Published:Updated:

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காலப்பெட்டகம்

அவசரநிலைப் பிரகடனம் (எமர்ஜென்ஸி) செய்யப்பட்டது இந்த ஆண்டுதான்!

பிறந்த நாளன்று...

காலப்பெட்டகம்

முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு வந்தவர்களுக்கு, 'கலைஞர் ஆண்டு' என்ற காலண்டரை இலவசமாகக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். வீட்டின் ஒரு புறத்தில் கழக வெளி யீடுகளும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. திடீரென்று ஒரு ஏழு வயதுச் சிறுவன், இலவசமாகக் காலண்டர் தந்தவர்களைக் கண்டிப் புடன் தடுத்து, "கழக வெளியீடு ஒன்றை வாங்கினால், காலண்டர் இலவசமாகக் கொடுங்கள்" என்று சாமர்த்தியமாகக் கூறினான். அதன் படி, கழக வெளியீடு வாங்கியவர் களுக்குத்தான் காலண்டர் இலவச மாகத் தரப்பட்டது. அந்தச் சிறுவன் - முரசொலி மாறனின் மகன்.

பெருந்தலைவர் காமராஜர் மறைந்தார். அவரது மறைவு குறித்து 12.10.75 இதழில் நீண்ட தலையங்கம் தீட்டிய ஆனந்த விகடன், அதற்கு அடுத்த இதழில் காமராஜரின் கடைசி நாள் பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள்...

கர்ம வீரரின் கடைசி நாள்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காமராஜ் வாழ்ந்தது தியாக ராய நகர் திருமலைப் பிள்ளை ரோடு, 8-ம் நம்பர் வீடு. அக்டோபர் 7, செவ்வாய்க்கிழமை. வீடு முழு வதும் கழுவி விடப்பட்டிருக்கிறது. உள்ளே, மறைந்த தலைவரின் சகோதரி அழுகுரல் கேட்கிறது.

காமராஜ் உயிர் பிரிந்த சிறிய அறை. வழக்கமாகக் காமராஜ் அமர்ந்து உரையாடும் கட்டில் காலியாகக் கிடக்கிறது. தொலைபேசி, மின்சார மணி, தேய்ந்த இரண்டு ஜோடி பாத அணிகள் கண்களில் படுகின்றன. மகாத்மாவுடன், நேருஜியுடன், சத்தியமூர்த்தியுடன், படேலுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் அறையில் காட்சி தருகின்றன. குத்துவிளக்கு ஒன்று எரிய, தாயார் படத்திற்குக் கீழே, மாலையிடப்பட்ட காமராஜின் புகைப்படம்...

அறை வாசலில் கதர்ச் சட்டை அணிந்த பெரியவர் ஒருவர் தேம்புகிறார்: "கல்விச் செல்வத் தைத்தானே ஐயா, நீ பெரிசா நினைச்சே..! அதை நிறைவேத்திட் டேன் ஐயா நான்! மூணு பிள்ளை களில் ஒருத்தனை அட்வகேட் ஆக்கினேன்; ஒருத்தனை டாக்டர் ஆக்கினேன்..." - மூன்றாவது மகனைப் பற்றி அவர் சொல்வதற்குள் துக்கம் தொண்டையை அடைக்க விம்மி அழுகிறார். அழுதபடியே வெளியேறுகிறார்.

அக்டோபர் 2-ந் தேதி பிற்பகல் மூன்று மணி சுமாருக்கு ஓடி வந்து அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவர், டாக்டர் சௌரிராஜன். கண்கலங்க அவர் கூறினார்:

"கட்டிலில், இடதுபுறம் திரும்பி இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்தபடி, கால்களை மடக்கியவாறு காமராஜ் படுத்தி ருந்தார். வழக்கமான அவருடைய குறட்டை ஒலி கேட்காததைக் கண்டு, சந்தேகத்தால் உள்ளம் திடுக்கிட்டது. இரண்டு முறை அவர் தோளை அசைத்து எழுப்பி னேன்; பதில் இல்லை. 'பல்ஸ்' பார்க்கலாம் என்று ஒரு கையை எடுத்தேன். 'சில்' என்று இருந்தது. 'பெரியவர் போய்விட்டாரே' என்று என்னையும் அறியாமல் கதறிய நான், ரத்த அழுத்தக் கருவியையும், ஸ்டெதாஸ்கோப்பையும் தூக்கி விசிறி அடித்தேன். கீழே விழுந்து புரண்டேன்..."

