Published:Updated:

ஓளி மயமான எதிர் காலம் உண்டா?

ஓளி மயமான எதிர் காலம் உண்டா?


பொக்கிஷம்
ஓளி மயமான எதிர் காலம் உண்டா?
ஓளி மயமான எதிர் காலம் உண்டா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒளி மயமான எதிர் காலம் உண்டா?
ஓளி மயமான எதிர் காலம் உண்டா?
ஓளி மயமான எதிர் காலம் உண்டா?
ஓளி மயமான எதிர் காலம் உண்டா?

ரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. தமிழ் நாட்டில் கடுமையான மின்சார வெட்டு அச்சுறுத்திய நேரம். தொழிற்சாலைகளை விழுங்கி, வீடுகளையும் விழுங்க ஆரம்பித்தது இருட்டு. ஜெனரேட்டரையும், பெட்ரோமாக்ஸ் லைட்டையும், அரிக்கேன் லாந்தரையும், சிம்னி விளக்கையும், மெழுகுவத்தியையும் தேடி மக்கள் அலைபாய்ந்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, ஏதோ அற்புதம் நடந்தது போல, மின்சார வெட்டு வந்த வேகத்தில் மறைந்துவிட்டது. 'இது என்ன மாயம்?' என்று புருவத்தை உயர்த்தியவர்களுக்கு அன்று சரியான விளக்கம் கிடைத்திருக் காது.

மீண்டும் இருள் சூழும் அபாயம் உள்ள இந்த நேரத்தில், அந்தப் பழைய நிகழ்ச்சியை நினைவுகூர்ந்த 'விஷயம் தெரிந்த ஒருவர்' சொன் னார்:

"1975-ம் ஆண்டு நெருக்கடி நேரத்தில் அன்றைய அரசு அவசர அவசரமாக ஓர் ஆலோசனைக் கமிட்டியை அமைத்தது. தமிழ கத்தில் மின்வளத்தைப் பெருக்கிய வர் என்ற புகழைப் பெற்ற வி.பி. அப்பாதுரை உட்பட முகம்மது அலி, ஜி.டி.அரசு, வைத்தியநாதன் போன்ற மின் பொறியியல் நிபுணர்கள் அந்தக் கமிட்டியில் இருந்தார்கள். இவர்கள் அடங்கிய முதல் கூட்டத்திலேயே 'உடனே மின்சார வெட்டை ரத்து செய்யுங் கள்' என்றார் அப்பாதுரை. துணிவு மிகுந்த முதலமைச்சர் கருணா நிதியே திகைத்தார். 'சரியான நிர்வாகத்தின் மூலம் மின்சார உற்பத்தியைச் சீர்படுத்த முடியும்' என்றார் அப்பாதுரை. அனல் மின் நிலையங்களை மேற்பார்வை யிடும் பொறுப்பை இந்தக் கமிட்டி யினர் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு சுறுசுறுப்புடன் பணி புரிய, ஒரே மாதத்தில் மின்சார வெட்டு மறைந்தது."

ஓளி மயமான எதிர் காலம் உண்டா?

அதற்குப் பிறகு அந்த ஆலோச னைக் கமிட்டி என்ன ஆயிற்று என்கிறீர்களா? அதிகார வர்க்க மும் நிபுணர் குழுவும் ஒத்துப்போக முடியவில்லை. அந்த கமிட்டி க்ளோஸ்!

"மீண்டும் ஓய்வுபெற்ற தொண்டு கிழவர்களைக் கூப்பி டுங்கள் என்று நான் சொல்ல வில்லை. நிர்வாகத்தை முடுக்கிச் சீர்படுத்தினாலே போதும் என்று அப்போது கற்றுக்கொண்ட பாடம் இப்போது பயன்படாதா? மின் சார வாரியம் என்பது ஏதோ சாதா கம்பெனி அல்ல. தீர்க்க மான தொழில்நுட்ப அறிவு, முடிவு களை எடுக்கும் துணிவு, அனுப வம்- இந்த மூன்றும் அதை நிர்வ கிப்பவருக்குத் தேவை" என்றார் அந்த 'விஷயம் தெரிந்தவர்'.

"மின்சார வாரியத்தில் பணி புரிந்த அனுபவமும் திறமையும் மிக்க 70 பேருக்குத் தமிழக அரசு 1968-ம் ஆண்டில் திடீரென்று கல்தா கொடுத்தது. திறமைத் தொடர்பு இதனால் அறுபட, பத்து ஆண்டுகளாகவே மின்சார வாரியம் தள்ளாட்டம் போடுகி றது" என்று வருத்தத்துடன் கூறிய சிலரைச் சந்திக்க நேர்ந்தது. வி.பி.அப்பாதுரை சேர்மன் பதவியிலிருந்து விலகிய பிறகு, பத்து ஆண்டுகளில் 9 பேர் தமிழக மின் சார வாரியத்தின் சேர்மன்களாக வந்து போயிருக்கிறார்கள். மேயர் பதவி போல இந்தப் பதவி வகிப் பவர்களை ஆண்டுக்கொரு முறை மாற்றுவதால் நிர்வாகத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன என் கிறார்கள்.

