Published:Updated:

வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!

வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!


பொக்கிஷம்
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!
"வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கமுடியலை!"
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!

நூறு வயது வரை கெட்டியான ஆயுள். ஒரு வியாதி வராது. ஆனால், நாளைக் காலையிலிருந்து வாயில் பல் துருத்திக்கொண்டு, சப்பை மூக்குடன், அவலட்சணமாக ஆகிவிடுவீர்கள். இந்த வரம் கிடைத்தால் ஒப்புக்கொள்வீர்களா?

ஒப்புக்குவேன். ஆனா, ஒரு கண்டிஷன். தோற்றம் எவ்வளவு அசிங்கமானாலும் பரவாயில்லை. ஆனா, எனக்குத் தெரியாத விஷயமே ஏறக்குறைய உலகத்தில் இல்லைனு ஆயிடணும். பரவாயில்லையா?

பத்து லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால், நீங்கள் ஆணாகிவிடுவீர்கள். இஷ்டம்தானா?

யோசிக்கவே மாட்டேன். பத்து லட்ச ரூபாய் வாங்கிக்கிட்டு ஆம்பளையா மாறிடுவேன். திடீர்னு ஆம்பளையாகிற பாக்கியம் எல்லாப் பொம்பளைங்களுக்கும் கிடைக்குமா? ரெண்டு மாசம் ஆம்பளையா இருந்து பார்த்துட்டு, அப்புறம் இன்னொரு பத்து லட்சம் வாங்கிக்கிட்டுத் திரும்பவும் பெண்ணாயிடுவேன். நீங்க ஒரு முறைதான் மாறணும்னு சொல்லலியே?

பத்து துப்பாக்கிகள். அதில் ஏதோ ஒன்றில் மட்டும் ஒரே ஒரு புல்லட். ஏதாவது ஒரு துப்பாக் கியை எடுத்து நெற்றிப் பொட்டில் வைத்து சுட்டுக்கொள்ள வேண் டும். தப்பித்தால் ஒரு கோடி ரூபாய்! ஒப்புக்கொள்வீர்களா?

வாழணும்கிற ஆசை எனக்கு ரொம்ப ஜாஸ்தி. அதனால், இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கவே மட்டேன். ஒரு கோடி என்ன, பத்துக் கோடியானாலும் சரி... என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் அதைவிட உயர் வானது!

ஒரு ஏரியில் விழுந்துவிட்டீர்கள். உங்களுக்கு நீச்சல் தெரியாது. அப்போது உங்கள் பரம வைரி அந்த வழியே வருகிறார். அவரை உதவிக்கு அழைப்பீர்களா?

முழுகுற நேரத்துல விரோதி யாவது, ஃப்ரெண்டாவது! உயிர்தாங்க முக்கியம். கண்டிப்பா அவரை உத விக்குக் கூப்பிடுவேன். அவரும் விரோ தம் பார்க்காம வந்து என்னைக் காப் பாத்தினா, நிச்சயம் அவர் கால்லே சாஷ்டாங்கமா விழுவேன்.

இந்தத் திறமை நமக்கு இல்லையே என்று எதைப் பற்றியாவது ஏங்குவது உண்டா?

முட்டாள்தனமா யாராவது என்கிட்டே பேசினா, வாயை வெச் சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை. சட்டுனு மனசுல இருக்கிறதைச் சொல்லிடறேன். இதனால் நிறைய நஷ்டம்தான் எனக்கு. அதனால கப்சிப்னு வாயை மூடிக்கிட்டிருக்கிற திறமைதான் வேணும் எனக்கு

வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை!
தொகுப்பு: ரவிபிரகாஷ்