அதற்குள் டாக்டர் ஜெயராமன் வந்துவிட்டார். இதயத்திற்கு நேரிடையாக 'ஊசி மருந்து' செலுத்த முயன்றார். பயனில்லை. டாக்டர் அண்ணாமலையும் மறு விநாடி அறையில் நுழைந்தார். 2-45-லிருந்து 3 மணிக்குள் எல்லாம் முடிந்துவிட்டிருக்கிறது. 2-50க்கு காமராஜ் உயிர் பிரிந்திருக்கலாம் என்று கருதுகிறார் டாக்டர் சௌரிராஜன்.

அன்று காமராஜ் கடைசியாக சாப்பிட்ட உணவு - பாவக்காய் கறி, முளைக்கீரை மசியல், பருப்புத் துவையல், மோர் சாதம். வைரவன் பரிமாறியிருக்கிறார். "ரொம்பத் திருப்தியுடன், சற்று கூடவே சாப் பிட்டார். வயிறு சரியாக இருந்தால் அப்படி சாப்பிடுவது உண்டு" என்றார் வைரவன்.

சாப்பிட்ட பிறகு 'பாத்ரூம்' சென்றுவிட்டு வந்து, தன் அறை யில் படுத்துவிட்டார் காமராஜ். அவர் மணி அடித்தால்தான் உள்ளே நுழையவேண்டும். 2 மணிக்கு மணி அடித்திருக்கிறார். டாக்டர் சௌரிராஜனுக்கு டெலி போன் கனெக்ஷன் தரும்படி கேட்டிருக்கிறார்.

காலப்பெட்டகம்

டாக்டரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், டாக்டர் ஜெயராமனை டெலிபோனில் அழைத்து, காமராஜுடன் பேச வைத்திருக்கிறார்கள். "மூச்சுத் திணறுகிறதா? மார்பில் வலி இருக் கிறதா?" என்றெல்லாம் டாக்டர் ஜெயராமன் கேட்டிருக்கிறார்.

"அதெல்லாமில்லை. ரொம்ப வியர்த்துக்கிட்டிருக்கு. அவ்வளவு தான்" என்று சொல்லியிருக்கிறார் காமராஜ். உடனே புறப்பட்டு வருவதாகக் கூறியிருக்கிறார் டாக்டர் ஜெயராமன்.

காமராஜ் மீண்டும் 'பெல்' அடித்து, "வரும்போது பிளட் ப்ரஷர் பார்க்கிறதையும் ஜெய ராமனை எடுத்துக்கொண்டு வரச் சொல்லு. டாக்டர் வந்தால் எழுப்பு. விளக்கை அணைத்துவிட்டுப் போ!" என்றார்.

அதுதான் அவர் கடைசியாகப் பேசிய வார்த்தை!

- ராவ்

டாக்டர் ராதாகிருஷ்ணன் மறைந்தது இந்த ஆண்டுதான்! அப்போது 'மாமேதைகள் மறை வதில்லை' என்னும் தலைப்பில் விகடன் தீட்டிய தலையங்கத்தின் கடைசி வரிகள் இவை...

'டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் பயனுள்ள வாழ்வு நாட்டின் எல்லைகளைக் கடந்து, மனித குலத்திற்கே நம்பிக்கை ஒளி வழங்கும் சுடர் விளக்காகும். மனித உள்ளத்தில் உயர் லட்சியங்கள் கொழுந்துவிட்டு எரியும்வரை இந்தச் சுடர் மங்காது; மறையாது!'

'வங்காளத்தின் தந்தை' எனப் போற்றப்பட்ட முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். ராணுவத்தினர் முஜிபுரின் வீட் டுக்குள் புகுந்து, மொத்தம் 18 நபர்களைக் கொன்று குவித்து, அவரது சந்ததியையே பூண்டோடு அழித்துவிட்டார்கள். இந்தப் படு பாதகச் செயலைக் கண்டித்துத் தலையங்கம் தீட்டியுள்ளது விகடன்.

