ விபத்தில் சிக்கி, மரணத்துடன் போராடி, உயிர் நீத்த நிகழ்ச்சி நெஞ்சம் தாங்காத வேதனை மிகுந்ததாகும். திரையுலகில் எல்லோராலும் பாராட்டப்பெற்ற இளைய பிள்ளையாகவும், நெஞ்சில் தேசியக் கனல் கொழுந்து விட்டெரிந்த இளைய பாரதத்தின் ஒரு சின்னமாகவும் திகழ்ந்தவர் சசிகுமார்.

செம்பை வைத்தியநாத பாகவதர்

காலப்பெட்டகம்

கர்னாடக இசை உலகில் 70 ஆண்டு காலமாக ஒலித்துக்கொண்டிருந்த வெண்கல நாதம் அடங்கி விட்டது. எந்நேரமும் கிருஷ்ணனின் புகழ் பாடிக்கொண்டிருந்த செம்பை வைத்தியநாத பாகவதர், ஒத்தப் பாலம் கிருஷ்ணன் கோவிலிலேயே தன் கடைசி கச்சேரியைச் செய்து விட்டு உயிர் நீத்தது, என்றுமே மறக்கமுடியாத துயரச் செய்தி.

78 வயதிலும் இளைஞருக்கு உரிய உற்சாகத்துடன் காணப்பட்ட செம்பை, இளைஞர்களை ஊக்கு விக்க என்றுமே தவறியதில்லை. குறிப்பாக, பக்க வாத்தியக்காரர்களை உற்சாகப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் அவர்.

குருவாயூரப்பனிடம் அளவு கடந்த பக்திகொண்டிருந்த செம்பை, தான் இழந்த குரலை அப்பனின் அருளால் மீண்டும் பெற்றவர். கடைசி மூச்சு இருக்கும்வரையிலும், தெய்வ பக்தியோடு கர்னாடக இசையையும் பேணிக் காத்த செம்பையின் சேவை, இன்றைய இளைய தலைமுறையினருக்கு உதாரணமாக இருக்கும்.

நவாப் ராஜமாணிக்கம்

பிரமிக்கத்தக்க வகையில் தத்ரூபமாகக் காட்சிகளை அமைத்து நாடக ரசிகர்களைப் பரவசப்படுத்தியவர், அண்மையில் மறைந்த நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கம். அவருடைய தசாவதாரம், பக்த பிரகலாதன், கிருஷ்ணலீலா, ராமாயணம் போன்ற நாடகங்களைப் பார்க்கச் சென்றவர்கள் தாங்கள் பார்த்தது நாடகமா அல்லது திரைப்படமா என்ற வியப்புடனேயே வெளியே வருவது வழக்கம்.

நாடக நடிகராக, ஆசிரியராக, தயாரிப்பாளராக இருந்த ராஜமாணிக்கம், நாடகங்களில் பெண் வேடங்களுக்கும் ஆண்களையே உபயோகப்படுத்திக்கொண்டவர். சிறுவர்களை வைத்துக்கொண்டே பெரிய நாடகங்களை நடித்துச் சாதனைகள் பல புரிந்தார். ஒரு சமயம் கோவையில் காந்தியடிகளின் முன்னிலையில் நந்தனார் நாடகத்தை நடத்தி, மகாத்மாவின் பாராட்டுதலைப் பெற்றவர்.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்