திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

விகடன் பொக்கிஷம்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
தீர்ப்பு சொல்வது என்ன?
தலையங்கம்
தலையங்கம்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கூண்டிலேற்றப்பட்ட 26 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.

இத்தனைக் கடுமையாக தீர்ப்பு அமைந்ததற்குக் காரணங்கள் மிகத் தெளிவாகவே தெரிகின்றன.

இது ஓர் அயல்நாட்டுச் சதி. இப்படுகொலை நிகழ்த்த பல்வேறு முறைகேடுகள் மூலம் நம் நாட்டில் ஊடுருவி, பலவிதங்களில் ஏமாற்றி, நம்மவர்களின் நயவஞ்சகமான துணையையும் பெற்று, தேசத் துரோகங்களைச் ஊக்கப்படுத்திச் செய்யப்பட்ட படுகொலை. இப்படிப்பட்ட சதிகளால் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையும், பெரும் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

இதையெல்லாம் எடைபோட்டு, இதுபோன்ற துரோகச் செயல் எதிர்காலத்தில் தலைதூக்க அஞ்சவேண்டும் என்ற எண்ணத்துடன் வழங்கப்பட்ட கடுமையான தீர்ப்பு இது.

இந்த தீர்ப்பின் மூலம், ராஜீவ் கொலையில் உள்நாட்டு அரசியல் தலைவர்களின் தொடர்பு ஏதும் இல்லை என்பதும் ஊர்ஜிதமாகிவிட்டது. சிறப்புப் புலனாய்வுக்குழுத் தலைவர் கார்த்திகேயனும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதனால், ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையை வைத்துக்கொண்டு தி.மு.க. மீது வீண்பழி சுமத்தி, தேவையில்லாமல் மத்திய அரசைக் கவிழ்த்து அடாவ டித்தனம் செய்த காங்கிரஸ் கட்சியின் சாயம் வெளுத்து விட்டது!

இந்தத் தேர்தல் மூலம் மக்களின் பணம் எழுநூறு கோடிக்கு மேல் வீணாகப் போகிறது. இதற்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் மீதுள்ள மக்களின் எரிச்சலும் கோபமும் இந்தத் தேர்தல் முடிவுகளில் கட்டாயம் எதிரொலிக்கும்!

 
தலையங்கம்
தலையங்கம்