காலப்பெட்டகம்

சென்னையின் அடையாளங் களில் ஒன்றான பதினான்கு மாடி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பற்றி எரிந்தது. அது பற்றி விகடன் வெளியிட்ட கட்டுரையிலிருந்து...

பதினான்கு மாடிக் கட்டடம் எரிந்தபோது...

காலப்பெட்டகம்

"இரண்டு மூன்று ஆண்டு களுக்கு முன்பு, மவுன்ட் ரோடில் உள்ள புகைப்பட நிறுவனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. அருகிலி ருந்த எல்.ஐ.சி. கட்டடத்திலிருந்து தண்ணீர் எடுக்க தீயணைக்கும் படையினர் அனுமதி கேட்டபோது, 'எங்களுக்கே தண்ணீர் போத வில்லை' என்று தண்ணீர் தர மறுத்துவிட்டனர். இப்போது எல்.ஐ.சி. கட்டடம் பற்றி எரிந்து விட்டது. அதுவும் தண்ணீர் கிடைக்காத காலத்தில்..."

- நிருபர்கள் காதில் விழுந்த பல தகவல்களில் இதுவும் ஒன்று. நிருபர் கண்களில்பட்ட காட்சிகளும் பல. 22 மணி நேரம் எரிந்து, அழகான உடல் போய், எலும்புக் கூடு போல நிற்கும் 14 மாடிக் கட்டடத் தைக் கண்டு கண்கலங்கி அழுத பெண்மணிகள் சிலரையும் அவர்கள் பார்த்தார்கள்.

எம்.சி.டி. சிதம்பரம் ஆசையுடன் கட்டிய பல மாடிக் கட்டடம் இது. முக்கால்வாசி கட்டிய நிலையில், சிங்கப்பூரில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்தார் அவர். ஒரு வாலிபர், மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட பிறகு, கடைசி மாடிக்குப் பொதுமக்களை அனுமதிப்பது நிறுத்தப்பட்டது. பங்களாதேஷ் யுத்தத்தின்போது மொட்டை மாடியை போலீசார் பயன்படுத்தி னார்கள். போலீஸ் கண்ட்ரோல் அறையே அங்கிருந்தது. விமான எதிர்ப்பு பீரங்கியும் இருந்ததாம். நகரெங்கும் இரவில், இருட்டடிப்பு அறிவித்த நேரத்தில், எந்தப் பகுதி யில் விளக்கு எரிகிறது என்பதை மொட்டை மாடியிலிருந்து அதிகாரி கள் பார்ப்பது அன்று வழக்கம்.

தீயை அணைப்பதற்காகக் கடும் போராட்டம் நடந்தது உண்மைதான். தீ அணைக்கும் படையின் தண் ணீர் 'டாங்கு'களில் பாதி அளவு தண்ணீரே நிரப்பமுடிந்தது என்றும், அதனால் முழுச் சக்தியுடன் தண் ணீரைப் பீய்ச்சி அடிக்க முடிய வில்லை என்றும் ஓர் அதிகாரி வருத்தத்துடன் கூறினார். 70 அடிக்கு மேல் தண்ணீர் ஏறவில்லை. "கட்டடத்தின் இருபுறத்திலும் ஒரே சமயத்தில் தண்ணீர் வேகமாகப் பீய்ச்சி அடித்தால்தான், தீ அணை யும். அது முடியாமல் போனதால், ஒரு கட்டத்தில், தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு நெருப்பு 'எஸ்கேப்' ஆகி, அடுத்த மாடியையும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருந்தது" என்று அதிகாரி விவரித்தார்.

