Published:Updated:

சுறா(JAWS)

சுறா(JAWS)


பொக்கிஷம்
சுறா(JAWS)
சுறா(JAWS)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சினிமா விமர்சனம்
சுறா(JAWS)
சுறா(JAWS)
சுறா(JAWS)

மெரிக்காவில் 'கடற்கரை சீசன்' ஆரம்பித்துவிட்டால் போதும்! நீச்சலும் கும்மாளமுமாக அவர்கள் அதை அனுபவிக்கும் விதமே அலாதி. ஆனால், கடந்த சில மாதங்களாகக் கடற்கரைகளில் மட்டும் எப்போதும்போல் ஆயிரக் கணக்கில் கூடுகிறார்களே தவிர, கடலில் இறங்கி, நீச்சல் அடிப்ப தற்கு யாருக்கும் துணிவு இல்லை. பலர் கரையோரமாக நின்று, கால் களை நனைத்துக்கொண்டதோடு சரி! தண்ணீரில் சிறிது தூரத்தில் ஏதாவது மரக்கட்டை மிதந்தால்கூட, 'சுறா, சுறா' என்று ஒரே கூச்சல்!

இவ்வளவு தூரம் எல்லாரையும் கதி கலங்க அடித்திருப்பது - சுறா மீன் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, அமெரிக்காவில் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஜாஸ்' என்ற திரைப்படம். படம் பூராவும் சுறா மீன் செய்யும் அட்டகாசங்கள்தான். கடலில் குளிக்கும் சிறுவர்கள், இளம் பெண்களைத் தாக்கி வரும் அந்தச் சுறாவுக்கு ஒரு முடிவு கட்ட, மூவர் அடங்கிய படை கடலுக்குள் இறங்குகிறது. கடைசிக் காட்சியில் சுறா மீனுக்கும் அவர்களுக்கும் நடக்கும் பயங்கரச் சண்டையை யாரும் தியேட்டரில் நாற்காலியில் உட் கார்ந்தபடி பார்க்க முடியாதாம்.

இந்தப் படத்தை எடுக்க, கடலுக் குள் கூண்டுகளை இறக்கி, அதிலிருந்து உண்மையான சுறா மீன்களின் நடமாட்டங்களை முதலில் படம் பிடித்தார்கள். சுறாவின் திடீர்த் தாக்குதல்களையும், அட்டகாசங்களையும் 'க்ளோஸ் அப்'பில் படம் பிடிக்க பொம்மைச் சுறாக்கள் தேவைப்பட்டன. டிஸ்னிலாந்திலிருந்து இதற்காக நிபுணர்கள் வந்து, ப்ளாஸ்டிக்கில் 25 அடி நீளமுள்ள மூன்று சுறா மீன்களைத் தத்ரூபமாக உருவாக்கினர். ஒவ்வொன்றுக்கும் ஆன செலவு சுமார் 11 லட்சம் ரூபாய்!

'ப்ரூஸ்' என்று பெயரிடப்பட்ட அந்த பொம்மைச் சுறாக்கள் தாமாகவே வாயை அகலத் திறந்து 'பளீர்... பளீர்' என்று மூடிக்கொண் டன; கண்களை உருட்டிப் பார்த்தன; கடலில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு, வாலை வீசியவண்ணம் நீந்தின.

சுறா(JAWS)

ஏதாவது ஒரு பிஸ்டன் அல்லது கனெக்ஷன் தவறாக இயங்கினாலும் தண்ணீருக்குள் கண்டபடி சுழல ஆரம்பிக்கும் இந்த பொம்மைச் சுறாக்களைச் சமாளிப்பதே பெரும் பிரச்னையாக இருந்ததாம்!

வெளிவந்த ஒரு மாதத்திற்குள் 40 கோடி ரூபாய்க்கு மேல் சம்பா தித்துக் கொடுத்திருக்கும் 'ஜாஸ்', 'காட்ஃபாதர்' என்ற படத்தின் உலக ரிக்கார்டை (வசூல் சுமார் 110 கோடி ரூபாய்!) வெகு சீக்கிரம் ஓவர்டேக் செய்துவிடும் என்கிறார்கள்.

சுறா(JAWS)
சுறா(JAWS)
\ ரூபி