Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

நாடு நன்றி செலுத்தும்

தலையங்கம்

பாரத நாடு நம்முடையது என்ற எண்ணம் வந்தால், இங்குள்ள சொத்துக்களெல்லாம் நமக்குச் சொந்தம் என்ற எண்ணம் தன்னாலேயே வந்துவிடும். அப்படியின்றி, ஆட்சியை எதிர்ப்பவர்கள், அவை அரசுக்குச் சொந்தம் என்று எண்ணி, அவற்றை அழிக்க முற்பட்டால், இந்த நாட்டின் மீது அவர்களுக்குச் சிறிதும் அக்கறையில்லை என்றுதான் கருதவேண்டும்.

நாட்டுப்பற்று மிக்கவர்கள் நாணயமான, நாகரிகமான, அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுவார்களே தவிர, 'அழிப்பேன், ஒழிப்பேன்' என நாசவேலைகளில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்.

பொதுச் சொத்தைக் காப்பாற்றும் எண்ணம் தோன்றவேண்டுமானால், நாட்டுப் பற்றும் பொறுப்பு உணர்ச்சியும் மட்டும் இருந்தால் போதாது; மனிதாபிமானமும் இருக்கவேண்டும். 'நம் பணம்தானே பாழா கிறது' என்ற உணர்வோடு, 'மனித உயிர் பறிபோகிறதே' என்கிற இரக்க உணர்ச்சியும் இருந்தால்தான் பொறுப்புள்ள குடிமக்களாகக் கடமையாற்ற முடியும்.

இத்தகைய மனிதாபிமானம்மிக்க இரு தொழிலா ளர்கள், கடந்த வாரம் பம்பாயில் ஒரு ரயில் கவிழாமல் தவிர்த்த செய்தியைப் படித்தபோது, உள்ளம் பெருமிதத்தால் சிலிர்த்தது.

எங்கோ நடந்து சென்றுகொண்டிருந்த அவ்விரு வரும், ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு, எதிரில் வரும் ரயிலை நிற்கும்படி எச்சரித் திருக்கிறார்கள். அந்த டிரைவர், வேகத்தைக் குறைத்து, மெள்ளக் கடந்துவிட்டிருக்கிறார். ரயில் தப்பியது; ஆனால், அந்த விரிசல் பெரிதாகிவிட்டது.

அடுத்த கணம், அந்தப் பாதையில் மற்றொரு ரயில் வருவதைப் பார்த்து அவ்விருவரும் திடுக்கிட்டிருக் கிறார்கள். உடனே 'காபி'னுக்கு ஓடி, பெருமுயற்சி செய்து, அந்த ரயிலை நிறுத்திவிட்டிருக்கிறார்கள். கட்டுப்பாடுடனும் கடமையுணர்ச்சியுடனும் செயலாற் றிய இவ்விரு தொழிலாளர்களும், பொதுச் சொத்தைக் காத்ததோடு, நூற்றுக்கணக்கான மக்களின் உயிர் களையும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

அந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இவ்விரு தொழிலாளர்களுக்கு நன்றி செலுத்தினார் களாம். இவர்களைப் போன்ற மனிதாபிமானம்மிக்க கடமை வீரர்களுக்கு பாரத நாடே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது..

தலையங்கம்
தலையங்கம்