எல்.ஐ.சி-யை அழகுபடுத்திய கண்ணாடிகள் உருத் தெரியாமல் உருகி, நெருப்புப் பந்தாகக் கீழே விழுந்தன. ஜன்னலின் அலுமினி யச் சட்டங்கள் உருகின. அதோடு ஒட்டியிருந்த ரப்பர்கள் தகதக வென்று எரிந்தன. இரண்டாம் நாளன்று பிற்பகல் 12 மணி சுமாருக்கு தீ அணையும் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால், 2 மணிக்கு மேல்தான் 11-வது மாடி யும், 12-வது மாடியும் எரிந்தன. 12-வது மாடியில், போர்டு மீட்டிங் நடப்பதற்கான விலை உயர்ந்த 'ஓவல்' டைப் மேசையும், நாற்காலி களும், நூலகமும் இருந்தன. விருந்தின் கடைசியில் பரிமாறும் பாயசத்தை ருசித்துச் சாப்பிடுவது போல, தீ தனது நாக்குகளை வெளியே படரவிட்டு, 12-வது மாடியை எரித்தது.

பரபரப்பான உச்ச கட்டம் மாலை நாலே முக்கால் மணிக்கு நடந்தது. 'ஏர்கண்டிஷன்' யந்திரம் ஒன்று நெருப்புப் பந்தாக உச்சியி லிருந்து கீழே விழுந்தது. அந்த ஓசை, கட்டடமே விழுவதைப் போன்ற பயத்தை மூட்டியது. 'விசில்' சத்தம் ஒலிக்க, உள்ளே தீயணைத்துக்கொண்டிருந்தவர்கள் பாய்ந்து வெளியே வந்தனர். கட்டடம் விழுவதைப் படம் எடுக்கப் புகைப்படக்காரர்கள் தயாராக நின்றனர். ஆனால், ஒன்றும் நடக்க வில்லை.

"கட்டடம் இடியாது" என்று நிருபர்களிடம் உறுதியாகத் தெரிவித் தார், எல்.ஐ.சி. இன்ஜினீயர், பீடே. இவருடைய அலுவலகம் ஒன்பதா வது மாடியில் இருக்கிறது. பாவம்... கட்டடம் எரியும்போது தலையில் கை வைத்தபடி இவர் பிளாட்பாரத் தில் உட்கார்ந்திருந்தார்.

1957-ல் மொரார்ஜி தேசாய் இந்தக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, "திடீர் என்று பெரிய தூண் ஒன்று முளைத்து நிற்பதுபோல இது காட்சி தருகிறது. சென்னை நகரின் தோற்றத்திற்கு இது சற்றும் ஒத்து வருவதாக எனக் குத் தோன்றவில்லை" என்று பேசினார்.

நம் நாட்டில், நம் விஞ்ஞானி களாலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோளான 'ஆர்ய பட்டா' விண்ணில் செலுத்தப்பட் டது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான்!

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து நம் தமிழ்நாட்டில் டெலிவிஷன் நிலையம் இயங்கி, நிகழ்ச்சிகளை ஒளி-ஒலிபரப்பத் தொடங்கியது.

ஆனந்த விகடனின் ஆரம்ப கால கார்ட்டூனிஸ்ட்டான 'சிவம்' காலமானார்.

காலப்பெட்டகம்

'சிவம்' அமரரானார்

விகடன் ஆசிரியர் குழுவில் கனிந்த அனுபவசாலியாகவும் விகடனில் நெடிய பாரம்பரியத்தின் விழுதாகவும் இருந்து செயலாற்றி வந்த துணை ஆசிரியர் எம்.எஸ்.சிவராமன் (சிவம்) அவர்கள் 5-11-75 அன்று அமரரானார் என்ற செய்தியை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

விகடனின் தொடக்க காலத்திலிருந்தே விகடனின் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து, தம் இறுதி மூச்சு வரை அயராது சேவை புரிந் தவர் அவர். பேராசிரியர் கல்கி அவர்கள் விகடனின் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில், ஒரு கார்ட்டூனிஸ்டாக ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். 'சிவம்' என்ற பெயரில் எண்ணற்ற அரசியல், நகைச்சுவை கார்ட்டூன்களைத் தந்து தம் திறமையால் வாசகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றார்.

அன்னாரின் பிரிவு பத்திரிகை உலகுக்கும், குறிப்பாக, விகடனுக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

காலப்பெட்டகம்
காலப்பெட்டகம்