இன்றைய மின்சார வெட்டுக்கு முக்கிய காரணம் என்ன? மின் சார வாரியத் தலைவர் கே.சொக்க லிங்கம் கூறுகிறார்:

"தமிழ்நாட்டில் 18 புனல் மின்சார நிலையங்கள் இருக்கின் றன. 4 அனல் மின் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றின் மின்சார உற்பத்தித் திறன் 2, 719 மெகாவாட். ஆனால், பல காரணங்களால் இவை தங்கள் உற்பத்தித் திறனுக்கு ஏற்றவாறு மின்சாரத்தை உற்பத்தி செய்வதில்லை. அதிலும் கோடை காலத்தில் இவை உற்பத்தி செய் யும் மின்சக்தி மிக மிகக் குறைந்து விடுகிறது.

புனல் மின்சாரத்தில் இரண்டு வகை. மேட்டூர், பரம்பிக்குளம், பெரியாறு போன்றவை விவசா யத்திற்குத் தண்ணீர் விடப்படும் மாதங்களில் மட்டும்தான் மின் சார உற்பத்திக்குப் பயன்படும். இவை கோடை காலத்தில் பயன் அளிக்காது. குந்தாவிலும் கோடை யாறிலும் பாசனம் இல்லாத காலங்களிலும் மின் உற்பத்தி நடக்கிறது. ஆகவே, கோடை காலத்தில் 50 சதவீதம் மின் உற் பத்தி இருக்கிறது. அத்துடன் பவானி, அமராவதி நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சென்ற ஆண்டு அக்டோபர்- நவம் பரிலேயே மேட்டூர் அணையை மூடிவிட்டார்கள். இதனால், அப் போது முதலே புனல் மின்சக்தி குறைந்து, மூன்றில் ஒரு பங்குதான் கிடைக்கும் என்ற நிலை ஏற் பட்டுவிட்டது.

அனல் மின்சாரத்தில் இரண் டில் ஒரு பங்குதான் கிடைக்கும் என்ற நிலை இப்போது! காரணம் மட்டமான கரியினால் அனல் மின் நிலையங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. நெய் வேலியில் சென்ற ஆண்டு ஜூலை யிலிருந்தே மின்சாரம் அளிப்பது குறைந்தது. பிறகு நவம்பர், டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நெய்வேலி சுரங்கங் கள் மூடப்பட்டு, பழுப்பு நிலக்கரி எடுக்கமுடியாமல் மின்சார உற் பத்தியும் பாதிக்கப்பட்டுவிட்டது. இதனால்தான் இன்று தமிழ்நாட் டில் மின்சார வெட்டு அமலாக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

ஒகேனக்கல்தான் நிறைவேற்ற முடியாமல் இருந்துவரும் பெரிய திட்டம். தூத்துக்குடியில் இரண் டாவது தெர்மல் யூனிட் ஆரம்பிக் கும் வேலைகள் நடக்கின்றன. நெய்வேலியில் இரண்டாவது சுரங்கம் வெட்டும் வேலை நடக் கிறது. கல்பாக்கம் அணு மின் நிலையம் செயல்பட்டால் பலன் மிக அதிகம். கடல் நீரைக்கொண்டு மின்சார உற்பத்தி செய்வது பற்றி ஆராய்ச்சி நடக்கிறது. சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது பற்றிய திட்டத்தை இந்திய அரசுக்கு அனுப்பி இருக் கிறோம். குலசேகரப்பட்டணம், பரங்கிப்பேட்டை ஆகிய இரு இடங்கள் சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்களைச் செயல் படுத்தினால் தமிழ்நாட்டைச் பொறுத்தவரையில் மின்சார வெட்டு என்பது கனவாகிவிடும்."

ஓளி மயமான எதிர் காலம் உண்டா?

சேர்மன் சொக்கலிங்கத்தின் பேச்சில் நம்மால் சொக்கிவிட முடியவில்லை. ஏற்கெனவே வேலை செய்யும் திட்டங்களில் உள்ள கோளாறுகள் காலம் காலமாக நிவர்த்தி செய்யப்படா மலே இருக்கிறதே என்ற கவலை நம்மை வாட்டுகிறது. புதிய திட் டங்களை மேற்கொள்வதற்கு முன், இருப்பவற்றின் குறைகள் நீக்கப்பட வேண்டாமா?

மின்சார வெட்டு சென்னை நகரத்தைவிட வெளியூர்களை பயங்கரமாகப் பாதித்திருக்கிறது. கோவையில் ஜெனரேட்டர்கள் வைத்திருக்கும் தொழிற்சாலைகள் தான் வேலை செய்கின்றன; மீதி தடுமாறுகின்றன என்கிறார்கள்.

"60 சதவிகித பவர் கட் என்பது வெளியே அறிவித்தது. உண்மை யில் அதற்கு அதிகமாகவே 'பவர் கட்' அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் முதல் 80 சதவிகித பவர் கட் இருக்கும்" என்ற அச்சமூட்டும் தகவல்களையும் சிலர் சொல் கிறார்கள்.

உறங்கும் திறமைகளைத் தட்டி எழுப்பி, இந்த நெருக்கடியை மின்சார வாரியம் சமாளிக்குமா? 'பவர் கட்' பூதம் மறையுமா? ஒளி மயமான எதிர்காலம் பிறக்குமா?

ஓளி மயமான எதிர் காலம் உண்டா?
ஓளி மயமான எதிர் காலம் உண்டா?